சென்னை வியாசர்பாடியில் அகில இந்திய தகவல் சட்ட முன்னணி ஊடகப்பிரிவு சார்பாக இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. பொதுமக்கள் உடல்நிலை பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனைகளைப் பெற்று மருந்துகளைப் பெற்றுக் கொண்டனர்.

சென்னை வியாசர்பாடியில் அகில இந்திய தகவல் சட்ட முன்னணி ஊடகப்பிரிவு சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றது

அகில இந்திய தகவல் மற்றும் சட்ட முன்னணி ஊடகப்பிரிவு சார்பாக நிறுவனர்- அகில இந்திய தலைவர் டாக்டர். வன்னை ரவி அவர்களின் தலைமையிலும் அகில இந்திய தகவல் சட்ட முன்னணி ஊடகப்பிரிவு மாநில செயலாளர் சரவணன் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை வியாசர்பாடியில் உள்ள மக்கள் மருந்தகத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு தங்களது உடல்நிலை பரிசோதனை செய்தனர். அதன் பின்னர் அகில இந்திய சட்ட முன்னணி நிறுவன தலைவர் டாக்டர் வண்ணை ரவி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசனார்.

இலவச மருத்துவம் பெறும் வாய்ப்பு:

"பஇதனை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். அதிக விலையில் விற்க கூடிய மருந்துகளை இங்கு இலவசமாக வழங்குகின்றனர். இந்த நிகழ்ச்சியை வியாபார நோக்கத்தில் நடத்தாமல் பொது நலத்தோடு நடத்த படுகிறது" என்று தெரிவித்தார்.

மருத்துவ ஆலோசனை பெற்று மருந்துகள் வழங்க படுகிறது நிறைய நபர்கள் இங்கு வந்து சிகிச்சை பெறுகின்றனர். மாலை வரை இந்த மருத்துவ முகாம் நடக்க இருக்கிறது. அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொண்டார்.

அகில இந்திய தகவல் சட்ட முன்னணி ஊடகப் பிரிவின் மாநில செயலாளர் சரவணன் மற்றும் ஊடகப் பிரிவில் பணியாற்றும் சகோதரர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.