- Home
- Tamil Nadu News
- CBSE 10ஆம் வகுப்பு முடிவுகள் வெளியீடு.! சென்னை மண்டலத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா.?
CBSE 10ஆம் வகுப்பு முடிவுகள் வெளியீடு.! சென்னை மண்டலத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா.?
CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடிவுகள் 2025 வெளியிடப்பட்டுள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 93.66% ஆக பதிவாகியுள்ளது, இது கடந்த ஆண்டை விட சற்று அதிகம். பெண்கள் 95% தேர்ச்சி பெற்றுள்ளனர்

CBSE 10ஆம் வகுப்பு முடிவுகள் 2025 வெளியீடு
CBSE 10ஆம் வகுப்பு தேர்வு இந்த ஆண்டு பிப்ரவரி 15 முதல் மார்ச் 1, 2025 வரை நடைபெற்றன. அனைத்துத் தேர்வுகளும் ஒரே கட்டமாக காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடைபெற்றன. 12ஆம் வகுப்புத் தேர்வுகள் பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 4 வரை நடைபெற்றன.
இதனையடுத்து எப்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என மாணவர்கள் காத்திருந்தனர். அந்த வகையில் இன்று காலை 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதனையடுத்து தற்போது 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடப்பட்டுள்ளது.
10ஆம் வகுப்பு தேர்வு முடிவு- தேர்ச்சி விகிதம் என்ன.?
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) இன்று CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடிவுகள் 2025ஐ வெளியிட்டுள்ளது. லட்சக்கணக்கான மாணவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தருணம் இது. இந்த ஆண்டும் மாணவர்கள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 93.66% ஆக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டு 2024ல் பதிவான 93.60% ஐ விட 0.06% அதிகம்.
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் - எந்த இணையதளம் பாரக்க வேண்டும்.?
CBSE 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளைப் பார்க்க கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்-
CBSE 10th Result 2025 Direct Link
CBSE 10ஆம் வகுப்பு முடிவுகள் 2025ஐப் பார்க்க இணையதளங்கள் மற்றும் செயலிகள்
தேர்வெழுதிய மாணவர்கள் results.cbse.nic.in, cbse.gov.in, cbse.nic.in, results.gov.in, digilocker.gov.in மற்றும் UMANG செயலி மூலம் தங்கள் முடிவுகளைப் பார்க்கலாம். SMS மூலமும் முடிவுகளை அறியலாம்
CBSE 10ஆம் வகுப்பு முடிவுகள் எவ்வாறு பார்ப்பது.?
மாணவர்கள் முதலில் CBSEயின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
அங்கு ‘CBSE Board Result 2025 Class 10’ என்ற இணைப்பு இருக்கும்.
அதைக் கிளிக் செய்தால் ஒரு புதிய பக்கம் திறக்கும். அங்கு மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிற விவரங்களை உள்ளிட வேண்டும்.
சமர்ப்பித்தவுடன் உங்கள் முடிவுகள் திரையில் தோன்றும். அதைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..
10ஆம் வகுப்பு தேர்வில் பெண்கள் அதிகளவில் தேர்ச்சி
CBSE 10ஆம் வகுப்பு முடிவுகள் 2025: பெண்கள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர்
இந்த ஆண்டும் பெண்கள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். பெண்களின் தேர்ச்சி விகிதம் 95% ஆகவும், ஆண்களின் தேர்ச்சி விகிதம் 92.63% ஆகவும் உள்ளது. திருநங்கை மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 95% ஆக பதிவாகியுள்ளது.
CBSE 10ஆம் வகுப்பு முடிவுகள் 2025: மண்டல வாரியான முடிவுகள்
இந்த ஆண்டும் திருவனந்தபுரம் மற்றும் விஜயவாடா மண்டலங்கள் முதலிடத்தில் உள்ளன. அங்கு தேர்ச்சி விகிதம் 99.79% ஆக பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து பெங்களூரு (98.90%), சென்னை (98.71%), புனே (96.54%) மற்றும் அஜ்மீர் (95.44%) போன்ற மண்டலங்கள் உள்ளன.
டெல்லி-கிழக்கு மண்டலத்தில் மொத்தம் 2,00,129 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். அதில் 1,99,180 மாணவர்கள் தேர்வெழுதினர். 1,89,362 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இங்கு மொத்த தேர்ச்சி விகிதம் 95.07% ஆகும்.
CBSE 10ஆம் வகுப்பு முடிவுகள் 2025: மொத்த மாணவர்களின் எண்ணிக்கை
இந்த ஆண்டு மொத்தம் 23,85,079 மாணவர்கள் 10ஆம் வகுப்புத் தேர்வுக்குப் பதிவு செய்திருந்தனர். அதில் 23,71,939 மாணவர்கள் தேர்வெழுதினர். 22,21,636 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.