CBSE 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. 88.39% தேர்ச்சி விகிதம். cbse.gov.in, cbseresults.nic.in, results.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் முடிவுகளை அறியலாம்.

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியீடு : CBSE 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்காக லட்சக்கணக்கான மாணவர்களும் பெற்றோர்களும் காத்திருக்கின்றனர். தேர்வுகள் முடிவடைந்து, முடிவுகள் எப்போது வெளியாகும், எந்த இணையதளத்தில் வெளியாகும் என காத்திருந்தனர். அந்த வகையில் இன்று சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 

 சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 88.39% தேர்ச்சி விகிதம். விஜயவாடா மண்டலம் முதலிடத்திலும், திருவனந்தபுரம் மண்டலம் இரண்டாம் இடத்திலும் உள்ளன. தமிழகத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள் எண்ணிக்கை: 80,218 , தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை: 78,995 சென்னை மண்டலத்தின் தேர்ச்சி விழுக்காடு: 97.39%

நாட்டில் கடைசி இடத்தில் உள்ள மண்டலம் உத்திரபிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ்: 79.53% 

சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான cbse.gov.in cbseresults.nic.in, results.cbse.nic.in ஆகியவற்றில் முடிவுகளை அறியலாம்.

CBSE 2025 தேர்வு முடிவுகளை எப்படிப் பார்ப்பது?

கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி முடிவுகளைப் பார்க்கலாம்:

cbse.gov.in அல்லது cbseresults.nic.in தளத்திற்குச் செல்லவும்.

CBSE 10 அல்லது 12ஆம் வகுப்பு முடிவுகள் 2025 இணைப்பைக் கிளிக் செய்யவும்.

ரோல் எண், பள்ளி எண், அட்மிட் கார்டு ஐடி, பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிடவும்.

சமர்ப்பிக்க என்பதைக் கிளிக் செய்யவும்.

முடிவுகள் திரையில் தோன்றும். அதைப் பதிவிறக்கம் செய்து அச்சிடலாம்

CBSE 10, 12ஆம் வகுப்பு முடிவுகளை எங்கெல்லாம் பார்க்கலாம்?

கீழ்க்கண்ட இணையதளங்கள் மற்றும் செயலிகள் மூலம் முடிவுகளைப் பார்க்கலாம்:

cbseresults.nic.in

results.cbse.nic.in

cbse.nic.in

results.digilocker.gov.in

results.gov.in

DigiLocker செயலி

UMANG செயலி