தங்கம் விலை இன்று ஒரே நாளில் 2 முறை உயர்வு!
சென்னையில் இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை இருமுறை உயர்ந்துள்ளது. காலை ரூ.15 உயர்ந்த நிலையில், மாலையில் மேலும் ரூ.90 உயர்ந்து சவரன் ரூ.70,840 ஆக விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை இருமுறை உயர்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அதிரடியாக குறைந்திருந்த தங்கத்தின் விலை இன்று காலை மீண்டும் உயரத் தொடங்கியது.
நேற்று, தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.265 குறைந்து ரூ.8,750 ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.2,360 குறைந்து ரூ.70,000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் விலை மேலும் குறையலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால், இன்று காலை நிலவரப்படி, தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்தது. கிராம் ஒன்றுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.8,765 ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.70,120 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், மாலை நேர நிலவரப்படி தங்கம் விலை மேலும் அதிகரித்துள்ளது. சவரனுக்கு மேலும் ரூ.720 உயர்ந்து, தற்போது ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.8,855க்கும், சவரன் ரூ.70,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரே நாளில் இருமுறை தங்கம் விலை உயர்ந்திருப்பது நகை வாங்குவோருக்கும், முதலீட்டாளர்களுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விலை உயர்வுக்கு என்ன காரணம் என்பது குறித்து நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.