நேற்று குறைஞ்சது.. இன்று தாறுமாறாக உயர்வு.. இன்றைய தங்கம் விலை எவ்வளவு?
உலகப் பொருளாதார நிலவரம், அமெரிக்க வரி விதிப்புகள் மற்றும் முதலீட்டுப் பாதுகாப்புத் தேவை போன்ற காரணிகளால் தங்கத்தின் விலை சர்வதேச அளவில் ஏற்ற இறக்கம் கண்டுள்ளது. நேற்று விலை குறைந்த பின்னர், இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

Gold Rate Today
2024 மற்றும் 2025ல் உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட குழப்பங்கள், அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைகள் மற்றும் நிலையான முதலீட்டு பாதுகாப்பு தேவை போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை சர்வதேச அளவில் உயர்ந்தது. கடந்த ஆண்டு டொனால்ட் டிரம்ப் கொண்டு வந்த வரி திட்டம் கூடுதலாக இந்த உயர் நிலையை உருவாக்கியது.
நடுத்தர வர்க்கம் மீது தாக்கம்
தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால் நடுத்தர வர்க்க மக்கள் மற்றும் நகை விரும்பிகள் தங்க நகைகள் வாங்கும் போது திணறுகிறார்கள். தொடர்ந்து நடைபெறும் விலை ஏற்றம், பண்டிகை மற்றும் திருமண காலங்களில் நுகர்வோரின் பொருளாதார திட்டங்களை பாதிக்கிறது.
இன்றைய தங்கம் விலை
சமீப காலமாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்க விலையில் நேற்று (மே 12) திடீர் மாற்றம் ஏற்பட்டது. ஒரே நாளில் இரண்டு முறை தங்க விலை குறைந்தது. இதன் விளைவாக ஒரு சவரன் தங்கத்தின் விலை மட்டும் ரூ.2,360 குறைந்தது. தங்கம் விலை எதிர்பாராத வகையில் சரிந்ததால் நகை வாங்குவோர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மீண்டும் ஏற்றம் கண்ட தங்கம்
நேற்றைய அதிரடி சரிவுக்கு பிறகு இன்று (மே 13) தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.15 உயர்ந்ததால் தற்போது ஒரு கிராம் ரூ.8,765 என்றும், ஒரு சவரன் ரூ.70,120 என்றும் விற்பனை ஆகிறது. விலை ஏற்றம் எதிர்பாராத மாற்றங்களை ஏற்படுத்தியது.
வெள்ளி விலையிலும் மாற்றம்
தங்கத்தின் விலையுடன் சேர்த்து வெள்ளி விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 18 காரட் தங்கம் கிராமத்திற்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,220 என்றும், ஒரு சவரன் ரூ.57,760 என்றும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.1 குறைந்து, ரூ.109 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை தற்போது ரூ.1,09,000 ஆக உள்ளது.