இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
12:03 AM (IST) Oct 06
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய மகளிர் அணி பாகிஸ்தானை பந்தாடி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கிராந்தி கவுட் 3 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார்.
11:54 PM (IST) Oct 05
Bigg Boss Tamil Season 9 Aghori Kalaiyarasan : பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் 20ஆவது போட்டியாளராக அகோரி கலையரசன் பங்கேற்றுள்ளார்.
11:02 PM (IST) Oct 05
Bigg Boss Tamil Season 9 : பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் தொடக்க விழா தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பிரபலங்கள் பலரும் ஒவ்வொருவராக வீட்டிற்குள் எண்ட்ரி கொடுத்து வருகின்றனர்.
09:44 PM (IST) Oct 05
பாமகவில் தந்தை-மகன் உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருதயப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
09:38 PM (IST) Oct 05
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி வெற்றிகரமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், போட்டியாளர்களாக வாட்டர்மெலன் ஸ்டார், விஜே பார்வதி, கனி, சபரி என்று பிரபலங்கள் பங்கேற்று வரும் நிலையில் அடுத்த போட்டியாளர்கள் பற்றி பார்க்கலாம்.
08:56 PM (IST) Oct 05
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் விஜே பார்வதி, துஷார் மற்றும் கனி திரு ஆகிய 3 போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
08:53 PM (IST) Oct 05
கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர், டிரெட்மில்லில் உடற்பயிற்சி செய்தபோது தவறி விழுந்து காயமடைந்தது குறித்து பகிர்ந்துள்ளார். அதேசமயம், சபரிமலை விவகாரத்தில் ஆளும் சிபிஎம் கட்சி இந்து நம்பிக்கைகளுக்குத் துரோகம் செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
08:18 PM (IST) Oct 05
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகிகள், தொண்டர்களுடன் திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
07:52 PM (IST) Oct 05
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் சேவை இனி வாரத்தின் 7 நாட்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
07:24 PM (IST) Oct 05
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக வாட்டர்மெலன் ஸ்டார் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தார்.
07:04 PM (IST) Oct 05
உத்தரப் பிரதேசம் பாலியா மாவட்டத்தில், மதுபோதையில் இருந்த தந்தை ஒருவர் தனது ஓராண்டு மகனைக் கத்தியால் குத்திக் கொன்றுள்ளார். குடும்பத் தகராறு காரணமாக மனைவி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
06:50 PM (IST) Oct 05
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. இதில் சீசன் 9 லோகோ கொண்ட உடையில் விஜய் சேதுபதி தொடக்க விழாவில் பங்கேற்றார்.
06:25 PM (IST) Oct 05
WhatsApp Username வாட்ஸ்அப் விரைவில் Username அம்சத்தை வெளியிடுகிறது. மொபைல் எண் தேவையில்லை; தனியுரிமைக்கு உதவும் புதிய வசதி! பீட்டா பதிப்பில் சோதனை ஆரம்பம்!
06:16 PM (IST) Oct 05
Flipkart Big Festive Dhamaka பிளிப்கார்ட் Festive Dhamaka விற்பனை அக்டோபர் 4 முதல் 8 வரை நடக்கிறது. iPhone 16, சாம்சங் போன்களுக்கு பெரும் தள்ளுபடி. HDFC கார்டுகளுக்கு 10% உடனடி தள்ளுபடி உண்டு!
06:08 PM (IST) Oct 05
Samsung Galaxy சாம்சங் Galaxy A07, F07, M07 4G மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்! Helio G99 சிப்செட், 50MP கேமரா, 5000mAh பேட்டரி. விலை ₹6,999-ல் இருந்து ஆரம்பம்!
05:55 PM (IST) Oct 05
80s Stars Reunion: 1980கள் மற்றும் 90களில் திரையுலகை கலக்கிய, நடிகர் - நடிகைகள் இந்த ஆண்டு சென்னையில் ரீ யூனியன் கொண்டாடிய போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.
05:34 PM (IST) Oct 05
This Week Rasi Palan: அக்டோபர் 06 முதல் அக்டோபர் 12 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் துலாம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வாராந்திர ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
05:29 PM (IST) Oct 05
நடிகை பிரியங்கா மோகன் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டபோது, கூட்ட நெரிசலில் சிக்கிய இவரை ரசிகர்கள் நசுக்கி தள்ளிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
05:21 PM (IST) Oct 05
ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தயத்தில், நடிகர் அஜித்குமார் குழு 3வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்ததோடு, SDAT லோகோவை பயன்படுத்தியதற்கு நன்றியும் கூறியுள்ளார்.
05:17 PM (IST) Oct 05
தவெக தலைவர் விஜய்யை தொடர்ந்து ஒருமையில் பேசி வரும் நக்கீரன் கோபாலுக்கு பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். விஜய்க்கு எதிராக யார் பேசினாலும் அவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
04:57 PM (IST) Oct 05
This Week Rasi Palan: அக்டோபர் 06 முதல் அக்டோபர் 12 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வாராந்திர ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:55 PM (IST) Oct 05
Bigg Boss Tamil Season 9 Probable Contestant List : விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் உத்தேச போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
04:33 PM (IST) Oct 05
This Week Rasi Palan: அக்டோபர் 06 முதல் அக்டோபர் 12 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் தனுசு ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வாராந்திர ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:19 PM (IST) Oct 05
தமிழக பாஜக தலைவர் வினோஜ் பி. செல்வம், நடிகர் ரஜினிகாந்தின் ஆன்மீகப் பயணத்தையும் எளிமையையும் பாராட்டியுள்ளார். இந்து மதத்தை மற்ற நடிகர்கள் கேலி செய்வதாகக் கூறி, ரஜினிகாந்த் சனாதன தர்மத்தைப் பின்பற்றுவதாக அவர் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
04:08 PM (IST) Oct 05
தமிழ்நாட்டில் தென்காசி முதல் சிவகங்கை வரை கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
03:56 PM (IST) Oct 05
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ஒளிபரப்பை அரசு கேபிளில் திமுக அரசு முடக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஊடகங்களை தனது ஊதுகுழலாகச் செயல்பட வைக்க முதல்வர் ஸ்டாலின் முயற்சிப்பதாக பாஜகவின் அண்ணாமலை இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
03:54 PM (IST) Oct 05
Tecno Pova Slim Review டெக்னோ போவா ஸ்லிம் முழு விமர்சனம்! 5.95மிமீ மெல்லிய வடிவமைப்பு, 144Hz அமோலெட் டிஸ்பிளே, 45W சார்ஜிங்! கேமிங்கில் சூடாகிறதா? முழு விபரம்!
03:49 PM (IST) Oct 05
This Week Rasi Palan: அக்டோபர் 06 முதல் அக்டோபர் 12 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் மகர ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வாராந்திர ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
03:41 PM (IST) Oct 05
வள்ளலாரின் பிறந்தநாள் விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி கூறும் 'தமிழ்நாடு போராடும்' என்ற முழக்கத்தை சுட்டிக்காட்டி, 'தமிழ்நாடு யாருடன் போராடும்?' என்று கேள்வி எழுப்பினார்.
03:34 PM (IST) Oct 05
India Mobile Congress 2025 இந்தியா மொபைல் காங்கிரஸ் 2025 டெல்லியில் அக்டோபர் 8 முதல் 11 வரை நடைபெறுகிறது. 6G, செயற்கை நுண்ணறிவு, ஸ்பெக்ட்ரம் குறித்து 7000க்கும் மேற்பட்டோர் விவாதிக்கின்றனர்.
03:24 PM (IST) Oct 05
District Court Job திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் (PLV) வேலைவாய்ப்பு. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். தினமும் ₹750 ஊதியம். அக்டோபர் 14 வரை விண்ணப்பிக்கலாம்.
03:21 PM (IST) Oct 05
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியானது இன்று மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் நிலையில் புரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
03:14 PM (IST) Oct 05
NLC India Recruitment 2025 என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் ட்ரேடு மற்றும் கிராஜுவேட் அப்ரண்டிஸ் பிரிவில் 1101 காலியிடங்கள் அறிவிப்பு. தேர்வு இல்லை; மெரிட் பட்டியல் மூலம் தேர்வு. விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.10.2025.
03:11 PM (IST) Oct 05
This Week Rasi Palan: அக்டோபர் 06 முதல் அக்டோபர் 12 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் கும்ப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வாராந்திர ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
03:01 PM (IST) Oct 05
கோல்ட்ரிப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். வடமாநிலத்தில் குழந்தைகள் பலியானதாக கூறப்படும் நிலையில், அது குறிது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
02:51 PM (IST) Oct 05
டொமினிக் அருண் இயக்கத்தில், கல்யாணி பிரியதர்ஷன் நடித்த ‘லோகா சாப்டர் 1 சந்திரா’ திரைப்படம் மலையாள சினிமாவில் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இது பாக்ஸ் ஆபிசில் பெரிய மைல்கல்லை எட்ட உள்ளது.
02:47 PM (IST) Oct 05
This Week Rasi Palan: அக்டோபர் 06 முதல் அக்டோபர் 12 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் மீன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வாராந்திர ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
02:45 PM (IST) Oct 05
சீமானுக்கு இளைஞர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு இருந்ததற்கு முக்கிய காரணம் அவர் திராவிட கட்சிகளுக்கு எதிராக எடுத்த மாற்று அரசியல் தான். தமிழ் தேசிய அரசியலை தீவிரமாக பேசி வந்த சீமான், அண்மை காலமாக அதில் இருந்து பின்வாங்கி வருவது கண்கூடாக தெரிகிறது
01:58 PM (IST) Oct 05
கடந்த 7 ஆண்டுகளில் இந்தியர்களின் சராசரி மாதச் சம்பளம் அதிகரித்துள்ளது என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
01:54 PM (IST) Oct 05
Zodiac signs who love their mother unconditionally: ஜோதிடத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்கள் தங்கள் தாய் மீது மிகுந்த அன்பும், பாசமும் கொண்டிருப்பார்களாம். அந்த ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.