Published : Nov 01, 2025, 06:49 AM ISTUpdated : Nov 01, 2025, 09:39 PM IST

Tamil News Live today 01 November 2025: கோலியின் ஜெர்சியுடன் களமிறங்கிய ரிஷப் பந்த்.. இணையத்தில் வைரல்..!

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், அதிமுக, செங்கோட்டையன், முதல்வர் ஸ்டாலின், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

Rishabh Pant

09:39 PM (IST) Nov 01

கோலியின் ஜெர்சியுடன் களமிறங்கிய ரிஷப் பந்த்.. இணையத்தில் வைரல்..!

காயத்தில் இருந்து மீண்ட ரிஷப் பந்த் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பியுள்ளார். இந்தியா ஏ அணிக்காக விளையாடியபோது விராட் கோலியின் 18 ஆம் நம்பர் ஜெர்சியை அணிந்ததால் சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது. 

 

Read Full Story

09:29 PM (IST) Nov 01

குறைந்த தர வீடியோக்களுக்கு குட்பை! SD-யை HD-ஆக மாற்ற YouTube-இன் AI சூப்பர் சக்தி!

YouTube AI YouTube தளத்தில் SD வீடியோக்களைத் தானாகவே HD தரத்திற்கு மாற்றும் சக்திவாய்ந்த AI அம்சம் அறிமுகம். இது கிரியேட்டர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் ஒரு வரப்பிரசாதம்! இனி 4K தர வீடியோக்களையும் எதிர்பார்க்கலாம். Thumbnail அளவு 50MB ஆக உயர்வு.

Read Full Story

08:53 PM (IST) Nov 01

மகளிர் உலகக் கோப்பையை வென்றால் இந்திய வீராங்கனைகளுக்கு பிசிசிஐ வழங்கும் மெகா பரிசு

கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய ஆண்கள் அணிக்கு பிசிசிஐ ரூ.125 கோடி பரிசு வழங்கிய நிலையில் மகளிர் அணிக்கும் அதே தொகை வழங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

Read Full Story

08:45 PM (IST) Nov 01

கொடநாடு வழக்கில் A1..! எடப்பாடிய புடிச்சு ஜெயில்ல போடுங்க தம்பி - திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி

தமிழகத்தில் தற்போது திமுக ஆட்சி தானே நடைபெறுகிறது கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமி தான் ஏ1 குற்றவாளி என்றால் அவரை சிறையில் அடைக்க வேண்டியது தானே என அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Read Full Story

07:47 PM (IST) Nov 01

சவுக்கு சங்கரை கட்டம் கட்டிய தமிழக அரசு.. தேர்தல் வரைக்கும் வெளியவே வரமுடியாதாம்..

தன்னை கைது செய்ய காவல்துறை தீவிரம் காட்டி வருவதாகவும், அப்படி கைது செய்யப்பட்டால் தேர்தல் முடிவடையும் வரை வெளியில் வரமுடியாத அளவிற்கு சதி செய்யப்படுவதாக யூடியூபர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.

Read Full Story

07:46 PM (IST) Nov 01

ஆப்பிள் வெறியர்களுக்கு அடுத்த ஷாக்! iPhone 16 விலை இவ்வளவு கம்மியா? - Amazon Offer!

iPhone 16 ஐபோன் 16 விலை ரூ. 51,000-க்கும் குறைவாகக் கிடைக்கிறது. அமேசான் தளத்தில் வங்கி சலுகைகள், கேஷ்பேக் மற்றும் எக்ஸ்சேஞ்ச் மூலம் இந்த A18 சிப் போனைக் குறைந்த விலையில் வாங்கலாம்.

Read Full Story

07:41 PM (IST) Nov 01

₹25,000 தள்ளுபடி + ₹41,400 எக்ஸ்சேஞ்ச் - Pixel 9-ஐ மிகக் குறைந்த விலையில் பெறுவது எப்படி? முழு விவரம்!

Google Pixel 9 கூகுள் பிக்சல் 9 மீது அதிரடி விலை குறைப்பு! ஃபிளிப்கார்ட்டில் ரூ. 25,000 வரை தள்ளுபடி. Gemini AI, Tensor G4 கொண்ட ஃபிளாக்ஷிப் போனை ரூ. 54,999-க்கு வாங்குங்கள்.

Read Full Story

07:36 PM (IST) Nov 01

இந்திய விண்வெளித் துறையில் புதிய சகாப்தம் - இஸ்ரோவின் பிரம்மாண்ட CMS-03 செயற்கைக்கோள்!

ISRO இஸ்ரோவின் மிக அதிக எடை கொண்ட CMS-03 தகவல் தொடர்பு செயற்கைக்கோள் (4,400 கிலோ) LVM3 ராக்கெட் மூலம் நவம்பர் 2 அன்று விண்ணில் ஏவப்படுகிறது. இது இந்திய விண்வெளிச் சக்திக்கு ஒரு புதிய சகாப்தம்.

Read Full Story

07:31 PM (IST) Nov 01

அரசு எச்சரிக்கை - Google Chrome மற்றும் GitLab-ல் பயங்கர பாதுகாப்பு ஓட்டைகள்! உடனே அப்டேட் செய்யுங்கள்!

Google Chrome and GitLab கூகுள் Chrome மற்றும் GitLab-ல் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து Cert-In தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது. தகவல் திருட்டு மற்றும் ஹேக்கிங்கைத் தடுக்க, உடனே உங்கள் மென்பொருளை அப்டேட் செய்யவும்.

Read Full Story

07:00 PM (IST) Nov 01

₹1 லட்சம் கொடுத்தாலும் பாதுகாப்பு இல்லையா? Android-ஐ விட iPhone-க்கு 58% கூடுதல் ஆபத்து! லேட்டஸ்ட் ஆய்வில் ஷாக்!

iPhone Vs Android Google மற்றும் YouGov நடத்திய ஆய்வில், Android-ஐ விட iPhone பயனர்கள் 58% அதிக மோசடி மற்றும் ஸ்பேம் மெசேஜ்களுக்கு ஆளாகிறார்கள் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Read Full Story

06:30 PM (IST) Nov 01

இபிஸ் - செங்ஸ் சமாதானம் செய்துவிட்டேன்..! நோபல் பரிசு கொடுங்க.. இணையத்தை கலக்கும் டிரம்ப் மீம்ஸ்

அஇஅதிமுக.வில் தலைமையுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக முன்னாள் அமைச்சரும், மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், இது தொடர்பான மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Read Full Story

05:09 PM (IST) Nov 01

Hibiscus Hair Pack - முடி அடர்த்தியாக, நீளமாக வளர! வாரம் '1' முறை செம்பருத்தி பூவை இப்படி யூஸ் பண்ணுங்க

உங்கள் தலை முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர செம்பருத்தியில் இப்படி ஹேர் பேக் போடுங்கள்.

Read Full Story

04:50 PM (IST) Nov 01

Vastu Tips - பணத் தட்டுப்பாடா? வீட்டில் இந்த வாஸ்து மாற்றங்களை செய்ங்க.. பண மழை கொட்டும்

எவ்வளவு கடினமாக உழைத்து பணம் சம்பாதித்தாலும், வீட்டில் பணம் தங்குவதில்லை என்று பலர் புலம்புகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்கள் வீட்டில் சில வாஸ்து மாற்றங்களை மட்டும் செய்தால் போதும். பண பிரச்சினையிலிருந்து விடுபடலாம். 

Read Full Story

04:41 PM (IST) Nov 01

அரசின் தோல்வி.. ரூ.80 கோடிக்காக ஆசிரியர்களை கையேந்த வைப்பதா..? அன்புமணி ஆவேசம்

பள்ளிகளுக்கு ரூ.80 கோடி நன்கொடை வசூலித்துத் தரும்படி கல்வித்துறை அதிகாரிகளை கட்டாயப்படுத்துவதா? என்று கேள்வி எழுப்பி உள்ள பாமக தலைவர் அன்புமணி, புனிதப்பணி செய்யும் ஆசிரியர்களை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

Read Full Story

04:16 PM (IST) Nov 01

மகளிர் உலகக்கோப்பையை முத்தமிடப்போவது யார்..? SAக்கு எதிராக மாஸ் ரெகார்ட் வைத்திருக்கும் இந்தியா..

மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையே நாளை நவி மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெற உள்ளது. அதற்கு முன், இரு அணிகளின் நேருக்கு நேர் சாதனைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

Read Full Story

04:06 PM (IST) Nov 01

Oral Hygiene Tips - சிகரெட் பழக்கம் இருக்கா? அப்ப இந்த விஷயங்களை கண்டிப்பா ஃபாலோ பண்ணனும்

புகைப்பிடிப்பவர்களுக்கு வாய்வழி சுகாதாரம் ரொம்வே முக்கியம். எனவே அதை மேம்படுத்துவதற்கான சில வழிகள் உள்ளன. அவை என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.

Read Full Story

03:45 PM (IST) Nov 01

நிர்வாக திறனும் இல்லை, விழிப்புணர்வும் இல்லை.. நாசமான நெல்மணிகளால் கொந்தளிக்கும் விஜய்

TVK Vijay, DMK Government: நாசமான நெல்மணிகளுக்கு காரணம் இயற்கை அல்ல, நயவஞ்சக திமுக அரசின் ஊழல் மட்டுமே என தமிழக வெற்றி கழகம் பகிரங்க குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளது.

Read Full Story

03:42 PM (IST) Nov 01

அப்படியே அப்பாவை ஜெராக்ஸ் எடுத்தமாதிரி இருக்கான்... ஜூனியர் மாதம்பட்டியின் போட்டோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், அக்குழந்தையின் புகைப்படத்தை பதிவிட்டு, அவன் பார்ப்பதற்கு அவனுடைய அப்பா போலவே இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Read Full Story

03:38 PM (IST) Nov 01

Vastu Tips - சமீபத்துல இந்த விஷயங்களை பார்த்தீங்களா? அப்போ உங்களுக்கு இனி நல்ல காலம்தான்; பணவரவு உறுதி

இங்கு சொல்லப்பட்டுள்ள விஷயங்களை நீங்கள் பார்த்தால் வாழ்வில் நல்ல காலம் தொடங்கப் போகிறது என வாஸ்துசாஸ்திரம் சொல்கிறது.

Read Full Story

03:32 PM (IST) Nov 01

கருணாநிதி, ஸ்டாலின் புகைப்படங்களோடு நிகழச்சியில் கலந்து கொண்டவர் செங்கோட்டையன்- பதிலடி கொடுத்த எடப்பாடி

செங்கோட்டையன் திமுகவின் பி டீம் என கடுமையாக எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார். கட்சி பொதுக்குழு தீர்மானத்திற்கு எதிராக செயல்பட்டதாலும், திமுக அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றதாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இபிஎஸ் விளக்கமளித்தார். 

Read Full Story

02:52 PM (IST) Nov 01

50 செகண்டுக்கு 5 கோடி..! அதிர வைக்கும் நயன்தாராவின் ஃபீஸ்

தென்னிந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வரும் நயன்தாரா, ஒரு 50 விநாடி ஓடக்கூடிய விளம்பரத்தில் நடிக்க 5 கோடி சம்பளம் வாங்கி அதிர வைத்திருக்கிறார்.

Read Full Story

02:01 PM (IST) Nov 01

என்னது டபுள் எவிக்‌ஷனா? பிக் பாஸில் இருந்து இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் தெரியுமா?

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி ஒரு மாதம் ஆகப்போகிறது. இந்த நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளர் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story

01:47 PM (IST) Nov 01

செங்கோட்டையனை இபிஎஸ் நீக்கியது கொள்ளிக்கட்டையால் தலையை சொரிவதற்கு சமம்! மாஸ் என்ட்ரி கொடுத்த டிடிவி!

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், செங்கோட்டையனை நீக்கியதற்காக எடப்பாடி பழனிசாமியை கடுமையாக சாடினார். பழனிசாமியை துரோகத்தின் உருவம் என்றும் ஹிட்லர் போன்றவர் என்றும் விமர்சித்த அவர், தென் தமிழ்நாட்டில் இபிஎஸ் பெரிய தோல்வியை சந்திப்பார்.

Read Full Story

01:32 PM (IST) Nov 01

மணல் ஊழல் பற்றி விசாரிக்க திமுக அரசு அஞ்சுவது ஏன்? பெருந்தலைகள் உருளும் என அச்சமா? அன்புமணி

பாமக தலைவர் அன்புமணி, தமிழகத்தில் ரூ.4,730 கோடி மதிப்பிலான மணல் கொள்ளை குறித்து அமலாக்கத்துறை அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய திமுக அரசு மறுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். 

Read Full Story

01:31 PM (IST) Nov 01

பனையூரில் தவெக வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டம்... ஆப்சென்ட் ஆன விஜய்..!

தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் அணியின் ஆலோசனைக் கூட்டம் பனையூர் அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் கலந்துகொள்ளவில்லை.

Read Full Story

01:28 PM (IST) Nov 01

ஊரக வளர்ச்சித் துறையில் 8-ம் வகுப்பு தகுதிக்கு அரசு ஓட்டுநர் வேலை! தேர்வு இல்லை! உடனே அப்ளை பண்ணுங்க!

TNRD Driver Job 2025 ஊரக வளர்ச்சித் துறையில் 8-ம் வகுப்பு தகுதிக்கு ஓட்டுநர் வேலை. ₹19,500 வரை சம்பளம், தேர்வு கிடையாது, நேர்காணல் மூலம் தேர்வு. மாவட்ட வாரியாக உடனே விண்ணப்பிக்கவும்!

Read Full Story

01:21 PM (IST) Nov 01

3-ம் வகுப்பு முதல் AI கல்வி - 2026-ல் புதிய அத்தியாயம்! மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!

AI Education மத்திய கல்வி அமைச்சகம் 2026-27 முதல் 3-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு AI மற்றும் கணக்கீட்டுச் சிந்தனையை அறிமுகப்படுத்துகிறது. NCF SE 2023-உடன் இணைந்திருக்கும் புதிய பாடத்திட்டம்.

Read Full Story

01:12 PM (IST) Nov 01

ஷாக்கிங் நியூஸ்! கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பக்தர்கள் உயிரிழப்பு

ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள வெங்கடேஸ்வரா கோவிலில் ஏகாதசியன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 9 பக்தர்கள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த துயர சம்பவம் குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Read Full Story

12:48 PM (IST) Nov 01

Morning Headaches - நல்லா தூங்கி காலைல எழுந்தாலும் தலைவலிக்குதா? இந்த 8 காரணமா இருக்கலாம்!

காலையில் தூங்கி எழுந்ததும் உங்களுக்கு தலைவலி வருகிறதா? அதற்கான காரணங்கள் என்னவென்று இந்த பதிவில் காணலாம்.

Read Full Story

12:46 PM (IST) Nov 01

ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளர்களை கட்டம் கட்டி காலி செய்யும் இபிஎஸ்.! நீக்கப்பட்ட அந்த 17 பேர் யார் தெரியுமா.?

Sengottaiyan expelled from AIADMK : ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரத்தை நிலைநிறுத்த சசிகலா, ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட பல மூத்த தலைவர்களை கட்சியில் இருந்து நீக்கியதன் தொடர்ச்சியாக தற்போது செங்கோட்டையனும் நீக்கப்பட்டுள்ளார். 

Read Full Story

12:12 PM (IST) Nov 01

புதுப்படங்களை வாஷ் அவுட் பண்ணிய பாகுபலி தி எபிக்... ரீ-ரிலீஸ் ஆன முதல் நாளே இத்தனை கோடி வசூலா?

ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா டகுபதி ஆகியோர் நடிப்பில் உருவான பாகுபலி தி எபிக் திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆன முதல் நாளில் வசூல் சாதனை நிகழ்த்தி இருக்கிறது.

Read Full Story

12:08 PM (IST) Nov 01

மொழி கற்பதை பொழுதுபோக்காக்க வேண்டுமா? 'பாஷாஃபை'க்கு வாருங்கள்.. 7 இந்திய மொழிகளைக் கற்கலாம்!

இந்திய மொழிகளைக் கற்க 'பாஷாஃபை' என்ற ஆன்லைன் தளம் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. நிறுவனர்களின் சொந்த வாழ்க்கை அனுபவங்களிலிருந்து உத்வேகம் பெற்று, இந்தியாவில் மொழி கற்பதில் உள்ள வரம்புகளைக் கடக்கும் நோக்கத்துடன் இந்த முயற்சி தொடங்கப்பட்டது.

Read Full Story

12:07 PM (IST) Nov 01

இவர் தற்காலிக பொதுச் செயலாளர் தான்! இபிஎஸ்க்கு துரோகத்திற்கு நோபல் பரிசே தரலாம்! செங்கோட்டையன்

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் செயல் சர்வாதிகாரமானது என்று குற்றம் சாட்டியுள்ளார். கோடநாடு கொலை வழக்கில் இபிஎஸ் தான் முதல் குற்றவாளி என்றும், தனது நீக்கத்திற்கு எதிராக வழக்கு தொடரப்போவதாகவும் கூறியுள்ளார். 

Read Full Story

11:41 AM (IST) Nov 01

பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளே ஆர்யன் படம் வாரிசுருட்டிய வசூல் இத்தனை கோடியா?

பிரவீன் கே இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்டு வரும் ஆர்யன் திரைப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் எவ்வளவு என்பதை பார்க்கலாம்.

Read Full Story

11:36 AM (IST) Nov 01

தேவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தியதற்கான பரிசு தான் அதிமுகவில் இருந்து நீக்கம்..! இறங்கி அடிக்கும் செங்கோட்டையன்

அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று கோரிய மூத்த தலைவர் செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இது எடப்பாடி பழனிசாமியின் சர்வாதிகாரப் போக்கு என்றும், கொடநாடு வழக்கில் அவர் மவுனமாக இருப்பது ஏன் என்றும் செங்கோட்டையன் கேள்வி எழுப்பியுள்ளார். 

Read Full Story

11:19 AM (IST) Nov 01

ஒருமுறை கூட வெற்றி பெறாதவர் இபிஎஸ்! கட்சியை குட்டிச்சுவரா ஆக்குறாரு! செங்கோட்டையன் சரவெடி!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவர் செங்கோட்டையன் இபிஎஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இபிஎஸ்ஸுக்கு பதவி கிடைக்க பரிந்துரைத்ததாகவும், அவரது முடிவுகளால் கட்சி வெற்றி வாய்ப்பை இழந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

Read Full Story

11:01 AM (IST) Nov 01

ரோகிணியை தலையில் தூக்கிவைத்து ஆடும் விஜயா... முத்துவிடம் உண்மையை உடைத்த மீனா - சிறகடிக்க ஆசை அப்டேட்

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா மூலம் தான் ரோகிணிக்கு மிகப்பெரிய ஆர்டர் கிடைத்தது என்கிற உண்மை முத்துவுக்கு தெரியவந்திருக்கிறது. இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

Read Full Story

11:00 AM (IST) Nov 01

Carrot Juice - கேரட் ஜூஸ் ரொம்ப ஆரோக்கியமானது.. ஆனா அதன் தீமைகளையும் தெரிஞ்சுக்கோங்க

கேரட் ஜூஸ் ஆரோக்கியத்திற்கு நன்மை என்றாலும், அதில் சில தீமைகளும் உள்ளன. கேரட் ஜூஸ் குடித்தால் உடலில் எந்த மாதிரியான பிரச்சினையை வரவழைக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

10:58 AM (IST) Nov 01

ஓவரா ஆட்டம்போடாதீங்க இபிஎஸ்! கட்சி வளர்ப்பதை விட அழிக்கிற வேலையை பார்க்குறீங்க! சசிகலா வார்னிங்!

அதிமுகவில் இருந்து மூத்த தலைவர் செங்கோட்டையன் நீக்கப்பட்டதாக வரும் செய்திகளுக்கு சசிகலா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது திமுகவின் ஆசையை நிறைவேற்றும் செயல். திமுகவை வீழ்த்த அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

Read Full Story

10:54 AM (IST) Nov 01

Astrology - இந்த 3 ராசியினருக்கு உதவி செய்யாட்டி தூக்கமே வராதாம்.! நடு ராத்திரில எழுப்பி ஹெல்ப் கேட்டாலும் உடனே செய்வார்களாம்.!

சில ராசியினருக்கு மற்றவர்களுக்கு உதவுவது ஒரு கடமை போன்றது. கடகம், கன்னி, மற்றும் மீனம் ராசிக்காரர்கள் மிகுந்த கருணையுடன், நள்ளிரவிலும் பிறரின் துயரங்களைத் தீர்க்கத் தயாராக இருப்பார்கள். இவர்களுக்கு உதவி செய்வதே வாழ்வின் முக்கிய நோக்கமாக அமைகிறது.

Read Full Story

More Trending News