ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள வெங்கடேஸ்வரா கோவிலில் ஏகாதசியன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 9 பக்தர்கள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த துயர சம்பவம் குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் வெங்கடேஸ்வரா கோயில் அமைந்துள்ளது. இன்று மாத ஏகாதசி என்பதால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகளவு காணப்பட்டது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 9 பக்தர்கள் உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவத்தை உடனடியாக விரைந்த போலீசார், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்து, காயமடைந்த பக்தர்கள் மீட்டுகப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: காகுளம் மாவட்டம் காசிபுக்காவில் உள்ள வெங்கடேஸ்வரர் கோவிலில் நடந்த நெரிசல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவத்தில் பக்தர்கள் உயிரிழந்தது மிகவும் மனவேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு விரைவான மற்றும் முறையான சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன். மேலும், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சம்பவ இடத்திற்குச் சென்று நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.