அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவர் செங்கோட்டையன் இபிஎஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இபிஎஸ்ஸுக்கு பதவி கிடைக்க பரிந்துரைத்ததாகவும், அவரது முடிவுகளால் கட்சி வெற்றி வாய்ப்பை இழந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று அதிமுக மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறி வந்தார். இதனால் அவரது கட்சிப்பதவிகள் அதிரடியாக பறிக்கப்பட்டன. இருப்பினும் கட்சி உறுப்பினராக நீடித்து வந்தார். இதனையடுத்து ஓபிஎஸ்வுடன் ஒரே காரில் செங்கோட்டையன் பசும்பொன்னுக்கு சென்று இபிஎஸ்க்கு அதிர்ச்சி கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் ஓபிஎஸ், டிடிவி.தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் அதிரடியாக நீக்கப்பபட்டார்.

இந்நிலையில் அதிமுக நீக்கப்பட்ட நிலையில் கோபிசெட்டிபாளையம் அலுவலகத்தில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து இபிஎஸ் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அதாவது 1975-ல் கோவையில் நடைபெற்ற அதிமுகவின் முதல் பொதுக்குழுவில் பங்கேற்றேன். பொதுக்குழுவைச் சிறப்பான முறையில் நடத்தியதற்காக எம்.ஜி.ஆரிடம் பாராட்டுகளைப் பெற்றவன். இரவு பகல் பாராமல் ஜெயலலிதா கை காட்டிய திசையில் பயணித்தவன். இந்த இயக்கம் வலிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆயிராமல் பணியாற்றினேன். அதிமுக உடைந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இரண்டு முறை கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை.

இபிஎஸ் எடுத்த முடிவுவால் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டது. ஒருமுறை தொற்றால் மறுமுறை வரலாற்று வெற்றி பெறுபவர் ஜெயலலிதா. இபிஸ்க்கு பதவி கிடைப்பதற்காக பரிந்துரை கடிதத்தைக் கொடுத்தவன் நான். அனைவரையும் ஒன்றிணைக்கும் கருத்தை எடப்பாடி பழனிசாமி ஏற்காததால்தான் கடந்த 5ம் தேதி மனம் திறந்து பேசினேன்.

தொடர் தோல்வியால்தான் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அனைவரையும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தினேன். ஜெயலலிதா இறப்புக்கு பிறகு எல்லோரும் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும் என வலியுறுத்தினேன். அதிமுகவை ஒருங்கிணைக்கவே தேவர் ஜெயந்தியில் டிடிவி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம்ஐ சந்தித்தேன். தேவர் ஜெயந்தியில் பங்கேற்றதற்கு கிடைத்த பரிசுதான் கட்சியில் இருந்து நீக்கம் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.