- Home
- Spiritual
- Vastu Tips : சமீபத்துல இந்த விஷயங்களை பார்த்தீங்களா? அப்போ உங்களுக்கு இனி நல்ல காலம்தான்; பணவரவு உறுதி
Vastu Tips : சமீபத்துல இந்த விஷயங்களை பார்த்தீங்களா? அப்போ உங்களுக்கு இனி நல்ல காலம்தான்; பணவரவு உறுதி
இங்கு சொல்லப்பட்டுள்ள விஷயங்களை நீங்கள் பார்த்தால் வாழ்வில் நல்ல காலம் தொடங்கப் போகிறது என வாஸ்துசாஸ்திரம் சொல்கிறது.

வாஸ்து சாஸ்திரம் வாழ்வில் நடக்கவிருக்கும் சம்பவங்களைக் குறித்து சில அறிகுறிகளை நமக்கு விவரிக்கிறது. சிலருக்கு வீட்டில் வாஸ்து மாற்றியதும் நல்ல விஷயங்கள் நடக்கத் தொடங்கும். நல்ல விஷயங்கள் நடக்கும் முன் நமக்கு சில அறிகுறிகள் தென்படும். வீட்டில் நிம்மதி, செல்வம் பெருக வைக்கும் சில அறிகுறிகளை இங்கு காணலாம்.
உங்களுடைய கனவில் தெய்வங்களை அடிக்கடி கண்டால் நல்ல அறிகுறியாகும். உங்களுடைய வாழ்வில் நல்ல நாட்கள் வரப்போவதாக அர்த்தம். எந்த காரணமுமின்றி நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கத் தொடங்கினால் அது வரவிருக்கும் நல்ல காலத்தின் அறிகுறி என வாஸ்துசாஸ்திரம் சொல்கிறது.
உங்களுடைய வீட்டிற்கு அடிக்கடி பசுக்கள் வந்தால் அது நல்ல அறிகுறியாகும். பசுக்களைப் பார்க்கும்போது முடிந்தால் அவற்றிற்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள். இது உங்களுடைய வீட்டிற்கு அமைதியை கொண்டு வரும். இந்த அறிகுறி உங்களுடைய வீட்டிற்கு நல்ல காலம் என்பதை காட்டுகிறது. வீட்டிற்கு ஆந்தை, கிளி ஆகிய பறவைகள் வருவது செல்வத்தின் அடையாளமாக கருதப்படுகிறது
நீங்கள் காலையில் பிரம்ம முகூர்த்தத்தின் போது (3:30 முதல் 6:00 மணி வரை) அலாரம் வைக்காமல் தானாகவே எழுந்தால் அது நல்ல அறிகுறியாகும். உங்களுடைய வாழ்க்கை சரியான பாதையில் செல்லப் போகிறது என்பதற்கான நல்ல அறிகுறியாகும். தினமும் வீட்டைச் சுற்றி கடவுளின் நாமம் உச்சரிக்கப்படுவதை கேட்க நேர்ந்தால் உங்களுக்கு செழிப்பு வரப்போகிறது என்று அர்த்தம்.
கனவில் தெய்வங்களைத் தவிர, தாமரை மலரைக் கண்டால் வேலை, படிப்பு, வணிகத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். உங்களுக்கு வெற்றி கிடைக்கப்போவதை உணர்த்துகிறது. தாமரை நேர்மறை ஆற்றல், அமைதி, தூய்மை, அதிர்ஷ்டம், ஆன்மீக முன்னேற்றத்தின் அடையாளமாக நம்பப்படுகிறது. இது போன்ற அறிகுறிகள் உங்கள் வாழ்க்கையில் நேர்மறை ஆற்றலைக் கொண்டு வரக் கூடியவை. இந்த அறிகுறிகளை காண்பவர்கள் வாழ்வில் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் நல்ல காலம் வந்துகொண்டிருக்கிறது என்றே வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.