- Home
- Astrology
- Vastu Tips : பணமே சேரலயா? வீட்டிற்கு வறுமையை கொண்டு வரும் செடிகள் இவைதான்.. யோசிக்காம உடனே தூக்கி போடுங்க
Vastu Tips : பணமே சேரலயா? வீட்டிற்கு வறுமையை கொண்டு வரும் செடிகள் இவைதான்.. யோசிக்காம உடனே தூக்கி போடுங்க
வீட்டில் செல்வம் சேர விடாமல் வறுமையைக் கொண்டு வரும் செடிகள் குறித்து இங்கு காணலாம்.

வீட்டைச் சுற்றிலும் செடி வளர்ப்பது அழகான தோற்றத்தை வழங்கும். நம்மில் பலர் வீட்டில் ஒரு செடியாவது வளர்ப்போம். சில தாவரங்கள் மருத்துவக் குணங்கள் கொண்டவை. அவற்றை வளர்ப்பது தவிர்க்க முடியாது. ஆனாலும் சில செடிகளை வீட்டில் வைத்தால் நல்ல பலன்களை ஒருபோதும் தராது என வாஸ்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கூறுகிறார்கள். இந்தப் பதிவில் வீட்டில் எந்தச் செடிகளை வளர்க்கக்கூடாது எனக் காண்போம்.
வாஸ்து சாஸ்திரத்தில் சொன்ன தகவல்களின்படி, எந்த சூழலிலும் வீட்டில் புளியமரத்தை வைக்கவேகூடாது. வீட்டிலும், வீட்டிற்கு அருகிலும் புளியமரம் இருப்பது நல்லதல்ல. இது நிதிப் பிரச்சினைகளை தொடர்ந்து உண்டாக்கும் என வாஸ்து நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இயற்கை விவசாயம், மாடித்தோட்டம் என மக்கள் பூசணிக் கொடியை வளர்க்கிறார்கள். உண்மையில் பூசணிக் கொடியை வீட்டில் வைத்து வளர்க்கக்கூடாது. இதில் தீய சக்திகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இதை வீட்டில் அல்லது வீட்டிற்கு அருகில் வளர்த்தால் கெட்ட தீய சக்திகளின் ஆற்றல் வறுமையைக் கொண்டு வரும் என சொல்லப்படுகிறது.
ரோஜா செடியை தவிர முட்கள் உள்ள எந்தச் செடிகளும் வீட்டில் வளர்க்கக் கூடாது. அவை எதிர்மறை ஆற்றலைக் கொண்டு வருபவை. பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் போகன்வில்லாவை கூட வீட்டின் முன் வைக்க வேண்டாம் என்றே வாஸ்து பரிந்துரைக்கிறது. சப்பாத்திக்களி, கற்றாழை போன்றவையும் தவிர்க்கப்ப்ட வேண்டும்.
வீட்டிற்கு அருகில் கருஞ்சீரக மரத்தை வைக்கக் கூடாது. இது குடும்ப உறுப்பினர்களுக்குள் சண்டை சச்சரவுகளை உண்டாக்கும். துரதிர்ஷடத்தைக் கொண்டு வரும். ஒருபோதும் கருஞ்சீரக மரத்தை வீட்டில் வைக்க வேண்டாம் என வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
வாஸ்துவின்படி, நோய்கள் தாக்கிய, காய்ந்த செடிகளை வீட்டிற்குள் இருந்து உடனே அகற்ற வேண்டும். காய்ந்த செடிகளை வீட்டிலேயே வைத்திருப்பது எதிர்மறை ஆற்றலைக் கொண்டுவரும். இதனால் பொருளாதாரப் பிரச்சனைகள் வரும். வீட்டில் கருத்து வேறுபாடுகள் வரும்; நிம்மதி இழப்பீர்கள். துரதிர்ஷ்டம் வரும்.
மேலே சொல்லப்பட்ட செடிகளை வீட்டில் வைக்காமல் தவிர்ப்பது பல பிரச்சனைகளை தடுக்கும். மீறி வைத்தால் தொடர்ந்து பொருளாதார சிக்கல்கள் ஏற்படும் என வாஸ்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பு; இது பொதுவான நம்பிக்கை. அறிவியல்ரீதியான சான்றுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.