- Home
- Cinema
- புதுப்படங்களை வாஷ் அவுட் பண்ணிய பாகுபலி தி எபிக்... ரீ-ரிலீஸ் ஆன முதல் நாளே இத்தனை கோடி வசூலா?
புதுப்படங்களை வாஷ் அவுட் பண்ணிய பாகுபலி தி எபிக்... ரீ-ரிலீஸ் ஆன முதல் நாளே இத்தனை கோடி வசூலா?
ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா டகுபதி ஆகியோர் நடிப்பில் உருவான பாகுபலி தி எபிக் திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆன முதல் நாளில் வசூல் சாதனை நிகழ்த்தி இருக்கிறது.

Baahubali The Epic Day 1 Box Office Collection
இந்திய சினிமா ரசிகர்களுக்கு பாகுபலி என்பது வெறும் ஒரு திரைப்படம் அல்ல, அது ஒரு உணர்வு. ஒருவகையில் தென்னிந்திய சினிமாவின் தலையெழுத்தையே மாற்றிய படம் இது. இந்தியவே வியந்து பார்க்கும் அளவுக்கு இந்த படத்தை உருவாக்கி இருந்தார் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி. பாகுபலிக்கு முன், பாகுபலிக்கு பின் என பிரிக்கும் அளவுக்கு தென்னிந்திய சினிமாவில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தி இருந்தது. இப்போது பாகுபலி ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், இரண்டு பாகங்களும் ஒரே படமாக இணைத்து பாகுபலி தி எபிக் என்கிற பெயரில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
பாகுபலி தி எபிக்
இரண்டு பாகங்களையும் இணைத்து ஒரே படமாக வெளியானதால், படத்தின் நீளம் 3.45 மணி நேரம். இவ்வளவு நீளம் இருந்தபோதிலும், பாகுபலி ரசிகர்களை சலிப்படையச் செய்யவில்லை என்பதுதான் ராஜமௌலியின் மேஜிக். 'பாகுபலி தி எபிக்' ஒரு விறுவிறுப்பான அனுபவம் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ராஜமௌலியின் மேற்பார்வையில் ரீ-எடிட் மற்றும் ரீ-மாஸ்டரிங் செய்யப்பட்ட இந்த படம் நேற்று திரைக்கு வந்திருக்கிறது. இந்த புது முயற்சியை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்களா? பாக்ஸ் ஆபிஸில் வரவேற்பு எப்படி? தற்போது படத்தின் முதல் நாள் வசூல் விபரங்கள் வெளியாகியுள்ளன.
பாகுபலி தி எபிக் வசூல்
வசூலைப் பொறுத்தவரை, நேற்று இந்தியாவில் வெளியான அனைத்து புதிய படங்களையும் விட 'பாகுபலி தி எபிக்' மிகப்பெரிய ஓப்பனிங்கைப் பெற்றுள்ளது. பிரபல டிராக்கர் நிறுவனமான சாக்னில்க் அறிக்கையின்படி, இப்படம் இந்தியாவில் இருந்து ரூ.10.4 கோடி நிகர வசூல் செய்துள்ளது. இந்தியாவின் மொத்த வசூல் ரூ.12.35 கோடி. வெளிநாடுகளில் இருந்து மேலும் ரூ.4 கோடி. இதன் மூலம் உலகளவில் முதல் நாள் வசூல் ரூ.16.35 கோடியாகும். ஒரு மறு வெளியீட்டுக்கு இது ஒரு பிரமிக்க வைக்கும் தொடக்கமாகும்.
ராஜமெளலியின் மேஜிக்
பாகுபலி முதல் பாகம் வெளியாகி பத்து ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக இந்த மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மறு வெளியீட்டு பணிகளுக்காக, மகேஷ் பாபுவை வைத்து இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை ராஜமௌலி தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தார். சுமார் ஐந்தரை மணி நேர காட்சிகளை, கதையின் விறுவிறுப்பு குறையாமல் பாதியாக சுருக்குவது ராஜமௌலிக்கு ஒரு கடினமான பணியாக இருந்தது. அதில் அவர் வெற்றி பெற்றுள்ளார் என்பதை ரசிகர்களின் வரவேற்பு காட்டுகிறது. ஐமேக்ஸ், 4டிஎக்ஸ், டி-பாக்ஸ், டால்பி சினிமா, எபிக் போன்ற பிரீமியம் வடிவங்களிலும் இப்படம் வெளியாகியுள்ளது.