MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 50 செகண்டுக்கு 5 கோடி..! அதிர வைக்கும் நயன்தாராவின் ஃபீஸ்

50 செகண்டுக்கு 5 கோடி..! அதிர வைக்கும் நயன்தாராவின் ஃபீஸ்

தென்னிந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வரும் நயன்தாரா, ஒரு 50 விநாடி ஓடக்கூடிய விளம்பரத்தில் நடிக்க 5 கோடி சம்பளம் வாங்கி அதிர வைத்திருக்கிறார்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Nov 01 2025, 03:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Nayanthara 5 Crore Salary
Image Credit : X

Nayanthara 5 Crore Salary

கேரளாவில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் கோலோச்சிய நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர். இவர் ஐயா படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அவர் அறிமுகமாகி 20 ஆண்டுகள் கடந்துவிட்டது. அன்று முதல் இன்று வரை கோலிவுட்டில் டாப் ஹீரோயினாக வலம் வருகிறார் நயன்தாரா. இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார். இதன்மூலம் பான் இந்தியா அளவில் ஜொலித்து வருகிறார் நயன்தாரா. இந்த நிலையில், அவர் வாங்கும் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி பரவலாக பேசப்பட்டு வருகிறது.

24
நயன்தாரா சம்பளம்
Image Credit : Instagram/nayanthara

நயன்தாரா சம்பளம்

நடிகை நயன்தாரா சினிமாவில் நடிக்க ஒரு படத்துக்கு 10 முதல் 15 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இவர் சினிமா மட்டுமின்றி விளம்பரங்களிலும் நடித்து, அதன் வாயிலாகவும் கோடி கோடியாய் சம்பாதித்து வருகிறார். அந்த வகையில் அவர் விளம்பரத்தில் நடிக்க வாங்கும் சம்பளம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. குறிப்பாக 50 விநாடிகள் மட்டுமே ஒளிபரப்பாகக் கூடிய விளம்பரம் ஒன்றில் நடிப்பதற்காக அவர் ரூ.5 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறார். டாடா ஸ்கை விளம்பரத்தில் நடிக்கவே அவர் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

Related Articles

Related image1
டோலிவுட்டில் பிசியான நயன்தாரா... சிரஞ்சீவியை தொடர்ந்து 65 வயது ஹீரோவுடன் ஜோடி சேரும் நயன்..!
Related image2
யாஷ் - நயன்தாரா நடிக்கும் டாக்ஸிக் ரிலீஸ் தள்ளிப்போகுதா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த படக்குழு..!
34
40 வயதிலும் செம பிசி
Image Credit : instagram/nayanthara

40 வயதிலும் செம பிசி

பொதுவாக நடிகைகளுக்கு திருமணம் ஆனாலே மார்க்கெட் போய்விடும் என சொல்வார்கள். அதுமட்டுமின்றி 40 வயதை எட்டிவிட்டால், ஹீரோயின் வாய்ப்பெல்லாம் குறைந்துவிடும் என்கிற எழுதப்படாத விதியும் சினிமாவில் உள்ளது. ஆனால் நயன்தாரா அதையெல்லாம் தகர்த்தெறிந்துள்ளார். தற்போது கோலிவுட்டில் பிசியான ஹீரோயினாக வலம் வருகிறார் நயன்தாரா. இவர் கைவசம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிப் படங்கள் இருக்கின்றன. இதுமட்டுமின்றி ரெளடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் மூலம் சில படங்களை தயாரித்தும் வருகிறார் நயன்தாரா.

44
நயன்தாரா கைவசம் உள்ள படங்கள்
Image Credit : our own

நயன்தாரா கைவசம் உள்ள படங்கள்

தமிழில் அவர் கைவசம் ராக்காயி, மண்ணாங்கட்டி, ஹாய், மூக்குத்தி அம்மன் 2 போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர மலையாளத்தில் நிவின் பாலி ஜோடியாக டியர் ஸ்டூடண்ட்ஸ், மம்முட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் படம் ஆகியவை உள்ளன. அதேபோல் தெலுங்கில் அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஒரு படம், கோபிசந்த் இயக்கத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஒரு படம் இருக்கிறது. கன்னடத்தில் ராக்கிங் ஸ்டார் யாஷ் உடன் டாக்ஸிக் திரைப்படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. கீது மோகன்தாஸ் இயக்கும் இப்படத்தில் யாஷுக்கு அக்காவாக நடிக்கிறார் நயன்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
சிபி சக்கரவர்த்தி கொடுத்த செம அப்டேட்: ‘ரஜினி 173’ ஷூட்டிங் எப்போது? வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!
Recommended image2
ஆரோக்கியமான போட்டி.. ஆச்சரியமான ஹிட்! எம்.ஜி.ஆர் - சிவாஜி மோதலில் உருவான காவியங்கள்.. திரையுலகின் பொற்கால ரகசியங்கள்!
Recommended image3
இயக்குநர், நடிகர்.. இப்போ தயாரிப்பாளர்! பிரதீப் ரங்கநாதனின் 'வேற லெவல்' அவதாரம்! படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா?
Related Stories
Recommended image1
டோலிவுட்டில் பிசியான நயன்தாரா... சிரஞ்சீவியை தொடர்ந்து 65 வயது ஹீரோவுடன் ஜோடி சேரும் நயன்..!
Recommended image2
யாஷ் - நயன்தாரா நடிக்கும் டாக்ஸிக் ரிலீஸ் தள்ளிப்போகுதா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த படக்குழு..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved