கேரட் ஜூஸ் ஆரோக்கியத்திற்கு நன்மை என்றாலும், அதில் சில தீமைகளும் உள்ளன. கேரட் ஜூஸ் குடித்தால் உடலில் எந்த மாதிரியான பிரச்சினையை வரவழைக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

வேர் காய்கறியான கேரட்டில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன. கேரட்டை பச்சையாக, ஜூஸாக, வறுவல், பொரியல், அல்வா என நிறைய வடிவங்களில் சாப்பிடுகிறோம். அதிலும் கேரட் ஜூஸை பலரும் காலையில் ஆரோக்கியமானமாக குடிக்கிறார்கள். ஆனால், கேரட் ஜூஸில் சில தீமைகளும் உள்ளன தெரியுமா? இந்த பதிவில் கேரட் ஜூஸ் குடிப்பதால் உடலில் எந்த மாதிரியான பிரச்சனைகள் ஏற்படும் என்று தெரிந்து கொள்ளலாம்.

கேரட் ஜூஸ் ஆரோக்கிய நன்மைகள் :

- தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் கண் பார்வை தெளிவாக தெரியும். அதுபோல கண்புரை நோயும் வராது.

- கேரட் ஜூஸ் தினமும் குடித்து வந்தால் எலும்புகள் வலுவடையும்.

- அதுமட்டுமல்லாமல் தினமும் கேரன் ஜூஸ் குடித்து வந்தால் மாலைக்கண் நோய் விரைவில் குணமாகும்.

கேரட் ஜூஸ் குடிப்பதன் தீமைகள் :

1. அலர்ஜி

ஒரு சிலருக்கு கேரட் உடலில் ஒவ்வாமையை ஏற்படுத்தி விடும். இதன் விளைவாக சருமத்தில் அலர்ஜி, பட்டை, வீக்கம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே கேரட் சாப்பிட்டால் உங்களுக்கு இது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே அதை குடிப்பதை நிறுத்தி விடுங்கள்.

2. சர்க்கரை நோயாளிகள் :

சர்க்கரை நோய் உங்களுக்கு இருக்கிறது என்றால் கேரட் ஜூஸ் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் கிளைசெமிக் குறியீடு அதிகமாக உள்ளன. இது உடலில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்யும். எனவே சர்க்கரை நோயாளிகள் கேரட் ஜூஸ் குடிப்பதற்கு பதிலாக அதை அவித்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.

3. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் :

கேரட்டில் தேவையான அளவு வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் இருக்கிறது. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் கேரட் ஜூஸ் குடித்தால் அது தாய்ப்பாலின் சுவையை மாற்றிவிடும்.

4. பூச்சிக்கொல்லி :

ஆய்வு ஒன்றில் கேரட்டில் 26 பூச்சிக்கொல்லிகள் இருப்பதாக கண்டறிந்துள்ளன. அவை புற்றுநோயை உண்டாக்கும், ஹார்மோன் செயல்பாட்டை தடுக்கும், நரம்பு பிரச்சனை ஏற்படுத்தும் மற்றும் வளர்ச்சியை பிரச்சினையை ஏற்படுத்த என்று சொல்லப்படுகிறது. எனவே கேரட்டை அளவோடு எடுத்துக் கொள்ளுங்கள். அதுவும் மருத்துவரின் ஆலோசனைப்படி.

யாரெல்லாம் கேரட் ஜூஸ் குடிக்க கூடாது?

- குடல் பிரச்சனை, சர்க்கரை குறைவு, ஹார்மோன் பிரச்சனைகள் மற்றும் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் கேரட் ஜூஸ் ஒருபோதும் குடிக்க வேண்டாம்.

- சர்க்கரை நோயாளிகளின் கேரட் ஜூஸ் குடிக்க கூடாது. ஏனெனில் இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகமாக்கிவிடும்.

- குறைவான இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கேரட் ஜூஸ் குடிக்க வேண்டாம்.

- கேரட்டில் பீட்டா கரோட்டின் அதிகமாக இருப்பதால் கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் கேரட் ஜூஸ் குடிக்க வேண்டாம்.

- கர்ப்பிணி பெண்களும் கேரட் ஜூஸை தவிர்க்க வேண்டும்.

ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்?

நீங்கள் கேரட் ஜூஸ் குடிக்க விரும்பினால் ஒரு நாளைக்கு 100 முதல் 150 மில்லி லிட்டர் மட்டும் குடிக்கலாம். ஆனால் தினமும் குடிக்காமல் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை குடித்தால் போதும் இரவில் ஒருபோதும் குடிக்கவே வேண்டாம். இல்லையெனில் உடலில் கொழுப்பை அதிகரிக்கும், மலச்சிக்கல் போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும்.

குறிப்பு : நீங்கள் கேரட் ஜூஸ் தொடர்ந்து குடித்துவிட்டு திடீரென நிறுத்தினால் தூக்கமின்மை, பதட்டம், மன எரிச்சல், புளித்த ஏப்பம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.