MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • Carrot Juice: ஒரு கிளாஸ் கேரட் ஜூஸ் போதும் இந்த 7 நன்மைகள் உங்களுக்கு கிடைக்க!

Carrot Juice: ஒரு கிளாஸ் கேரட் ஜூஸ் போதும் இந்த 7 நன்மைகள் உங்களுக்கு கிடைக்க!

அனைத்து வயதினரும் விரும்பி உண்ணும் காய்கறி தான் கேரட். கேரட்டில் அதிகளவில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் உள்ளது. மேலும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி3, வைட்டமின் கே மற்றும் மினரல்களும் நிறைந்துள்ளது. இதனை தினந்தோறும் உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் பல ஆரோக்கிய நன்மைகளை நம்மால் பெற முடியும்.  

1 Min read
Author : Dinesh TG
Published : Oct 01 2022, 04:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

கேரட் ஜூஸின் பயன்கள்

உடல் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கவும், பளபளப்பாக வைத்துக் கொள்ளவும் கேரட் சாறு பயன்படுகிறது. சருமத்திற்கு வெளிப்பூச்சாகவும் கேரட்டை பயன்படுத்தலாம். தினசரி ஒரு கிளாஸ் கேரட் சாற்றை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் சருமம் பொலிவாகவும், சருமத்தில் உள்ள கருமை நிறம் நீங்கி நல்ல நிற மாற்றத்தையும் கொடுக்கும்.

புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கேரட் கொண்டிருப்பதால், இதிலுள்ள அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் ப்ரீ - ரேடிக்கல்ஸை எதிர்த்துப் போராடும் தன்மையை பெற்றிருக்கிறது. குறிப்பாக வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை சரும சேதத்தைத் தடுக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23

தினந்தோறும் ஒரு கிளாஸ் கேரட் ஜூஸ் குடிப்பதால், செரிமான மண்டலம் மிகச் சிறப்பாக செயல்படும். கேரட்டில் கரையும் மற்றும் கரையா நார்ச்சத்துக்கள் ஆகிய இரண்டுமே இருப்பதால் இது மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.

கேரட்டில் உள்ள  நார்ச்சத்துக்கள், நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. இதனால், பசியைக் கட்டுப்படுத்தி, மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து உடல் எடையைக் குறைக்கிறது.

கேரட்டில் வைட்டமின் ஏ, சி, கே, பி6, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை அதிகமாக இருக்கின்றது. இவை பல நோய்களுக்கு எதிராக மிகச் சிறந்த அளவில் போராடுகிறது. குறிப்பாக வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.

33

கேரட்டில் குறைந்த அளவு கலோரியும், குறைவான அளவில் சர்க்கரையும் இருப்பதால், நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் தினசரி உணவில் கேரட்டை சேர்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கேரட்டில் நிறைந்துள்ள பொட்டாசியம் நம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்டிராலை குறைக்க உதவுகிறது. மேலும், தைராய்டு, கொலஸ்டிரால் மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றைக் கட்டுக்குள் வைக்க கேரட் உதவுகிறது. ஆகையால், தினமும் கேரட்டை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

About the Author

DT
Dinesh TG
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mudakathan keerai soup: மூட்டுவலியைப் போக்கும் முடக்கத்தான் கீரை சூப் செய்வது எப்படி?
Recommended image2
Sweet Potato: பால், வெல்லம், சர்க்கரைவள்ளி - கிழங்கு இவ்ளோ நன்மையா?
Recommended image3
Thick Hair : அடர்த்தியான முடி வளர சாப்பிட வேண்டிய 7 உணவுகள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved