நடிகர் சிவகார்திகேயன் நடித்துள்ள மாவீரன் படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

12:37 AM (IST) Jun 10
பள்ளி மாணவர்களின் கனவுகளைக் கலைத்திருப்பது நியாயமா ? பள்ளிக் கல்வித் துறை அமைச்சரே இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை.
12:18 AM (IST) Jun 10
இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலி தீவில் இன்பச் சுற்றுலா சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த புதுமண தம்பதி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
11:54 PM (IST) Jun 09
பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் 14வது தவணை ஜூன் மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவை பற்றி விரிவாக பார்க்கலாம்.
11:20 PM (IST) Jun 09
மதுரை ரயில்வே கோட்டத்தில் திருமணம் ஆன தம்பதிகள் போட்டோ சூட் எடுக்க அனுமதி தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடாததால் உத்தரவு கிடப்பில் போடப்பட்டுள்ளது.
11:01 PM (IST) Jun 09
பெரியநாயக்கன்பாளையம் அருகே அத்திகடவு - பில்லூர் பிரதான குடிநீர் குழாய் உடைந்ததால் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணானது.
09:22 PM (IST) Jun 09
ஓடும் பேருந்தில் இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
08:59 PM (IST) Jun 09
புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் எம்.பி.யை நியமித்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரவிட்டுள்ளார்.
08:35 PM (IST) Jun 09
டாஸ்மாக்கின் கள்ள சந்தைகளால் தமிழ்நாட்டிற்கு கடந்த 10 ஆண்டுகளில் 8 லட்சம் கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
08:12 PM (IST) Jun 09
ரயில் நிலையத்தில் போட்டோஷூட் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு புதுமணத் தம்பதிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
07:47 PM (IST) Jun 09
புதிய ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்வி புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன் சிறப்பம்சங்களை இங்கு பார்க்கலாம்.
07:31 PM (IST) Jun 09
ஒரு சில காரணங்களால் நீங்கள் ரயில் பயணத்தை ரத்து செய்தாலோ அல்லது ரயிலை தவறவிட்டாலோ பணத்தை திரும்ப பெற முடியும்.
06:12 PM (IST) Jun 09
மக்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஒன்றிய அரசு ஒழுங்குபடுத்தும் என்று மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
06:11 PM (IST) Jun 09
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஐசிசி ஆண்கள் உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பை 2023 ஐ இந்தியாவில் இலவசமாக வழங்குகிறது.
05:11 PM (IST) Jun 09
பிளஸ் 2 துணைத்தேர்வு ஹால் டிக்கெட்டை இந்த தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
03:18 PM (IST) Jun 09
தஞ்சை மாவட்டம் ஆலக்குடி முதலை முத்துவாரி மற்றும் வின்னமங்களம் பிள்ளை வாய்க்கால் ஆகியவற்றில் நடந்து முடிந்த தூர்வாரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
02:36 PM (IST) Jun 09
நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கடந்தாண்டு ஜூன் மாதம் 9-ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இந்த காதல் ஜோடி திருமண பந்தத்தில் இணைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. வெற்றிகரமாக இரண்டாவது ஆண்டில் கணவன், மனைவியாக காலடி எடுத்து வைத்துள்ள விக்கி - நயன் ஜோடிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இதனிடையே திருமணநாளை ஒட்டி இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் சோதனை காலம் என குறிப்பிட்டு இருந்தார். நிஜமாகவே திருமணத்துக்கு பின் பல சர்ச்சைகளில் சிக்கி உள்ளது இந்த ஜோடி,
01:13 PM (IST) Jun 09
சென்னையில் 3 வயது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவியை பிரிந்த கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
12:54 PM (IST) Jun 09
புதுமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் வெளியாகி உள்ள போர் தொழில் திரைப்படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
12:50 PM (IST) Jun 09
குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து புருஷோத்தம் காதலிக்கு கொடுத்துள்ளார். மயக்கம் அடைந்த காதலியை முதலில் புருஷோத்தம் பலாத்காரம் செய்துள்ளார்.
12:14 PM (IST) Jun 09
ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு நிறைவு நாளின் போது நடிகர் ரஜினிகாந்த் தனக்கு கொடுத்த பரிசை என்றென்றும் மறக்கமாட்டேன் என நடிகை தமன்னா கூறி உள்ளார்.
11:03 AM (IST) Jun 09
கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கவிஞர் வைரமுத்துவுக்கு கனவு இல்லம் வழங்கப்படும் என்கிற தமிழக அரசின் அறிவிப்புக்கு சவுக்கு சங்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
10:15 AM (IST) Jun 09
கடந்த காலங்களில், பெண்கள் 14-15 வயதுக்குள் திருமணம் செய்துகொள்வதும், 17 வயதிற்குள் குழந்தை பெறுவதும் இயல்பானது என்று குஜராத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
10:06 AM (IST) Jun 09
ஒடிசாவின் நுவாபாடா மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு துர்க்-பூரி எக்ஸ்பிரஸின் ஏசி கோச்சில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பயணிகள் பீதியடைந்தனர். தகவலறிந்த ரயில்வே போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் பயணிகள் அச்சமடைந்துள்ளதாக கிழக்கு கடற்கரை ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
09:40 AM (IST) Jun 09
தஞ்சை ஆலக்குடி பகுதியில் நீர்வழித் தடங்களில் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். முதலமைச்சருடன் அமைச்சர் துரைமுருகன், மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் பயணம் செய்தார்.
09:37 AM (IST) Jun 09
படுக்கையில் அழுது கொண்டிருந்த குட்டிக் குழந்தை ஒன்று செல்போனில் ஓடிய விஜய்யின் ரஞ்சிதமே பாடலைக் கண்டதும், அழுகையை நிறுத்திவிட்டு சிரிக்கும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
08:52 AM (IST) Jun 09
விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடிக்கு திருமணமாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக நயன்தாரா, தன் குழந்தைகள் உயிர் மற்றும் உலகத்துடன் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்களுடன் எமோஷனல் பதிவு ஒன்றையும் போட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
08:34 AM (IST) Jun 09
தருமபுரி அருகே காதலை கை விட்டதால் ஆத்திரமடைந்த 17 வயது சிறுவன் இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
08:33 AM (IST) Jun 09
சென்னை துறைமுகம் தொகுதி இந்திரா காந்தி நகரில் 65 ஆண்டுக்கு மேல் வசித்து வரும் 3,000 குடும்பங்களை எவ்வித முன்னறிவிப்பின்றி காலி செய்யச் சொல்வது நியாயமா? என விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
07:12 AM (IST) Jun 09
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் 7 மாத கருவை கலைக்க அனுமதி கோரிய வழக்கில் அக்காலத்தில் 17 வயதில் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வது சாதாரணமாக இருந்தது என்ற குஜராத் உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கு ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
07:12 AM (IST) Jun 09
சென்னையில் 384வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.