திமுக கவுன்சிலரின் 23 வயது மகளை இதற்காக தான் கொன்றேன்.. 17 வயது சிறுவன் கொடுத்த பகீர் வாக்குமூலம்..!
தருமபுரி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன். தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். அப்போது ஹர்சாவுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
தருமபுரி நகராட்சி 8வது வார்டு திமுக கவுன்சிலராக இருப்பவர் புவனேஸ்வரன். இவர் தருமபுரியில் பழைய ரயில்வே லைன் பகுதியில் உள்ள கோல்டன் தெருவில் வசிக்கிறார். இவரது மகள் ஹர்ஷா(23). தனியார் பார்மஸி ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை கோம்பை வனப்பகுதியில் பாறை இடுக்கில் இளம்பெண் ஹர்சா வாயில் துணி வைத்து கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக அதியமான்கோட்டை போலீசார் ஹர்ஷாவின் செல்போன் எண்ணை ஆய்வு செய்த போது தேன்கனிக்கோட்டை வாலிபர், தருமபுரியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோருடன் அதிக நேரம் பேசியது தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் 17 வயது சிறுவனை பிடித்து விசாரணை நடத்திய போது ஹர்சாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து, சிறுவன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில்;- தருமபுரி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன். தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். அப்போது ஹர்சாவுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்நிலையில், ஹர்சாவுக்கு கடந்த 3 மாதத்துக்கு முன்பு ஓசூரில் வேலை செய்யும் இடத்தில் வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த சிறுவனுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
இதனால், ஆத்திரம் அடைந்த சிறுவன் நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து கோம்பை வனப்பகுதி பாறை பகுதிக்கு ஒருமுறை மட்டும் வா என்று அழைத்து சென்றுள்ளார்.
அப்போதும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த சிறுவன், ஹர்சாவின் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்து பாறை இடுக்கில் போட்டுவிட்டு தப்பியது தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட சிறுவன் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டான்.
இதையும் படிங்க;- ஓயாமல் உல்லாசத்துக்கு அழைத்த கல்லூரி மாணவன்! டார்ச்சர் தாங்க முடியாத இளம்பெண்! குடும்பத்துடன் செய்த பகீர்