முதலாம் ஆண்டு திருமணநாளை மகன்களுடன் கொண்டாடிய நயன்தாரா - வைரலாகும் போட்டோஸ்
நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் திருமணமாகி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அதனை மகன்களுடன் சந்தோஷமாக கொண்டாடியுள்ளனர்.
நடிகை நயன்தாரா, நானும் ரெளடி தான் படத்தில் நடித்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதலில் விழுந்தார். கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கி, சுமார் 7 ஆண்டுகள் உருகி உருகி காதலித்து வந்த இந்த ஜோடி கடந்தாண்டு ஜூன் மாதம் 9-ந் தேதி திருமண பந்தத்தில் இணைந்தது. மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில், விக்கி - நயன் ஜோடியின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்களும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
திருமணம் முடிந்த பின்னர் மீண்டும் திரையுலகில் பிசியான இந்த ஜோடி, கடந்தாண்டு அக்டோபர் மாதம் தங்களுக்கு குழந்தை பிறந்துவிட்டதாக ஒரு ஷாக்கிங் அறிவிப்பை வெளியிட்டது. திருமணமான நான்கே மாதத்தில் குழந்தையா என அனைவரும் ஷாக் ஆன நிலையில், தாங்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற தகவலை பின்னர் அறிவித்தனர். அவர்கள் விதிகளை மீறி உள்ளதாக சர்ச்சை ஏற்பட்ட நிலையில், தகுந்த ஆதாரங்களை வெளியிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது விக்கி - நயன் ஜோடி.
இதையும் படியுங்கள்... நேத்து தான் திருமணம் நடந்துச்சு! முதலாம் ஆண்டு திருமண நாளில் நயனுக்கு வித்தியாசமாக வாழ்த்து கூறிய விக்கி!
இந்நிலையில், விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடிக்கு திருமணமாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக நயன்தாரா, தன் குழந்தைகள் உயிர் மற்றும் உலகத்துடன் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்களுடன் எமோஷனல் பதிவு ஒன்றையும் போட்டுள்ளார் விக்னேஷ் சிவன். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : “என் உயிரோட ஆதாரம் நீங்கள்தானே. ஏற்ற, இறக்கங்கள், எதிர்பாராத பின்னடைவுகள், சோதனை நேரங்கள் நிறைந்ததாக இந்த ஓராண்டு இருந்தாலும், அபரிமிதமான அன்பும் பாசமும் கொண்ட குடும்பத்தைப் பார்க்க வீட்டிற்கு வருவது நம்பிக்கையை மீட்டெடுக்கும் விதமாக இருந்தது.
நாம் அடைய விரும்பும் கனவுகள் மற்றும் இலக்குகளை நோக்கி ஓடுவதற்கான அனைத்து ஆற்றலையும் குடும்பம் அளிக்கிறது. குடும்பம் கொடுக்கும் பலம் எல்லாற்றையும் மாற்றுகிறது! சிறந்த மனிதர்களால் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். ஒரு நல்ல வாழ்க்கையை கொடுக்க பாடுபடுவது தான் என்னை போன்றவர்களுக்கு தேவையான ஊக்கம்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். அவரின் இந்த பதிவுக்கு லட்சக்கணக்கில் லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... ஏ.ஜி.எஸ் திரையரங்கில் 'பொன்னியின் செல்வன்-2' சிறப்புக்காட்சி! யார் யாருக்கு தெரியுமா?