Tamil News Live Updates: பிப்ரவரி 18ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகை..!
Jan 30, 2024, 6:04 PM IST
![Breaking Tamil News Live Updates on 30 january 2024](https://static.asianetnews.com/images/default-img/default/default-image_768x330xt.jpg)
![Breaking Tamil News Live Updates on 30 january 2024](https://static-gi.asianetnews.com/images/01hmt8rr5fkn36gpk3370n0vcm/asianet-news--13-_900x450xt.jpg)
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ‘என் மண்,என் மக்கள்’ பாதயாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். கடந்த 2 மாதத்தில் 3-வது முறையாக பிரதமர் மோடி தமிழகம் வருவது குறிப்பிடத்தக்கது.
6:04 PM
நாளை நடைமுறைக்கு வரும் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்: பொதுமக்களுக்கு குட் நியூஸ்!
தமிழக அரசின் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது
5:18 PM
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக பீகார் நீதிமன்றம் சம்மன்!
சனாதனத்தை இழிவுபடுத்தி பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக பாட்னா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது
4:52 PM
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: அமலாக்கத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
4:05 PM
GOAT ஷூட்டிங் முடிந்ததும் மாநாடுடன் அலப்பறையாக அரசியல் பயணத்தை தொடங்கும் விஜய் - அதுவும் இந்த ஊரில் இருந்தா?
நடிகர் விஜய் அரசியலில் நுழைய உள்ள நிலையில், முதற்கட்டமாக ரசிகர்களை திரட்டி பிரம்மாண்ட மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டு இருக்கிறாராம்.
2:56 PM
எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு 25 ஆயிரம் தள்ளுபடி.. ஓலா ஸ்கூட்டர் அதிரடி ஆஃபர்.. ஆர்டர்கள் குவியுது! முந்துங்க!!
மின்சார ஸ்கூட்டர் வாங்குபவர்களுக்கு அருமையான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஓலா நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆஃபர்களை வெளியிட்டுள்ளது.
2:17 PM
மருதநாயகம் முதல் KH 233 வரை... கமல்ஹாசனின் கைவிடப்பட்ட படங்கள் மட்டும் இத்தனையா? முழு லிஸ்ட் இதோ
கோலிவுட்டில் சிறுவயதில் இருந்தே நடித்து வரும் கமல்ஹாசன் நடிப்பில் உருவாவதாக இருந்து கைவிடப்பட்ட தமிழ் படங்களின் பட்டியலை பார்க்கலாம்.
2:00 PM
திருப்பதி முதல் ராமேஸ்வரம் வரை.. கம்மி விலையில் ஆன்மீக சுற்றுலா.. ஐஆர்சிடிசி டூர் டிக்கெட் எவ்வளவு?
தென்னிந்தியாவில் பிரசித்தி பெற்ற கோயில்களுக்குச் செல்வதற்கான அருமையான வாய்ப்பை இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் குறித்த விலை மற்றும் விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.
1:31 PM
பாஜக தலைவர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொலை வழக்கு: 15 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!
பாஜக தலைவர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொலை வழக்கில் 15 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
1:17 PM
அகவிலைப்படி 4% உயர்வு + 50 சதவீதம் உறுதி.. அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் மெகா பரிசு..
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அகவிலைப்படி 4% அதிகரிக்கும்.
1:07 PM
கண் பார்வையை இழந்தாலும் மன உறுதியை இழக்காத ராணுவ வீரர்: ஏ.ஐ.தொழில்நுட்பம் மூலம் சாதனை!
லெப்டினன்ட் கர்னல் துவாரகேஷ் தனது கண்பார்வையை இழந்த போதிலும், மன உறுதியை இழக்காமல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் சாதித்து வருகிறார்
12:48 PM
வீடியோ பார்த்தால் பணம் கொட்டும்.. போலீசாரை மிரட்டும் MYV3Ads எம்.டி சத்யானந்த்? அதிர வைக்கும் ஆடியோ.!
யூடியூபில் விளம்பரம் பார்த்தால், வருமானம் கொட்டும் என்று தனியார் யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து முதலீட்டாளர்கள் போராட்டம் நடத்தியது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
12:02 PM
மதவெறியை விலக்கி மானுடம் போற்றுவோம்: திமுக மதநல்லிணக்க உறுதிமொழி!
மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி திமுகவினர் மதநல்லிணக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
11:41 AM
பிப்ரவரி 18 ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
பிரதமர் மோடி பிப்ரவரி 18 ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
11:27 AM
பிரபல தமிழ் நடிகர் கட்டிய தாலி... ரகசிய திருமணம் செய்துகொண்டாரா நடிகை அனுபமா? பின்னணி என்ன?
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிசியாக நடித்து வரும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் கழுத்தில் தாலியுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.
11:14 AM
மாலத்தீவு சுற்றுலா தரவரிசை: 5ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா!
மாலத்தீவு சுற்றுலா தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த இந்தியா, இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் ஏற்பட்ட விரிசலையடுத்து 5ஆவது இடத்திற்கு சென்றது
11:10 AM
பாமர மக்கள் தான் இவங்க டார்கெட்.. விஸ்வரூபம் எடுத்த MyV3ads விவகாரம்.. கொங்கு மண்டலத்தில் தொடரும் மோசடிகள்..
10:38 AM
தீயாய் பரவிய பிக்பாஸ் அபிராமியின் நிர்வாண வீடியோ! பாலிவுட்டை தொடர்ந்து கோலிவுட்டிலும் புயலை கிளப்பிய Deep Fake
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அபிராமி வெங்கடாசலத்தின் Deep Fake வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருவது கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
10:14 AM
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் தவறி விழுந்த பயணி படுகாயம்
செங்கல்பட்டு குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த பயணி ஒருவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
9:45 AM
பணம் அனுப்ப போறீங்களா.. பணப் பரிமாற்ற விதிகள் பிப்ரவரி 1 முதல் மாறப்போகுது! மறக்காம படிங்க.!!
புதிய பணப் பரிமாற்ற விதிகள் பிப்ரவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் இவ்விதிமுறைகளை அறிந்து கொள்வது அவசியம்.
9:33 AM
கோட் பட இயக்குனர் வெங்கட் பிரபுவை காணவில்லை... பிரபல வில்லன் நடிகரின் பதிவால் பதறிப்போன ரசிகர்கள்
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெங்கட் பிரபுவை காணவில்லை என பிரபல வில்லன் நடிகர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
9:17 AM
நீலகிரி மக்களவை தொகுதி.. ஆ.ராசாவை வீழ்த்த பாஜக தேசிய தலைமை களமிறக்கப்போகும் வேட்பாளர் யார் தெரியுமா?
வரும் மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவை எதிர்த்து பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
9:12 AM
பெற்றோர்கள் முதல் டெலிவரி பாய்ஸ் வரை.. அனைவருக்கும் ஏற்ற கம்மி பட்ஜெட் டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இவை..
இந்தியாவில் தற்போது கிடைக்கும் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் அவற்றின் விலை, சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானியங்களுடன் குறைந்த விலையில் வாங்கலாம்.
9:04 AM
மனித மூளைக்குள் சிப்பை பொருத்திய எலான் மஸ்க்கின் நியூராலிங்க்.. சோதனை நபர் எப்படி இருக்கிறார்.?
உலகின் மிகப்பெரிய தொழிலதிபரான எலான் மஸ்க்கின் நியூராலிங்க் மனிதர்களில் முதல் முறையாக மூளை சிப்பை பொருத்துகிறது.
8:43 AM
மைனஸ் டிகிரி குளிரில் மண்டியிட்டு புரபோஸ் செய்த நடிகர்... காதலை ஏற்று திருமணத்துக்கு ஓகே சொன்ன எமி ஜாக்சன்
மிஷன் பட நடிகை எமி ஜாக்சன் தன்னுடைய காதலன் எட் வெஸ்ட்விக்கின் புரபோஸலை ஏற்று அவரை மணமுடிக்க சம்மதம் தெரிவித்து உள்ளார்.
7:58 AM
என்னது! பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா? ஆளுநரின் கருத்துக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி சரியான பதிலடி!
தமிழ்நாட்டில் பிரதமரின் வீடு கட்டும் திட்டம் சரியாகச் செயல்படுத்தவில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனத்திற்கு அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கமளித்துள்ளார்.
7:22 AM
Power Shutdown in Chennai: சென்னையில் முக்கிய இடங்களில் இன்று மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கானு பாருங்க.!
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தி.நகர், அடையார் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
7:21 AM
TNPSC Exam Group 4 : டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு எப்போது தெரியுமா? வெளியான அறிவிப்பு.. காலியிடங்கள் எத்தனை?
வி.ஏ.ஒ., இளநிலை உதவியாளர் உட்பட 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.