Asianet News TamilAsianet News Tamil

மனித மூளைக்குள் சிப்பை பொருத்திய எலான் மஸ்க்கின் நியூராலிங்க்.. சோதனை நபர் எப்படி இருக்கிறார்.?

உலகின் மிகப்பெரிய தொழிலதிபரான எலான் மஸ்க்கின் நியூராலிங்க் மனிதர்களில் முதல் முறையாக மூளை சிப்பை பொருத்துகிறது.

Using Neuralink, Elon Musk implants the first brain chip in a human-rag
Author
First Published Jan 30, 2024, 8:56 AM IST

2016 ஆம் ஆண்டில் எலான் மஸ்க் இணைந்து நிறுவிய நியூரோடெக்னாலஜி நிறுவனம் மூளைக்கும், கணினிகளுக்கும் இடையே நேரடி தொடர்பு சேனல்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதுதொடர்பாக எலான் மஸ்க் வெளியிட்டுள்ள பதிவில், “தனது நியூராலிங்க் ஸ்டார்ட்அப், அதன் முதல் மனித நோயாளிக்கு மூளை உள்வைப்பை நிறுவியதாகவும்,அது சிறப்பான முறையில் முடிந்தது. அவர் தற்போது குணமடைந்து வருகிறார். இதன் ஆரம்ப முடிவுகள் நம்பிக்கைக்குரிய நியூரான் ஸ்பைக் கண்டறிதலைக் காட்டுகின்றன” என்றும் தெரிவித்துள்ளார்.

மனித திறன்களை மிகைப்படுத்துவது, ALS அல்லது பார்கின்சன் போன்ற நரம்பியல் கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பது மற்றும் ஒரு நாள் மனிதர்களுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையே ஒரு கூட்டுவாழ்வு உறவை அடைவதே லட்சியம் என்று எலான் மஸ்க் ஏற்கனவே கூறியிருந்தார் என்பது கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும். கடந்த ஆண்டு தொடக்கத்தில் அதன் மூளை சிப்புகளை மக்களிடம் பரிசோதிக்க அமெரிக்க கட்டுப்பாட்டாளர்களிடமிருந்து ஒப்புதல் பெற்றதாகக் கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.

16ஜிபி ரேம்.! 32 MP செல்ஃபி கேமரா! ரூ.4800 மதிப்புள்ள OTT இலவசம்! 10 ஆயிரம் கூட கிடையாது இந்த ஸ்மார்ட்போன்!

Follow Us:
Download App:
  • android
  • ios