TNPSC Exam Group 4 : டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு எப்போது தெரியுமா? வெளியான அறிவிப்பு.. காலியிடங்கள் எத்தனை?
தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு ஆண்டுதோறும் குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
வி.ஏ.ஒ., இளநிலை உதவியாளர் உட்பட 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு ஆண்டுதோறும் குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஒரே தேர்வாக நடத்தப்பட்டு, நேர்காணல் எதுவும் இல்லாமல் தேர்வாகும் அரசுப் பணி என்பதால், இந்த தேர்வுக்கு தேர்வர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான குரூப்-4 தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அரசு அதிரடி அறிவிப்பு; 15 நாட்களில் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- 6.244 பணி இடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு ஜூன் 9ம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணிவரை நடைபெறுகிறது. குரூப்-4 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க பிப்ரவரி 28ம் தேதி கடைசி நாள். http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இதையும் படிங்க;- 5,547 காலியிடங்களை நிரப்ப உள்ள எஸ்பிஐ வங்கி.. சம்பளம் எவ்வளவு தெரியுமா?
விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள மார்ச் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக தேர்வு அறைக்குள் செல்போன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை தங்களுடன் கொண்டு வர கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.