Asianet News TamilAsianet News Tamil

போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அரசு அதிரடி அறிவிப்பு; 15 நாட்களில் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், அரசு சார்பில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளில் சேர விண்ணப்ப தேதியை தமிழக அரசு அறிவித்துள்ளது.

Tamil Nadu Government Free Coaching Courses Application Date Notification for Competitive Exams vel
Author
First Published Jan 27, 2024, 12:38 PM IST

தமிழக அரசின் கூடுதல் தலைமைச செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் பயிற்சி வகுப்புகள், பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் 500 இடங்களுக்கும், சென்னை சேப்பாக்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 இடங்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.

மேற்படி போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வுர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணையவழியாக விண்ணப்பங்கள் பெற்று சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை 6 மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் தேர்வர்கள் குறைந்த பட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 1 - 1 - 2024 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேற்படி போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவும், தங்கும் வசதிகளும் இல்லை.

வடலூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலரை கண்மூடித்தனமாக தாக்கிய இளைஞர்கள்; வீடியோ வெளியாகி பரபரப்பு

பயிற்சியில் சேர விரும்பும் தேர்வர்கள் www.cecc.in வாயிலாக 29 - 01 - 2024 முதல் 12 - 02 - 2024 வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044 - 25954905 மற்றும் 044 - 28510537 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ள்ளலாம்.

28 பதக்கம் வாங்கிய தமிழகத்திற்கு 20 கோடி, 1 பதக்கம் கூட பெறாத குஜராத்திற்கு 200 கோடியா? அமைச்சர் பெரியசாமி

10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப தேர்வர்கள் தெரிவு செய்யப்பட்டு, தேர்வர்களின் விவரங்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியிடப்படும். மார்ச் மாதம் முதல் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios