Published : Jun 02, 2023, 07:11 AM ISTUpdated : Jun 06, 2023, 09:13 AM IST

Coromandel train accident highlights : தண்டவாளங்களை சீரமைக்கும் பணி தீவிரம்

சுருக்கம்

ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 294 ஆக உயர்ந்துள்ளது. ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தண்டவாளங்களை சீரமைக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Coromandel train accident highlights : தண்டவாளங்களை சீரமைக்கும் பணி தீவிரம்

11:59 PM (IST) Jun 03

ஒடிசா விபத்து களத்தில் தமிழக அமைச்சர்கள்.. திடீரென ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குடன் சந்தி​ப்பு !!

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் சந்தித்து பேசினர்.

11:19 PM (IST) Jun 03

Odisha Train Accident: விமான கட்டணத்தை உயர்த்த வேண்டாம்.. விமான போக்குவரத்து அமைச்சகம் அதிரடி உத்தரவு

சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் (MoCA) அனைத்து விமான நிறுவனங்களுக்கும் கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

10:52 PM (IST) Jun 03

காதலிக்க மறுத்த பெண்.. ஒருதலை காதலன் எடுத்த விபரீத முடிவு - காதலிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

தன்னை காதலிக்க மறுத்த பெண்ணை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

10:47 PM (IST) Jun 03

மைக்கை தூக்கி எறிந்த முதல்வர்

முதல்வர் அசோக் கெலாட் நாற்காலியில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தபோது, ஹேண்ட் மைக் திடீரென வேலை செய்யாமல் போனது. இதனால் எரிச்சல் அடைந்த அவர் பார்மர் மாவட்ட ஆட்சியர் நின்றிருந்த தனது இடப்பக்கம் மைக்கை கோபமாக எறிந்தார். கீழே விழுந்த மைக்கை கலெக்டர் எடுத்தார். அதற்குப் பதிலாக முதல்வருக்கு மற்றொரு மைக் வழங்கப்பட்டது.

வேலை செய்யாத மைக்கை எரிச்சலுடன் தூக்கி எறிந்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்!

 

10:42 PM (IST) Jun 03

செவ்வாய் தோஷ வழக்கு

செவ்வாய் தோஷம் இருப்பதாகச் சொல்லி பெண்ணை திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றிய வழக்கில் உ.பி. உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் பார்க்கச் சொன்ன உ.பி. உயர் நீதிமன்றம்... தடை போட்டது உச்ச நீதிமன்றம்!

10:36 PM (IST) Jun 03

ரயில் விபத்துக்கு பாஜக மட்டுமே பொறுப்பு.! இந்தியாவை காப்பாற்ற கூடிய ஒரே தலைவர் ஸ்டாலின் - ஆ.ராசா பேச்சு

ரயில் விபத்தில் மத்திய அரசு ஸ்தம்பித்துள்ளது. மத்திய அரசு விளம்பரம் செய்வதிலேயே குறியாக உள்ளது. கவாச் விவகாரத்தில் ஏன் பிரதமர் கவனம் செலுத்தவில்லை ? என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஆ.ராசா.

09:21 PM (IST) Jun 03

Samsung மொபைலில் கேமரா மங்கலா இருக்கா.? நோ கவலை.! தீர்வு சொன்ன சாம்சங் நிறுவனம்

சாம்சங் கேலக்ஸி எஸ் 23 தொடர்பாக தற்போது சாம்சங் நிறுவனம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.

08:17 PM (IST) Jun 03

இறுகிய முகத்துடன் போன் போட்ட பிரதமர் மோடி! யாருக்கு? ரயில் விபத்து நடந்த இடத்தில் சம்பவம்

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன.

07:37 PM (IST) Jun 03

“மதம் என பிரிந்தது போதும்.. ஒடிசா ரயில் விபத்து! ரத்தம் கொடுக்க குவிந்த இளைஞர்கள்” - நெகிழ்ச்சி சம்பவம்

ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரத்தம் கொடுப்பதற்காக உள்ளூர் மக்கள் திரளாக வந்து வரிசையில் நின்று ரத்தம் கொடுத்தனர்.

06:53 PM (IST) Jun 03

" எங்கள் வாழ்நாளில் இவ்வளவு உடல்களை பார்த்ததில்லை": ஒடிசா தீயணைப்பு அதிகாரி சொன்ன அதிர்ச்சி தகவல்..

கொரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தின் மீட்பு பணிகளில் ஈடுபட்ட ஒடிசா தீயணைப்பு துறையின் உயர் அதிகாரி பல அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார்.

06:35 PM (IST) Jun 03

பாதி சம்பளத்தை கொடுப்போம்!: வருண் காந்தி வலியுறுத்தல்

ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சம்பளத்தில் ஒரு பகுதியை வழங்குமாறு பாஜக எம்.பி. வருண் காந்தி சக எம்.பி.க்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

பாதி சம்பளத்தை ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் கொடுங்க: வருண் காந்தி வலியுறுத்தல்

06:31 PM (IST) Jun 03

ரயில் விபத்தில் தமிழர்கள் எத்தனை பேர் பலி.? ஒடிசாவில் இருக்கும் தமிழ்நாடு அதிகாரிகள் சொன்ன முக்கிய தகவல்!!

ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இந்த ரயிலில் பயணித்த தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு என்னவானது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

06:27 PM (IST) Jun 03

“வேதனையான சம்பவம்.. குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்” பிரதமர் மோடி எச்சரிக்கை

ஒடிசாவில் மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளானது வேதனையான சம்பவம் என்றும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு விரிவான ஏற்பாடு செய்துள்ளது என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

05:51 PM (IST) Jun 03

ஒடிசா விபத்தில் உயிர் பிழைத்த 250 பயணிகள்: சிறப்பு ரயிலில் சென்னைக்கு வரும் 133 பேர் - முழு விபரம்

ஒடிசா விபத்தில் உயிர் பிழைத்த 250 பேர் சிறப்பு ரயில் மூலம் அவரவர்கள் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர்.

05:46 PM (IST) Jun 03

மோசமான ரயில் விபத்துக்கு பிறகு தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்த ரயில்வே அமைச்சர்கள் யார் யார்?

இந்தியாவில் நடந்த பெரிய ரயில் விபத்துக்கு பிறகு ராஜினாமா செய்த ரயில்வே அமைச்சர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்

05:15 PM (IST) Jun 03

ஒடிசா கோர ரயில் விபத்து: ஆய்வு செய்த பிரதமர் மோடி.. அடுத்ததாக மருத்துவமனைக்கு விரைவு

விபத்து நிகழ்ந்த இடமான பாலசோர் பகுதியில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார்.

04:49 PM (IST) Jun 03

உஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் கசிந்ததா? சீன விஞ்ஞானி சொன்ன அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் முதன்முதலில் சீனாவின் உஹான் நகரத்தில் தான் கண்டறியப்பட்டது.

04:18 PM (IST) Jun 03

நிரம்பி வழியும் சவக் கிடங்குகள்

பயங்கர ரயில் விபத்து நடந்துள்ள ஒடிசா மாநிலத்தில் சவக் கிடங்குகள் நிரம்பி வழிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

04:16 PM (IST) Jun 03

ஒடிசாவில் பாஜக உதவிக் குழு

ஒடிசாவில் இருநூறுக்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்த ரயில் விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தமிழக பாஜக சார்பில் உதவிக்கு குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர்.

ஒடிசா ரயில் விபத்து நடந்த இடத்துக்கு விரையும் பாஜக உதவிக் குழு: அண்ணாமலை தகவல்

02:12 PM (IST) Jun 03

ஒடிசா ரயில் விபத்து : மீட்பு பணிகள் நிறைவு.. பலி எண்ணிக்கை எவ்வளவு? ரயில்வே அமைச்சர் சொன்ன அதிகாரப்பூர்வ தகவல்

விபத்துக்கான காரணம் மற்றும் விவரங்களைப் பெற முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று ரயில்வே அமைச்சர் அறிவித்தார்.

01:33 PM (IST) Jun 03

“ கோரமண்டல் ரயில் விபத்து நடக்கும் சில நிமிடங்களுக்கு முன்பு..” ரயில்வே அதிகாரிகள் சொன்ன புதிய தகவல்கள்

விபத்து நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கோரமண்டல் ரயில் தவறான பாதையில் சென்றதால் விபத்து நடந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

12:57 PM (IST) Jun 03

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தயார் நிலையில் 70 படுக்கைகள்

சென்னை  ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 70 ஐசியு படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிக்சை அளிக்க தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் 50 பேர் கொண்ட மருத்துவ குழு தயார் நிலையில் உள்ளது.

12:54 PM (IST) Jun 03

288 பேர் பலி செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது! தமிழகத்தை சேர்ந்தவர்களின் நிலை என்ன? டிடிவி.தினகரன்.!

தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகள்  நிலை குறித்து அறிந்து உரிய  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

கோரமண்டல் விரைவு ரயில் விபத்து

12:53 PM (IST) Jun 03

ஒடிசா சென்றடைந்தார் உதயநிதி

ஒடிசா ரயில் விபத்து பகுதியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள, அமைச்சர் உதயநிதி மற்றும் பலர் ஒடிசாவுக்கு சென்றடைந்தனர். 

12:02 PM (IST) Jun 03

இந்தியாவின் 3-வது மிகப்பெரிய ரயில் விபத்து : உயிரிழந்தவர்களுக்கு உலக தலைவர்கள் இரங்கல்..

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உலகம் முழுவதும் இருந்து தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

11:22 AM (IST) Jun 03

விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் பயணித்தவர்கள் யார் யார்? பயணிகளின் முழு பட்டியல் வெளியானது

3 ரயில்கள் விபத்தில் சிக்கியதால் கோரமண்டல் ரயில் விபத்து வரலாற்றில் பதிவான மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. 

11:20 AM (IST) Jun 03

சிறப்பு ரயில் புறப்பட்டது!!

ஒடிசா மாநிலம் பத்ரக் பகுதியிலிருந்து சிறப்பு ரயில் 250 பேருடன் புறப்பட்டது. சென்னையைச் சேர்ந்த 133 பயணிகள் உட்பட 250 பேர் பயணம். நாளை காலை 9 மணிக்கு இந்த ரயில் சென்னை வந்தடையும். பிரம்மாபூர் , விசாகப்பட்டினம் , ராஜமுந்திரி , விஜயவாடா வழியாக சென்னைக்கு வருகிறது. 

11:15 AM (IST) Jun 03

ரயில் விபத்து நடந்த இடத்திற்கு பிரதமர் மோடி விரைகிறார்!!

பிரதமர் இன்று ஒடிசா செல்கிறார். முதலில் பாலசோரில் விபத்து நடந்த இடத்தை பார்வையிடும் அவர், பின்னர் கட்டாக்கில் உள்ள மருத்துவமனைக்குச் செல்கிறார்.

10:45 AM (IST) Jun 03

ரயில் விபத்து - பயணிகள் பட்டியல்!

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து - அதில் பயணம் செய்த பயணிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

10:44 AM (IST) Jun 03

இது முதன்முறை அல்ல.. 2009-ம் ஆண்டிலும் இதே கோரமண்டல் ரயில் தடம் புரண்டது.. அந்த விபத்து பற்றி தெரியுமா?

நேற்று விபத்தில் சிக்கிய இதே கோரமண்டல் ரயில் பிப்ரவரி 13, 2009 அன்று ஒடிசாவில் விபத்துள்ளானது. துரதிர்ஷ்டவசமாக அந்த விபத்து நடந்ததும் வெள்ளிக்கிழமை தான்.

10:44 AM (IST) Jun 03

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து.. ரத்து செய்யப்பட ரயில்கள் விவரம்

10:21 AM (IST) Jun 03

ஷாக்கிங் நியூஸ்.. கோரமண்டல் விரைவு ரயில் விபத்து.. தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் பலி?

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரயில் நிலையம் அருகே எதிர்பாராதவிதமாக கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 35 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 288ஆக உயர்ந்துள்ளது. 

ரயில் விபத்து

 

10:11 AM (IST) Jun 03

Coromandel Train Accident : இந்தியாவில் நடந்த மிக மோசமான ரயில் விபத்து : அடுக்கடுக்காக எழும் கேள்விகள்..

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. 

09:54 AM (IST) Jun 03

ரயில் விபத்து - முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு!

ரயில் விபத்து - முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு!

 

09:31 AM (IST) Jun 03

தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 35 பேர் உயிரிழப்பு

 

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரயில் நிலையம் அருகே எதிர்பாராதவிதமாக கோரமண்டல் விரைவு ரயில், யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு ரயில், சரக்கு ரயில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 288ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தேதார் எண்ணிக்கை 1000ஐ தாண்டியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 35 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

08:54 AM (IST) Jun 03

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து.. 43 ரயில்களின் சேவை ரத்து.. 38 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்.!

ஒடிசா ரயில் விபத்து காரணமாக பாலசோர் வழித்தடத்தில் இயக்கக்கூடிய 43 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

ஒடிசா ரயில் விபத்து

 

08:24 AM (IST) Jun 03

தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு

ஒடிசா ரயில் விபத்து! உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு! - அரசு சார்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 

 

08:14 AM (IST) Jun 03

விபத்து நடந்த இடத்தில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

ஒடிசாவின் பாலசோர் பகுதியில் நேற்றிரவு கோரமண்டல், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்நிலையில், ரயில் விபத்து நடந்த இடத்தில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்து வருகிறார். 

08:12 AM (IST) Jun 03

ரயில் விபத்து.. மீட்டு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் NDRF

ஒடிசாவின் பாலசோர் பகுதியில் நேற்றிரவு கோரமண்டல், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்நிலையில், NDRF குழுக்கள் மற்றும் உள்ளூர் மக்கள் மீட்பு பணி ஈடுபட்டு வருவது தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 

 

07:44 AM (IST) Jun 03

ஒடிசா ரயில்கள் விபத்து.. பாஜகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து.. ஜே.பி. நட்டா அறிவிப்பு

ஒடிசா ரயில் விபத்து காரணமாக நாடு முழுவதும் பாஜகவின் அனைத்து நிகழ்ச்சிகளும், இன்று ரத்து செய்யப்படுவதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார். 


More Trending News