Asianet News TamilAsianet News Tamil

288 பேர் பலி செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது! தமிழகத்தை சேர்ந்தவர்களின் நிலை என்ன? டிடிவி.தினகரன்.!

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் மேலும் இரண்டு ரயில்கள் இந்த கோரவிபத்தில் சிக்கியதால்  அதிக உயிரிழப்புகளும், 900க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

288 people died in the train accident... Shocking and painful! TTV Dhinakaran
Author
First Published Jun 3, 2023, 12:23 PM IST

தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகள்  நிலை குறித்து அறிந்து உரிய  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த சென்னை-கோரமண்டல்  விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே விபத்துக்குள்ளானதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர் என்ற செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

288 people died in the train accident... Shocking and painful! TTV Dhinakaran

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் மேலும் இரண்டு ரயில்கள் இந்த கோரவிபத்தில் சிக்கியதால்  அதிக உயிரிழப்புகளும், 900க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் இருந்து செல்லும் அமைச்சர்கள், அதிகாரிகள் கொண்ட குழுவினர் தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகள்  நிலை குறித்து அறிந்து உரிய  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

288 people died in the train accident... Shocking and painful! TTV Dhinakaran

உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், காயம் அடைந்தவர்கள் விரைவாக குணம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணமும், அரசு வேலை வாய்ப்பும் வழங்க  மத்திய, மாநில அரசுகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios