Asianet News TamilAsianet News Tamil

“மதம் என பிரிந்தது போதும்.. ஒடிசா ரயில் விபத்து! ரத்தம் கொடுக்க குவிந்த இளைஞர்கள்” - நெகிழ்ச்சி சம்பவம்

ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரத்தம் கொடுப்பதற்காக உள்ளூர் மக்கள் திரளாக வந்து வரிசையில் நின்று ரத்தம் கொடுத்தனர்.

Odisha Train Accident People Queue Up To Donate Blood To Those Injured photo goes viral
Author
First Published Jun 3, 2023, 7:33 PM IST

பெங்களூரு- ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டு இருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் விபத்தில் சிக்கியதில் 17 பெட்டிகள் தடம் புரண்டன. இடிபாடுகளில் சிக்கி 288 பயணிகள் பலியாகிவிட்டனர். 900க்கும் அதிகமான பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

ஒடிசாவில் மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளான பகுதியில் பிரதமர் மோடி ஆய்வு செய்தார். ரயில் விபத்துக்குள்ளான பாலாசோர் மாவட்டம் பகனாகா பஜார் பகுதியில் பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து ரயில் விபத்தால் பாதிக்கப்பட்டு கட்டாக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பயணிகளை பிரதமர் மோடி சந்தித்து ஆறுதல் கூறினார்.

Odisha Train Accident People Queue Up To Donate Blood To Those Injured photo goes viral

காயமடைந்தவர்களை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, “விபத்தில் பலர் உயிரிழந்திருப்பது பெரும் வேதனை அளிக்கிறது. வேதனையை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் இறந்தவர்களின் உறவினர்கள் படும் வலியை நான் உணர்கிறேன். அரசின் முழு பலத்தையும் பயன்படுத்தி சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

காயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.விபத்துக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். ஒடிசா ரயில் விபத்துக்கான காரணத்தை கண்டறிய, விரிவான விசாரணை நடத்தப்படும். உண்மை கண்டறியப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்க ஒன்றிய அரசு உதவும்.

இதையும் படிங்க..ரயில் விபத்தில் தமிழர்கள் எத்தனை பேர் பலி.? ஒடிசாவில் இருக்கும் தமிழ்நாடு அதிகாரிகள் சொன்ன முக்கிய தகவல்!!

Odisha Train Accident People Queue Up To Donate Blood To Those Injured photo goes viral

விபத்து நடந்த பாதையில் ரயில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ரயில்வே துறையினர் ஈடுபட்டுள்ளனர். ரயில் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை அரசு ஒருபோதும் கைவிடாது. மீட்பு பணிகளுக்கு உதவிய உள்ளூர் மக்களுக்கு நன்றி” என்றார். விபத்து குறித்து செய்தி அறிந்ததும் உள்ளூர் மக்கள் பலரும் மருத்துவமனைக்கு விரைந்து நீண்ட வரிசையில் நின்று ரத்த தானம் செய்தனர்.

இளைஞர்கள் பலர் விடிய விடிய ரத்த தானம் செய்துள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், உள்ளூர்வாசிகளின் மனித நேயத்தை பலரும் நெஞ்சுருக பாராட்டி நன்றி தெரிவித்து வருகின்றனர். விபத்தில் சிக்கியவர்களை உயிருடன் மீட்க வேண்டும் என்று மீட்புப்படையுடன் தீவிரமாகமாக ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க..ஒரே பாதையில் வந்த ரயில்கள்.. சிக்னல் பிரச்னை.! கோரமண்டல் ரயில் விபத்தில் நடந்தது என்ன?

Follow Us:
Download App:
  • android
  • ios