ஒரே பாதையில் வந்த ரயில்கள்.. சிக்னல் பிரச்னை.! கோரமண்டல் ரயில் விபத்தில் நடந்தது என்ன?
சென்னைக்கு செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் பெட்டிகள் அருகே வந்த ரயிலின் மீது மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில், மேற்கு வங்கத்தில் உள்ள ஷாலிமார் நிலையத்திலிருந்து சென்னைக்கு செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் பெட்டிகள் (வெள்ளிக்கிழமை) மாலை தடம் புரண்டதில் பயணிகள் ரயில் மோதியதில் 50 பேர் இறந்துள்ளனர். 350 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் மற்றும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு ரயில்களும் பக்கவாட்டில் ஒன்றையொன்று தொட்டு, மோதியதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு, அருகில் உள்ள தண்டவாளத்தில் சென்று கொண்டு இருந்த சரக்கு ரயிலின் மீது மோதியது.
மேலும் இந்த சம்பவத்தில் யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸின் 4 பெட்டிகளும் தடம் புரண்டன என்றும் கூறப்படுகிறது. இதனை ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா உறுதிப்படுத்தி உள்ளார். பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா ரயில் நிலையம் அருகே இந்த மோதல் நிகழ்ந்தது.
அதிவிரைவு ரயிலின் கவிழ்ந்த பெட்டிகளுக்குள் பல பயணிகள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்தில் சிக்கிய இரண்டாவது ரயில் பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு ரயில் ஆகும். "இரவு 7 மணியளவில், ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 10-12 பெட்டிகள் பாலேஸ்வர் அருகே தடம் புரண்டு எதிர் பாதையில் விழுந்தன.
சிறிது நேரத்திற்குப் பிறகு, யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் அந்த தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியது. 4 பெட்டிகள்" என்று ரயில்வே செய்தித் தொடர்பாளர் அமிதாப் சர்மா கூறியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் மேலும் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க..Coromandel Train Accident : கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 50 பேர் உயிரிழப்பு; 300 பேர் காயம்!!