Asianet News TamilAsianet News Tamil

உஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் கசிந்ததா? சீன விஞ்ஞானி சொன்ன அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் முதன்முதலில் சீனாவின் உஹான் நகரத்தில் தான் கண்டறியப்பட்டது.

Did the coronavirus leak from a Wuhan lab? Shocking information from a Chinese scientist
Author
First Published Jun 3, 2023, 4:47 PM IST

கொரோனா பரவ தொடங்கி 3 ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும் கொரோனாவின் தோற்றம், கொரோனா வைரஸ் முதன்முதலில் எப்படி பரவ தொடங்கியது என்பது இன்னும் புதிராகவே உள்ளது. சீனாவின் உஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் கசிந்திருக்கலாம் என்று பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் குற்றம்சாட்டி வருகின்றன. எனினும் இந்த குற்றச்சாட்டை சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்த நிலையில் சீன ஆய்வகத்திலிருந்து கோவிட் கசிந்திருக்கக் கூடிய சாத்தியக்கூறுகளை நிராகரிக்கக் கூடாது என்று முன்னாள் சீன அரசாங்க விஞ்ஞானி ஒருவர் தெரிவித்தார். சீனாவின் நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் (CDC) முன்னாள் தலைவரான பேராசிரியர் ஜார்ஜ் காவ், பிபிசி ரேடியோ நிகழ்ச்சியில் பேசிய போது “நீங்கள் எப்போதும் எதையும் சந்தேகிக்கலாம். அது தான் அறிவியல். எதையும் நிராகரிக்க வேண்டாம். ” என்று தெரிவித்தார். உஹான் ஆய்வகத்தில் இருந்து வைரஸ் தோன்றி இருக்கலாம் என்ற சீனாவின் கூறி வரும் நிலையில், சீன விஞ்ஞானியின் இந்த கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

உலக வங்கி தலைவராக பொறுப்பேற்றார் அஜய் பங்கா; இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்

கோவிட் ஆய்வக கசிவு கோட்பாடு

கொரோனா வைரஸ் முதன்முதலில் சீனாவின் உஹான் நகரத்தில் தான் கண்டறியப்பட்டது. சீனாவின் சிறந்த தேசிய ஆய்வகங்களில் ஒன்றாக உஹான் ஆய்வகம் உள்ளது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவின் உளவு அமைப்பான எஃப்.பி.ஐ அமைப்பின் இயக்குனர், கொரோனா வைரஸ் உஹான் ஆய்வகத்தில் இருந்து கசிந்திருக்கலாம் என்று கூறியிருந்தார். ஆனால் பல விஞ்ஞானிகள் கோவிட் ஒரு இயற்கை தோற்றம் கொண்டதாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள்

ஆய்வக கசிவு கோட்பாடு பற்றி சீனா என்ன கூறியுள்ளது?

"லேப் லீக்' என அழைக்கப்படுவது சீனாவுக்கு எதிரான சக்திகளால் உருவாக்கப்பட்ட பொய்யாகும். இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை" என்று இங்கிலாந்தில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்தது.

மேலும் "ஆய்வக கசிவு கோட்பாட்டை மறுவடிவமைப்பதன் மூலம், சீனாவை இழிவுபடுத்துவதில் அமெரிக்கா வெற்றிபெறாது, அதற்கு பதிலாக, அது அதன் சொந்த நம்பகத்தன்மையை மட்டுமே பாதிக்கும். அறிவியல் மற்றும் உண்மைகளை மதிக்குமாறு அமெரிக்காவை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.” என்று தெரிவித்திருந்தது.

செக்ஸ்-ஐ ஒரு விளையாட்டாக அறிவித்த நாடு! அடுத்த வாரம் சாம்பியன்ஷிப் போட்டி தொடக்கம்..

Follow Us:
Download App:
  • android
  • ios