Samsung மொபைலில் கேமரா மங்கலா இருக்கா.? நோ கவலை.! தீர்வு சொன்ன சாம்சங் நிறுவனம்
சாம்சங் கேலக்ஸி எஸ் 23 தொடர்பாக தற்போது சாம்சங் நிறுவனம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
சாம்சங் நிறுவனம், கேலக்ஸி எஸ் 23 சீரிஸை இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிப்ரவரியில் அறிமுகப்படுத்தியது. ஃபிளாக்ஷிப் போன், மேம்பட்ட கேமரா அனுபவத்துடன் வந்தாலும், பல Galaxy S23 மற்றும் Galaxy S23+ பயனர்கள் நெருக்கமான காட்சிகளில் கேமரா மங்கலாக தெரிவதாக புகார் அளித்தனர்.
இப்போது சாம்சங் நிறுவனம், ஐரோப்பாவுக்கான அதன் சமூகப் பக்கத்தில் இந்த சிக்கலை உறுதிப்படுத்தியுள்ளது. மென்பொருள் புதுப்பிப்பு மூலம் இந்த சிக்கலை சரிசெய்யும் வழியில் இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. சாம்சங் இந்த சிக்கலுக்குப் பின்னால் உள்ள காரணத்தையும், மங்கலாக்கப்படுவதைத் தடுப்பதற்கான தீர்வுகளையும் விளக்கியுள்ளது.
Galaxy S23 மற்றும் Galaxy S23+ இலிருந்து எடுக்கப்பட்ட குளோஸ்-அப் ஷாட்களில் சப்ஜெக்ட்டைச் சுற்றியுள்ள பகுதி சற்று மங்கலாகத் தெரிகிறது என்பதை Samsung அதன் சமூகப் பக்கத்தின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. S23 மற்றும் S23+ இல் உள்ள பின்புற வைட்-ஆங்கிள் கேமரா பிரகாசமான துளையை கொண்டது. இது புகைப்படங்களின் பின்னணியை சற்று மங்கலாக்குகிறது என்றும் நிறுவனம் விளக்கியது.
மென்பொருள் அப்டேட் மூலம் இந்த பிரச்சனை சரி செய்யப்படும் என்று சாம்சங் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், கேலக்ஸி எஸ் 23 மற்றும் கேலக்ஸி எஸ் 23 + இல் கேமரா மங்கலான சிக்கலை சரிசெய்ய சாம்சங் சில தீர்வு வழிகளைப் பகிர்ந்துள்ளது. சாம்சங் பயனர்கள் சற்று அதிக தூரத்தில் இருந்து படம் எடுக்க அல்லது படங்களை எடுக்கும்போது மொபைலை செங்குத்தாகப் பிடிக்க பரிந்துரைக்கிறது.
போனை கிடைமட்டமாகவோ அல்லது சாய்வாகவோ வைத்திருப்பது பின்புலத்தை மங்கலாக்குகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்23, கேலக்ஸி எஸ்23+ மற்றும் கேலக்ஸி எஸ்23 அல்ட்ராவை இந்த ஆண்டு பிப்ரவரியில் அறிமுகப்படுத்தியது. Galaxy S23 மற்றும் Galaxy S23+ ஆகியவை 6.6-இன்ச் முழு-HD+ டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே, 48Hz முதல் 120Hz வரையிலான ரிப்ரெஷ் ரேட் போன்ற வசதிகளை கொண்டுள்ளது. இரண்டு போன்களும் குவால்காமின் சமீபத்திய சிப்செட்டின் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பால் இயக்கப்படுகின்றன.
அதாவது கேலக்ஸிக்கான ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 மொபைல் பிளாட்ஃபார்ம். ஒளியியலுக்கு, 50 மெகாபிக்சல் பிரைமரி வைட் ஆங்கிள் சென்சார், 12-மெகா பிக்சல் சென்சார் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் செயல்படுகிறது. அல்ட்ரா-வைட் லென்ஸ், மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா. தொலைபேசிகளில் 12 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் இதில் உள்ளது.
இதையும் படிங்க..44 நிமிடத்தில் சார்ஜ்.! 5 வருடத்துக்கு அப்டேட்.! ஐபோனுக்கே டஃப் கொடுக்கும் Oppo F23 5G எப்படி இருக்கு?