Published : Oct 17, 2023, 07:35 AM ISTUpdated : Oct 17, 2023, 09:04 PM IST

Tamil News Live Updates : 4 மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் கள ஆய்வு

சுருக்கம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் நிலை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்றும்,நாளையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கிறார். 

Tamil News Live Updates : 4 மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் கள ஆய்வு

09:04 PM (IST) Oct 17

ஓய்வு காலத்தில் ஹாப்பியாக இருக்க.. 9.45% வட்டி தரும் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் பணத்தை போடுங்க..

கிட்டத்தட்ட 9 வங்கிகள் பிக்சட் டெபாசிட்  மீதான வட்டியை அதிகரித்து உள்ளது. இதன் மூலம் மூத்த குடிமக்கள் 9.45% வட்டி பெறுகிறார்கள். அதனைப் பற்றி முழுமையாக காணலாம்.

08:53 PM (IST) Oct 17

ஈஷாவில் உமா நந்தினியின் தேவாரப் பண்ணிசை நிகழ்ச்சி.. நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பாடியவர் !!

ஈஷா நவராத்திரி விழாவின் 3-ம் நாளான இன்று (அக்.17) நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவில் தேவாரம் பாடிய பெருமைக்குரிய செல்வி. உமா நந்தினியின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

08:35 PM (IST) Oct 17

Money Transfer : அக்கவுண்ட் நம்பர், IFSC இல்லாமலே இனி பணம் அனுப்பலாம்.. எப்படி தெரியுமா?

இப்போது நீங்கள் கணக்கு எண், IFSC குறியீடு இல்லாமல் பணத்தை மாற்றலாம், எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

06:34 PM (IST) Oct 17

கொஞ்சம் கவனம்.. கூடுதல் பணத்தைச் சேமிக்க உங்கள் பயணத்தை கேன்சல் செய்யாதீர்கள்.. ஏன் தெரியுமா.?

கூடுதல் பணத்தைச் சேமிக்க ரத்துசெய்து பயணம் செய்யாதீர்கள். என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள். 

05:15 PM (IST) Oct 17

புதிய கலர்.. தெறிக்க விடும் அம்சங்கள் - Samsung Galaxy Z Flip 5ன் அட்டகாச வசதிகள் தெரியுமா..

சாம்சங் அதன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் வரிசையில் முக்கிய அம்சத்தில் உலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. Samsung Galaxy Z Flip 5 ஐ அசத்தலான நிறத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

04:53 PM (IST) Oct 17

ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் போனில் உண்டான முக்கிய பிரச்னை.. ஆப்பிளுக்கு புது தலைவலி..

ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் பயனர்கள் சிக்கல்களை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளனர். இது ஒரு பெரிய பிரச்சனையாக தற்போது எழுந்துள்ளது.

04:39 PM (IST) Oct 17

தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம்: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் வரவேற்பு!

தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை விஷ்வ ஹிந்து பரிஷத் வரவேற்றுள்ளது

03:32 PM (IST) Oct 17

வெறும் 15 நொடிகளில் இஸ்ரேலை தாக்கும் ஹமாஸ் ஏவுகணை!

இஸ்ரேல் எல்லை நகரமான ஸ்டெரோட்டை ஹமாஸ் ஏவுகணை வெறும் 15 நொடிகளில் தாக்கிவிடும்

03:14 PM (IST) Oct 17

மாதவிடாய் நேரத்திலும் காம வெறியில் உடலுறவு! துயர வாழ்க்கையின் உச்சம்.. கண்ணீர் விட்டு கதறிய மிருணாள் தாகூர்!

'சீதா ராமம்' பட நடிகை மிருணாள் தாகூர்,  பாலியல் தொழிலாளர்களின் உச்சகட்ட துயர வாழ்க்கை பற்றி, கண்ணீருடன் பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்ட தகவல், தற்போது சமூக வலைதளத்தில் மீண்டும் பேசும் பொருளாக மாறி உள்ளது. மேலும் படிக்க 
   

02:58 PM (IST) Oct 17

26 வார கருவை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி மறுப்பு!

பெண்ணின் 26 வார கருவை கலைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது

02:33 PM (IST) Oct 17

மதுரையில் ரயில்வே நிலத்தை தனியாருக்கு தாரைவார்க்க முயற்சி

மதுரையில் சுமார் ரூ.1200 கோடி மதிப்பிலான ரயில்வே நிலத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியை கைவிட வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்

02:05 PM (IST) Oct 17

‘தல’ அஜித் கழட்டிவிட்ட விக்னேஷ் சிவனுக்கு ‘தல’ தோனி கொடுத்த பிரம்மாண்ட வாய்ப்பு - வாயடைத்துப்போன விக்கி

கிரிக்கெட் உலகின் லெஜண்ட்டாக கருதப்படும் எம்.எஸ்.தோனியை இயக்கிய வாய்ப்பு கிடைத்தது குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

01:28 PM (IST) Oct 17

இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்: மகளின் உடலை கண்டறிய ஆப்பிள் வாட்சை பயன்படுத்திய தந்தை!

ஹமாஸ் அமைப்பின் தாக்குதலில் கொல்லப்பட்ட தனது மகளின் உடலை ஆப்பிள் வாட்ச், செல்போனில் உள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவரது தந்தை கண்டறிந்துள்ளார்

12:41 PM (IST) Oct 17

‘லியோ’ சிறப்பு காட்சி; கைவிரித்த தமிழ்நாடு... அனுமதி கொடுத்த புதுச்சேரி - படையெடுக்கும் தளபதி ரசிகர்கள்

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் சிறப்பு காட்சியை திரையிட புதுச்சேரி அரசு அனுமதி அளித்துள்ளதாக ஆட்சியர் வல்லவன் கூறி உள்ளார்.

12:30 PM (IST) Oct 17

ஓலா, ஊபர் டாக்சி வேலை நிறுத்தத்தால் இதர வாகனங்களின் வாடகை பல மடங்கு உயர்வு..! டிடிவி தினகரன்

ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்காக தனி நலவாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை  நடைமுறைப்படுத்துவதோடு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஓட்டுநர்களின் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். 

12:20 PM (IST) Oct 17

இந்தியா கூட்டணி மக்களவைத் தேர்தலுக்கு மட்டுமே: கமல்நாத்!

இந்தியா கூட்டணி என்பது மக்களவை தேர்தலுக்க்உ மட்டுமே என காங்கிரஸ்  மூத்த தலைவரும், மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வருமான கமல்நாத் தெரிவித்துள்ளார்.
 

11:58 AM (IST) Oct 17

Leo Breaking: 'லியோ' அதிகாலை காட்சிக்கு அனுமதி கோரிய வழக்கு! 4 மணி காட்சிக்கு அனுமதி மறுப்பு!

லியோ படத்தின் அதிகாலை காட்சிக்கு அனுமதி வேண்டும் என தயாரிப்பாளர் லலித் குமார் தொடர்ந்த வழக்கின், தீர்ப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் படிக்க 

11:35 AM (IST) Oct 17

லியோ படத்தின் அதிகாலை 4 மணி காட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் அதிகாலை 4 மணி காட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது

11:25 AM (IST) Oct 17

ஐப்பசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது.
 

10:55 AM (IST) Oct 17

மகாராஷ்டிராவில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விபத்து!

மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது

10:51 AM (IST) Oct 17

ஹமாஸ் வெளியிட்ட முதல் இஸ்ரேல் பெண் பணயக்கைதி வீடியோ!

பணயக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் பெண்ணின் வீடியோவை ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ளனர்

09:39 AM (IST) Oct 17

டிக்கெட் புக்கிங்கிற்கே இப்படியா... கேரளாவில் விஜய் ரசிகர்கள் செய்த மாஸ் சம்பவம் - வைரலாகும் வீடியோ

கேரளாவில் லியோ படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியதை கொண்டாடும் விதமாக விஜய் ரசிகர்கள் நடத்திய பைக் ஊர்வலம் கவனம் ஈர்த்துள்ளது.

08:43 AM (IST) Oct 17

சிவகார்த்திகேயன் செஞ்ச துரோகத்தை மறக்கவும் மாட்டேன்.. மன்னிக்கவும் மாட்டேன் - SK மீது கடும் கோபத்தில் டி.இமான்

நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாகவும், அதனால் அவருடன் இனி பணியாற்ற மாட்டேன் என்றும் இசையமைப்பாளர் டி.இமான் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

07:37 AM (IST) Oct 17

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக தனித்து போட்டியா.? எடப்பாடி பழனிசாமி அறிக்கையால் பரபரப்பு

ஜெயலலிதா மறைவிற்கு  பிறகு எதிரிகளும், துரோகிகளும் எட்டுத் திசைகளிலும் சூழ்ந்து நின்று, அதிமுகவை  அழித்திடத் துடித்த நேரத்தில், அனைத்து சதிகளையும், சூழ்ச்சிகளையும் வீழ்த்தி கழகத்தை மீட்டு, வீறுநடை போடச் செய்திருக்கிறோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

07:37 AM (IST) Oct 17

தமிழகத்தில் வடமாநில இளைஞர்கள் அரசு பணியாற்றுவது இப்படி தானா? முறைகேட்டிற்கு பின்னனியில் இருப்பது யார்.? சீமான்

சுங்கத்துறை பணித்தேர்வினை ரத்து செய்வதோடு, முறைகேட்டில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். 

07:36 AM (IST) Oct 17

உச்சத்தில் இஞ்சி விலை... சரிவில் தக்காளி விலை.! கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு  கொண்டுவரப்படுகிறது. அந்த வகையில் காய்கறிகளின் வரத்தை பொறுத்து விற்பனை விலையில் மாற்றம் செய்யப்படுகிறது.