ஐப்பசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!
ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது.
கேரள மாநிலத்தில் உலக பிரசித்தி பெற்ற ஐய்யப்பன் கோயில் உள்ளது. கேரள பஞ்சாங்கப்படி, துலா மாதம் (ஐப்பசி) பிறப்பையொட்டி, ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைகள் நாளை முதல் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
இன்று திறக்கப்படும் கோயில் நடை, வருகிற 22ஆம் தேதி இரவு 10 மணிக்கு சாத்தப்படும் அன்றுடன் ஐப்பசி மாத பூஜைகள் நிறைவடையும். மீண்டும் சித்திரை ஆட்டத்திருநாள் பூஜைக்காக நவம்பர் 10ஆம் தேதி ஐய்யப்பன் கோயில் நடை திறக்கப்படும்.
ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோயில் நடை திறந்திருக்கும் நாட்களில் நிலக்கல், பம்பை ஆகிய இடங்களில் உடனடி தரிசன முன்பதிவு கவுண்டர்கள் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலக்கல் பகுதியில் தற்காலிக முன்பதிவு மையம் இன்று முதல் செயல்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் வெளியிட்ட முதல் இஸ்ரேல் பெண் பணயக்கைதி வீடியோ!
தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையைத் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துகிறார். பின்னர், செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை 5 நாள்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். வழக்கான பூஜைகளுடன், நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், களசாபிஷேகம், சகஸ்ர காசாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகியவை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.