உயிரைப்பறிக்கும் நீட்டை ஒழிக்கிற காலம் தொலைவில் இல்லை என்று கூறியுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

09:46 PM (IST) Aug 14
08:37 PM (IST) Aug 14
அரியலூர் அருகே கோடங்குடி கிராமத்தில் 100 நாள் வேலை செய்த வாசுகி என்பவர் மயக்க விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
08:13 PM (IST) Aug 14
ஹரியானாவில் நடைபெற்ற பேரணியில் காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்களை அரக்கர்கள் என்று அழைத்தார். இது பாஜகவினரிடம் சலசலப்பை உண்டாக்கி உள்ளது.
08:12 PM (IST) Aug 14
பாலியல் பலாத்கார வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்ணின் அந்தரங்க உறுப்புகளில் காயங்கள் இல்லாததால் பாலியல் துன்புறுத்தல் நடக்கவில்லை என்று கருத முடியாது என்று கூறியுள்ளது.
07:25 PM (IST) Aug 14
பிரதோஷத்தை முன்னிட்டு தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் லிங்க வடிவில் காட்சியளிக்கும் சிவபெருமானுக்கும் நந்திவர்மனுக்கும் சிறப்பு அபிஷேக தீபாராதனை நடைபெற்றது.
06:58 PM (IST) Aug 14
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தொடர்பான மசோதாவுக்கு, விரைவில் ஒப்புதல் அளிக்க கோரி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
06:34 PM (IST) Aug 14
தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால் தமிழகத்திற்கு தண்ணீர் விட வேண்டாம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு பசவராஜ் பொம்மை கடிதம் எழுதியுள்ளார்.
05:59 PM (IST) Aug 14
04:53 PM (IST) Aug 14
ஐடிஆர் தாக்கல் செய்யும் போது வரி விலக்கு அல்லது விலக்கு கோருவதற்கு போலி வாடகை ரசீதுகளைப் பயன்படுத்தினால் கடுமையான அபராதம் விதிக்கப்படலாம்.
04:30 PM (IST) Aug 14
இந்து சமய மற்றும் அறநிலையத் துறை காலியாக உள்ள 7 பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
04:24 PM (IST) Aug 14
தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. சுதந்திர தின விழா நிகழ்வில் இதற்கான விருதை முதல்வா் ஸ்டாலின் வழங்கவுள்ளார்
04:02 PM (IST) Aug 14
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் கைது செய்யப்படவில்லை என அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது
03:53 PM (IST) Aug 14
தமிழ்நாட்டில் இன்று 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
03:48 PM (IST) Aug 14
மொபைல் பயனர்களை அரசாங்கம் எச்சரிக்கிறது. ஆண்ட்ராய்டு 13 மற்றும் பிற பதிப்புகளுக்கு அதிக ஆபத்து எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
02:56 PM (IST) Aug 14
இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை நிலையானதாக வைத்திருக்க முடிவு செய்த பிறகு, ஒரு அரசு வங்கி வீட்டுக் கடன் மற்றும் கார் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது. செயலாக்க கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது.
01:19 PM (IST) Aug 14
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த தொழிலதிபர் குழந்தைகளின் கண் முன்னே தனது மனைவியை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
01:18 PM (IST) Aug 14
குடி எனும் பலிபீடத்திற்கு ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகிக் கொண்டே இருக்கும் நிலையில், டாஸ்மாக் எனும் தடுப்புச் சுவர் எப்போது பொலபொலவென உதிர்ந்து விழும் என முதல்வர் ஸ்டாலினுக்கு நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்
12:39 PM (IST) Aug 14
பிக்பாஸ் பிரபலம் கணேஷ் வெங்கட்ராமன் மனைவி நிஷாவுக்கு எளிமையாக நடந்த வளைகாப்பு நிகழ்வின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
11:36 AM (IST) Aug 14
ஓபிஎஸ், தங்க தமிழ்செல்வன் ஆகியோர் சந்திப்பு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
11:35 AM (IST) Aug 14
ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவரது செல்போன் வெடித்ததால் அவர் காயமடைந்துள்ள அதிர்ச்சிகர சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது
10:26 AM (IST) Aug 14
தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், இப்போதே வாங்கி வைத்துக் கொள்வது நன்மை பயக்கும் என பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்
09:45 AM (IST) Aug 14
நடிகர் அசோக் செல்வன், நடிகை கீர்த்தி பாண்டியன் ஜோடி திருமணம் செய்துகொள்ள உள்ள நிலையில், அவர்களது காதல் மலர்ந்ததன் பின்னணியை தற்போது பார்க்கலாம்.
08:47 AM (IST) Aug 14
08:03 AM (IST) Aug 14
கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி பள்ளிகளில் இன்று இனிப்பு பொங்கல் வழங்கப்படவுள்ளது
07:59 AM (IST) Aug 14
நீட் தேர்வுத் தோல்வியால் மகன் தற்கொலை செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாத தந்தையும் தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
07:24 AM (IST) Aug 14
சென்னையில் மின் பாதை பராமரிப்புப் பணிகளுக்காக தாம்பரம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
07:23 AM (IST) Aug 14
சென்னையில் நேற்று இரவு பெய்த மழையானது இன்று அதிகாலை வரை நீடித்தது. இதன் காரணமாக பள்ளிகள் செயல்படுமா அல்லது விடுமுறை விடப்படுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
07:23 AM (IST) Aug 14
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்பாக பொன்னையன் பேசிய ஆடியோ ஒன்றை வெளியிட்டு எடப்பாடி அணிக்கு அதிர்ச்சி அளித்த நாஞ்சில் கோலப்பன் ஓபிஎஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
07:22 AM (IST) Aug 14
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், நேற்று இரவு தொடங்கிய மழை அதிகாலை வரை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.