சென்னையில் மின் பாதை பராமரிப்புப் பணிகளுக்காக தாம்பரம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணிக்காக மின் தடை
மின்சார பாதையில் பிரச்சனை, புதிய மின்சார போஸ்ட் அமைப்பது, துணை மின் நிலையம் பராமரிப்பு பணிகளுக்கான நாள் தோறும் பல்வேறு இடங்களில் பணிகளானது நடைபெற்று வருகிறது. இதற்காக மின் விநியோகம் தடை செய்யப்படும் அந்த வகையில், திங்கள்கிழமை (14.08.2023) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம்:
பல்லாவரம் கோவளம் தெரு, அதியமான் தெரு, சுபம் நகர், காமாட்சி நகர் கோவிலம்பாக்கம் வடக்குப்பட்டு பிரதான சாலை, பெல் நகர், அண்ணாமலை நகர் ராதா நகர் ஜிஎஸ்டி சாலை, பாலாஜி பவன் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் மின் தடை செய்யப்படவுள்ளது.

தண்டையார்ப்பேட்டை:
காலடிப்பேட்டை TH சாலை, ராஜாக்கடை, திருச்சினாங்குப்பம், எல்லையம்மன் கோவில் தெரு, எண்ணூர் விரைவு சாலை, திலகர் நகர், BKN காலனி, குமரன் நகர், PPD சாலை அத்திப்பட்டு காட்டுப்பள்ளி, சேப்பாக்கம், தமிழ் கொரஞ்சூர், KR பாளையம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின் தடை செய்யப்படவுள்ளது. பராமரிப்பு பணிக்காக காலை 9 மணிக்கு மின் தடை செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பணிகள் விரைவாக முடிவடைந்தால் பிற்பகல் 2 மணிக்கு மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
சென்னையில் கொட்டித்தீர்த்த கன மழை..! இன்று பள்ளிகள் இயங்குமா.? மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
