பிரான்ஸ் நாட்டுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு இருக்கும் பிரதமர் மோடி பாரீஸ் நகரம் சென்றடைந்தார்.

08:41 PM (IST) Jul 13
மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன்கள் இருவரும் மனைவியை விவாகரத்து செய்ய உள்ளதாக, தகவல் வெளியானதை தொடர்ந்து, இதுகுறித்து பிரபல ஊடகம் ஒன்றிற்கு உண்மை என்ன என்பதை கூறியுள்ளார் மயில்சாமியின் மகன் அன்பு. மேலும் படிக்க
06:55 PM (IST) Jul 13
இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'ஜெயிலர்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடலான 'காவாலா' ரிலீஸ் டைம் மற்றும் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் படிக்க
06:55 PM (IST) Jul 13
இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'ஜெயிலர்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடலான 'காவாலா' ரிலீஸ் டைம் மற்றும் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் படிக்க
06:18 PM (IST) Jul 13
எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய புரோமோ வெளியாகி... சீரியல் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. மேலும் படிக்க
06:02 PM (IST) Jul 13
அனைத்திற்கும் ஜிஎஸ்டி போட்டு வரி கட்டியே மாய்ந்து போன நிலைமையில் நாம் இருக்கிறோம் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்
05:02 PM (IST) Jul 13
கனமழையால் தலைநகர் டெல்லி தத்தளித்து வரும் நிலையில், செங்கோட்டையில் வெள்ள நீர் புகுந்துள்ளது
05:02 PM (IST) Jul 13
தள்ளுபடி விலையில் தக்காளி விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது
03:43 PM (IST) Jul 13
டெல்லி வெள்ள நிலைமை மற்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும்.NDRF குழுக்களுக்கு முழுமையான ஒருங்கிணைப்பையும் ஒத்துழைப்பையும் நாங்கள் வழங்கி வருகிறோம். மக்களுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படக்கூடாது என்பதே இலக்கு. தற்போதைய அவசர சூழ்நிலையை சமாளிக்க ஒட்டுமொத்த டெல்லி போலீஸும் செயல்பட்டு வருகிறது
03:39 PM (IST) Jul 13
டெல்லியில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சூழலைக் கருத்தில் கொண்டு 12 குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் இருந்து இதுவரை சுமார் 2500 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
03:35 PM (IST) Jul 13
அம்பாசமுத்திரத்தில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட வழக்கில் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை
03:34 PM (IST) Jul 13
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி சென்றுள்ளார். அங்கு அவர் பாஜக மூத்த தலைவர்களை சந்திக்கவிருப்பதாக கூறப்படுகிறது
03:34 PM (IST) Jul 13
ஆந்திர மாநிலத்தில் அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்து வருகின்றன
03:34 PM (IST) Jul 13
நிலவின் ஆராய்ச்சிக்கு அனுப்பப்படும் சந்திரயான்-3 திட்டம் அனைத்து வகையிலும் வெற்றிபெற வேண்டும் என இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்
03:33 PM (IST) Jul 13
டெபிட் கார்டு இல்லாமல் செல்போன்களில் உள்ள யுபிஐ ஆப் மூலம் ஏடிஎம்-களில் பணம் எடுக்க முடியும்
03:33 PM (IST) Jul 13
கனமழை காரணமாக தண்டவாளங்களில் தேங்கியுள்ள நீர் காரணமாக 406 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன
12:01 PM (IST) Jul 13
இன்று பிறந்தநாள் கொண்டாடும் கவிஞர் வைரமுத்துவுக்கு வாழ்த்து தெரிவிக்க பெசண்ட் நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், பொன்னாடை போற்றி வாழ்த்தினார். அவரின் இந்த பதிவை பார்த்து கொந்தளித்த பாடகி சின்மயி, நீண்ட பதிவின் மூலம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
11:34 AM (IST) Jul 13
டாஸ்மாக் கடைகள் திறப்பில் நேரம் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை என மதுவிலக்கு ஆயுத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
11:02 AM (IST) Jul 13
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள மாவீரன் திரைப்படத்தில் நாயகியாக நடிக்க நடிகை அதிதி ஷங்கர் வாங்கிய சம்பள விவரம் வெளியாகி உள்ளது.
09:05 AM (IST) Jul 13
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் நேற்று இரவு இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது.
08:39 AM (IST) Jul 13
பிரான்ஸ் தேசிய தினத்தில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
08:37 AM (IST) Jul 13
பொறியியல் கலந்தாய்வுக்கான தேதியை இன்று காலை 11 மணிக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிடுகிறார். இந்த ஆண்டு 1.80 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
07:52 AM (IST) Jul 13
சேலம் மத்திய குற்றப் பிரிவு ஆய்வாளர் புஷ்பராணி, உதவி ஆய்வாளர் குணசேகர் ஆகியோருக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.
07:13 AM (IST) Jul 13
சென்னையில் 418வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.