வழக்கம்போலவே எதுக்கு எடுக்குறோம்னே தெரியாம வீரர்களை வாரி குவித்த ஆர்சிபி.. சம்பளத்துடன் கூடிய மொத்த வீரர்களின் லிஸ்ட்

By karthikeyan VFirst Published Dec 20, 2019, 11:53 AM IST
Highlights

விராட் கோலி, டிவில்லியர்ஸ் என்ற இருபெரும் ஜாம்பவான் வீரர்களை பெற்றிருந்தும் இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றிராத அணி ஆர்சிபி. 
 

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளை போல கோர் டீம் சரியாக அமையாததுதான் ஆர்சிபி அணியால் ஐபிஎல்லில் சோபிக்க முடியாமல் தொடர்ந்து சொதப்புவதற்கு காரணம். ஆனால் கோர் டீமை கட்டமைக்க அந்த அணி நிர்வாகம் முயல்வதே இல்லை. அணி நிர்வாகம் என்று சொல்வதற்கே முடியாது. ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும், வீரர்களுடன் சேர்த்து பயிற்சியாளர்களும் மாற்றப்பட்டு கொண்டே இருக்கின்றனர். அதுதான் அந்த அணியால் ஜொலிக்க முடியாமல் போவதற்கு முக்கியமான காரணம். 

ஒவ்வொரு சீசனிலும் எந்தவித நோக்கமுமே இல்லாமல், அந்தந்த நேரத்தில் பரபரப்பாக பேசப்படும் வீரர்களை எடுப்பதும், பின்னர் கழட்டிவிடுவதும் ஆர்சிபி அணியின் வழக்கம். கடந்த சீசனில் வெஸ்ட் இண்டீஸின் அதிரடி வீரர் ஹெட்மயரை பஞ்சாப் அணியுடன் கடும் போட்டி போட்டு எடுத்தது. ஆனால் அவருக்கு தொடர் வாய்ப்புகள் வழங்காமலேயே கழட்டிவிட்டது. இந்த சீசனில் ஹெட்மயரை டெல்லி கேபிடள்ஸ் அணி எடுத்துள்ளது.

வழக்கமாக செய்வதை போலவே, இந்த சீசனிலும், சில வீரர்களை எடுத்துள்ளது. டெல்லி கேபிடள்ஸ் அணி கழட்டிவிட்ட தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸை ரூ.10 கோடிக்கு எடுத்துள்ளது ஆர்சிபி அணி. ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனும், அதிரடி பேட்ஸ்மேனுமான ஆரோன் ஃபின்ச்சை ரூ.4 கோடியே 40 லட்சத்திற்கு எடுத்தது. 

இவர்கள் தவிர, டேல் ஸ்டெய்ன், கேன் ரிச்சர்ட்ஸன், இலங்கையின் இசுரு உடானா ஆகியோரையும் எடுத்துள்ளது. ஷபாஸ் அகமது, ஜோஷுவா பிலிப் மற்றும் கர்நாடக வீரர் பவன் தேஷ்பாண்டே ஆகியோரையும் எடுத்துள்ளது.

இந்த ஏலத்தில் ஆர்சிபி எடுத்ததில் ஃபின்ச் மட்டுமே சரியான தொகை கொடுத்து எடுக்கப்பட்ட உருப்படியான வீரர். மற்றவர்கள், வழக்கம்போலவே ஆர்சிபி அணி எதற்கு எடுத்தோம் என்று தெரியாமல் எடுக்கப்பட்டவர்கள்.

ஐபிஎல் 2020 - மற்ற அணிகள்: சென்னை சூப்பர் கிங்ஸ் | டெல்லி கேபிடள்ஸ் | மும்பை இந்தியன்ஸ் | ராஜஸ்தான் ராயல்ஸ் | சன்ரைசர்ஸ் ஹைதராபாத் | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | கிங்ஸ் லெவன் பஞ்சாப்

ஐபிஎல் 13வது சீசனுக்கான ஆர்சிபி வீரர்களின் பட்டியலை அவர்களின் சம்பளத்துடன் பார்ப்போம்.

1. விராட் கோலி(கேப்டன்) - ரூ. 17 கோடி

2. டிவில்லியர்ஸ்(பேட்ஸ்மேன்) - ரூ.11 கோடி

3. தேவ்தத் படிக்கல்(பேட்ஸ்மேன்) - ரூ.20 லட்சம்

4. குர்கீரத் சிங்(பேட்ஸ்மேன்) - ரூ.50 லட்சம்

5. மொயின் அலி(ஆல்ரவுண்டர்) - ரூ.1.7 கோடி

6. முகமது சிராஜ்(ஃபாஸ்ட் பவுலர்) - ரூ.2.6 கோடி

7. நவ்தீப் சைனி(ஃபாஸ்ட் பவுலர்) - ரூ.3 கோடி

8. பார்த்திவ் படேல்(விக்கெட் கீப்பர்) - ரூ.1.7 கோடி

9. பவன் நேகி(ஆல்ரவுண்டர்) - ரூ.1 கோடி

10. ஷிவம் துபே(ஆல்ரவுண்டர்) - ரூ.5 கோடி

11. உமேஷ் யாதவ்(ஃபாஸ்ட் பவுலர்) - ரூ.4.2 கோடி

12. வாஷிங்டன் சுந்தர்(ஆல்ரவுண்டர்) - ரூ.3.2 கோடி

13. சாஹல்(ஸ்பின்னர்) - ரூ. 6 கோடி

ஆர்சிபி புதிதாக வாங்கிய வீரர்கள்:

14. கிறிஸ் மோரிஸ்(தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர்) - ரூ.10 கோடி

15. ஆரோன் ஃபின்ச்(ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன்) - ரூ.4.4 கோடி

Welcome to Bangalore, Aaron. We are looking forward to some big, Finch-hitting 💥 pic.twitter.com/g0Bvd9taHf

— Royal Challengers (@RCBTweets)

16. கேன் ரிச்சர்ட்ஸன்(ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர்) - ரூ.4 கோடி

17. டேல் ஸ்டெய்ன்(தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலர்) - ரூ.2 கோடி

18. இசுரு உடானா(இலங்கை ஆல்ரவுண்டர்) -  ரூ.50 லட்சம்

19. ஷேபாஸ் அகமது(விக்கெட் கீப்பர்) - ரூ.20 லட்சம்

20. ஜோஷுவா ஃபிலிப்(ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர்) - ரூ.20 லட்சம்

21. பவன் தேஷ்பாண்டே(ஆல்ரவுண்டர்) - ரூ.20 லட்சம்
 

click me!