2020ல் நடக்கவுள்ள ஐபிஎல் 13வது சீசனில் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் டெல்லி கேபிடள்ஸ், ஆர்சிபி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய மூன்று அணிகளும் உள்ளன. 

பஞ்சாப் அணி கடந்த இரண்டு சீசன்களாக கேப்டனாக இருந்த அஷ்வினை கழட்டிவிட்டு, கேஎல் ராகுலை புதிய கேப்டனாக நியமித்தது. நேற்று கொல்கத்தாவில் நடந்த ஏலத்தில், ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல்லை ரூ.10 கோடிக்கும், வெஸ்ட் இண்டீஸின் ஃபாஸ்ட் பவுலர் ஷெல்டான் கோட்ரெலை ரூ.8.5 கோடிக்கும் எடுத்தது. 

கிறிஸ் ஜோர்டான் மற்றும் நியூசிலாந்தின் அதிரடி ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் ஆகியோரையும் பஞ்சாப் அணி எடுத்தது. உள்நாட்டு வீரர்களான ரவி போஷ்னோய், பிரப்சிம்ரன் சிங், தீபக் ஹூடா, இஷான் போரெல், தஜீந்தர் திலான் ஆகியோரையும் பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது.

கேஎல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி:

தக்கவைத்த வீரர்கள்:

கேஎல் ராகுல்(கேப்டன்), மயன்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், அர்ஷ்தீப் சிங், தர்ஷன் நால்கண்டே, ஹார்டஸ் வில்ஜோயன், ஹர்ப்ரீத் ப்ரார், கருண் நாயர், மந்தீப் சிங், முகமது ஷமி, முஜீபுர் ரஹ்மான், முருகன் அஷ்வின், நிகோலஸ் பூரான், சர்ஃபராஸ் கான். 

ஏலத்திற்கு முன் மற்ற அணிகளிடமிருந்து வாங்கப்பட்ட வீரர்கள்:

கிருஷ்ணப்பா கௌதம், ஜெகதீஷா சுஜித்.

ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள்:

மேக்ஸ்வெல், கோட்ரெல், கிறிஸ் ஜோர்டான், ரவி போஷ்னோய், ப்ரப்சிம்ரன் சிங், தீபக் ஹூடா, ஜிம்மி நீஷம், தஜிந்தர் திலான், இஷான் போரெல்.