
முன்னாள் அமைச்சர் காமராஜ் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கூட்டம் போட்டுள்ளார். அவர் அவரது சொந்த ஊரான மன்னார்குடி தொகுதியில் தேர்தலில் நின்று வெற்றி பெற சொல்லுங்கள். டெபாசிட் கூட மன்னார்குடி தொகுதியில் வாங்க முடியாது என வைத்திலிங்கம் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், வைத்திலிங்கத்துக்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் காமராஜ் பதிலடி
Top News of Yesterday 19.05.2023 | நாட்டில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைந்த தொகுப்பை இங்கே காணலாம்.
நேற்றைய முக்கிய செய்திகள்
பத்திரப்பதிவுத்துறை தலைவராக இருந்த சிவன் அருள் ஐஏஎஸ் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் புதிய பத்திரப்பதிவுத்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிவன் அருள் ஐஏஎஸ் திடீர் மாற்றம்
2000 ரூபாய் நோட்டு, திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதை தொடர்ந்து, 'பிச்சைக்காரன் 2 ' படத்துடன், இந்த சம்பவத்தை கோர்த்துவிட்டு சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு ட்ரோல் செய்து வருகிறார்கள். இந்த 'பிச்சைக்காரன்' படம் வரும்போதெல்லாம் டீமான்டேசேஷனும் வருதே? அப்போ ரூ.500, 1000... இப்போ ரூ.2000!
பிச்சைக்காரன் Vs Rs.2000/-
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண்கள் எடுத்து தான் படித்த அரசுப்பள்ளியில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்த கைகளையும் இழந்த க்ரித்தி வர்மானின் தாயாரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைப்பேசியில் உரையாடினார்.
முதல்வர் வாழ்த்து!
அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில், உயிரிழந்த தன்னுடைய ரசிகை ஐஸ்வர்யா மறைவுக்கு கண்ணீர் மல்க அறிக்கை வெளியிட்டு, அஞ்சலி செலுத்தியுள்ளார் நடிகர் சூர்யா.
நடிகர் சூர்யா அஞ்சலி
2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறுவதாக அறிவித்த சில நிமிடங்களில் ரிசர்வ் வங்கியின் இணையதள முடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
RBI இணையதளம்!!
புழக்கத்தில் இருந்து வாபஸ் பெறப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகள்... என்ன செய்வது? இதோ முழு விவரம்!!
இதோ முழு விவரம்!!
நடிகர் ஷாருக்கான் தன்னுடைய மகனுக்காக, சமீர் வான்கடேவிடம் கெஞ்சியபடி வாட்ஸ் ஆப்பில் சாட்டிங்கி பாதிப்புகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ் ஆப் சேட்டிங் லீக்..
நடிகை குஷ்பு தன்னுடைய முன்னோர்கள் (தாத்தா) ஹிந்து தெய்வத்திற்கு கோவில் கட்டியது குறித்து, தன்னுடைய twitter-யில் புகைப்படம் வெளியிட்டு கூறி, ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளார்.
குஷ்பு..
மதுரை மாவட்டம் செல்லூர் அருகே இளைஞர்கள் பலர் ஒன்றாக கூடி பெரிய அளவிலான வாளை கொண்டு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
வாளை வைத்து கேக் வெட்டும் கலாச்சாரம்
திருச்சியில் புத்தூர் ஈவி.ஆர். சாலையில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் விபசாரம் நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இருவரை கைது செய்த காவல் துறையினர், விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
அழகு நிலையம் என்ற பெயரில் விபசாரம்
2022-23 நிதியாண்டில் பாதுகாப்பு உற்பத்தியின் மதிப்பு முதன்முறையாக ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுக்குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது பாதுகாப்பு உற்பத்தியின் மதிப்பு ரூ. 1,06,800 கோடியாக உள்ளது. மீதமுள்ள தனியார் பாதுகாப்புத் துறைகளில் இருந்து தரவுகள் கிடைத்தவுடன் அது மேலும் உயரும். 2022-23 நிதியாண்டில் பாதுகாப்பு உற்பத்தியின் தற்போதைய மதிப்பு 2021-22 நிதியாண்டில் 12 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
ராஜ்நாத் சிங் தகவல்...
சென்ட்ரல் விஸ்டா எனப்படும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி வரும் 28ஆம் தேதி திறந்து வைக்கிறார். உலக தரத்திலான உள்கட்டமைப்புகளுடன் புதிய நாடாளுமன்ற கட்டடம்!!
வியக்க வைக்கும் போட்டோஸ்!!
ஜல்லிகட்டின் போது மாநில அரசை வழிநடத்தியது மத்திய அரசுதான். 100 சதவீத கிரிடிட் மத்திய அரசுக்குதான் சேரும். அப்போது முதல்வராக இருந்தவர் ஒ.பி.எஸ்... இதற்கு அதிமுக எடப்பாடி பழனிச்சாமி உரிமை கொண்டாடினால் தவறில்லை. திமுக ஸ்டாலின் உரிமை கொண்டாட முடியாது என எச்.ராஜா அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார்.
ஹெச் ராஜா
கிளவுட் மேஜர் ஆரக்கிள் எலக்ட்ரானிக் ஹெல்த்கேர் ரெக்கார்ட்ஸ் நிறுவனமான கெர்னரில் இருந்து 3,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஊழியர்களை நிறுவனம் 28.4 பில்லியன் டாலர்களுக்கு பணியமர்த்தியது.
3000 ஊழியர்கள் பணிநீக்கம்
ஹிரோஷிமாவில் நடைபெற உள்ள ஜி7 உச்சிமாநாட்டில், "உலகளாவிய தெற்கு நாடுகளின் குரல்கள் மற்றும் கவலைகளை எடுத்துரைப்பேன்" என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.
ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
https://tamil.asianetnews.com/puducherry/boy-commits-suicide-after-fail-in-10th-exam-ruwn56
பூரண மதுவிலக்கை கொண்டு வருவதற்கு பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில் கள்ளச்சாராயத்தால் 22 நபர்கள் உயிரிழந்த சம்பவத்தில் மிகப்பெரிய அரசியல் சதிஉள்ளது. இதனை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும் என டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணசாமி சந்தேகம்
தேர்ச்சி விகிதத்தில் வட மாவட்டங்கள் கடைசி இடங்களைப் பிடிப்பதற்கான முதன்மைக் காரணம், அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையும், கட்டமைப்பு வசதிகள் இல்லாததும் தான் என தெரிவித்துள்ள ராமதாஸ் இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
வெள்ளை அறிக்கை கேட்கும் ராமதாஸ்
மெட்டா நிறுவனம் அடுத்த வாரம் 6000 பேரை பணியில் இருந்து நீக்குகிறது!! மே மாதத்தில் மெட்டா நிறுவனத்தில் வேலையிழப்பு இருக்கும் என்று அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பர்க் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அதிகாரபூர்வமற்ற இணையதள தகவலும் கசிந்துள்ளது.
6000 பேரை பணியில் இருந்து நீக்கும் மெட்டா
வெற்றி தோல்வியை தாண்டி உழைப்பை போட வேண்டும், கூட்டணியில் இருக்கின்றோம், கூட்டணியில் இல்லை, தனியாக போட்டியிடுகிறோம், போட்டியிட்டும் வெற்றி பெறவில்லை போன்ற எண்ணங்களை தூக்கி எறிந்து விட்டு கட்சிக்காக உழைக்க வேண்டும் என அண்ணாமலை பாஜக நிர்வாகிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
அண்ணாமலை