உலக தரத்திலான உள்கட்டமைப்புகளுடன் புதிய நாடாளுமன்ற கட்டடம்!! வியக்க வைக்கும் போட்டோஸ்!!
சென்ட்ரல் விஸ்டா எனப்படும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி வரும் 28ஆம் தேதி திறந்து வைக்கிறார்.
இந்த புதிய பாராளுமன்றம் சுமார் 66 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இந்த புதிய பாராளுமன்ற கட்டடமானது, பழைய பாராளுமன்றம் கட்டடத்தை விட சுமார் 17,000 சதுர மீட்டர் அளவில் பெரியது.
புதிய பாராளுமன்றத்தில் மூன்று வாசல்கள் உள்ளன. அவை கியான் துவார், சக்தி துவார் மற்றும் கர்மா துவார் என்று அழைக்கப்பட்டுகிறது.
இந்த புதிய பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள், விஐபிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு தனித்தனி வாயிலகள் உள்ளன.
இந்த புதிய பாராளுமன்ற கட்டிடத்தை, கட்டிடக் கலைஞர் பிமல் படேல் எனபவ்ர் தான் உருவாக்கினார். இவர் பிரதமரின் தேசிய விருது பத்மஸ்ரீ மற்றும் பல விருதுகளை வென்றுள்ளார்.
இந்த பாராளுமன்றத்தின் புதிய கட்டிடம் அடுத்த 150 ஆண்டுகளுக்கு பாதுகாப்பாக இருக்கும் . இது இந்தியாவின் எதிர்காலத் தேவைகளை கருத்தில் கொண்டு கட்டப்பட்டுள்ளது.
இந்த நான்கு மாடிக் கட்டிடத்தில் 1,224 எம்பிக்கள் தங்கும் வசதி உள்ளது. இந்த புதிய கட்டடம் 970 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.