அரசியல் அனாதையான ஓபிஎஸ்.. அறிவே இல்லாத முண்டம் வைத்திலிங்கம்.. இறங்கி அடிக்கும் காமராஜ்..!

முன்னாள் அமைச்சர் காமராஜ் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கூட்டம் போட்டுள்ளார். அவர் அவரது சொந்த ஊரான மன்னார்குடி தொகுதியில் தேர்தலில் நின்று வெற்றி பெற சொல்லுங்கள். டெபாசிட் கூட மன்னார்குடி தொகுதியில் வாங்க முடியாது என வைத்திலிங்கம் கடுமையாக விமர்சித்திருந்தார்.

AIADMK Kamaraj strongly criticized vaithilingam

நான் எந்த தொகுதியிலும் நின்று ஜெயிக்க தெம்பு உள்ளவன் என வைத்திலிங்கத்திற்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் பதிலடி கொடுத்துள்ளார். 

முன்னாள் அமைச்சர் காமராஜ் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கூட்டம் போட்டுள்ளார். அவர் அவரது சொந்த ஊரான மன்னார்குடி தொகுதியில் தேர்தலில் நின்று வெற்றி பெற சொல்லுங்கள். டெபாசிட் கூட மன்னார்குடி தொகுதியில் வாங்க முடியாது என வைத்திலிங்கம் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், வைத்திலிங்கத்துக்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் பதிலடி கொடுத்துள்ளார். 

இதையும் படிங்க;- கோமாளி ஜெயக்குமாருக்கு ஊழலை பற்றி பேச தகுதியே இல்லை! அவருக்கு அரசியல் எதிர்காலமே இல்லை! வைத்திலிங்கம் விளாசல்

AIADMK Kamaraj strongly criticized vaithilingam

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- வைத்திலிங்கம் என்கிற முண்டு கல்லை கட்டிக்கொண்டு ஓபிஎஸ் கடலில் இறங்கி விட்டார்.  அவரது பேச்சை கேட்டு ஓபிஎஸ் தற்போது அரசியல் அனாதையாகி விட்டார். நான் சந்தித்த மனிதர்களில் அறிவே இல்லாத முண்டம் என்றால் அது வைத்திலிங்கம் தான். நான் வேறு வழியில்லாமல் சொல்லுகிறேன் என்றார். 

AIADMK Kamaraj strongly criticized vaithilingam

மேலும், நான் எந்த தொகுதியிலும் நின்று ஜெயிக்க தெம்பு உள்ளவன். வைத்திலிங்கத்திடம் அதிமுகவை சேர்ந்தவர்கள் யாரும்  இல்லை என்பதால் அந்த வெறியில் வைத்திலிங்கம் எங்களை பற்றி அவதூறு பரப்பி வருகிறார். வைத்திலிங்கம் தொகுதி முழுவதும் இபிஎஸ் கையில் வந்து விட்டது.  

இதையும் படிங்க;-  அட பொசுக்குன்னு! ஓபிஎஸ்-ஐ பார்த்து இபிஎஸ் இப்படி சொல்லிட்டாரே! ஒரத்தநாட்டில் பொதுக்கூட்டத்தில் ஆவேச பேச்சு..!

AIADMK Kamaraj strongly criticized vaithilingam

வீட்டு வேலைக்காரியெல்லாம் மகாராணியாகிவிட முடியாது  என சசிகலாவை விமர்சித்தவர் முதலில்  வைத்திலிங்கம் தான். தற்போது  இபிஎஸ் எந்த தொகுதியில் என்னை நிற்க சொல்கிறார்களோ, அந்த தொகுதியில் நான் நிற்பேன் என தெரிவித்தார். மேலும், திமுக ஆட்சியை நடத்த முடியாமல் எல்லா துறையிலும் திணறிக்கொண்டு வருகிறது எனவும்  காமராஜ் விமர்சனம் செய்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios