
2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறுவதாக அறிவித்த சில நிமிடங்களில் ரிசர்வ் வங்கியின் இணையதள முடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வரும் 23 ஆம் தேதியில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து கணக்கில் வரவு வைக்கலாம் என்றும் தினமும் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ள செப்.30 கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 2000 ரூபாய் நோட்டு: திரும்பப் பெறுகிறது ரிசர்வ் வங்கி; மாற்றுவதற்கு காலக்கெடு; மக்கள் அதிர்ச்சி!!
இதுக்குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, புழக்கத்தில் உள்ள ₹2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுகின்றன. எனினும் சட்டப்பூர்வமாக அவை செல்லும். செப்டம்பர் 30, 2023 வரை எந்தவொரு வங்கிக் கிளையிலும் பொதுமக்கள் ₹2,000 ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யலாம். தேவைப்படுகிற அளவில் பிற மதிப்புகளில் ரூபாய் நோட்டுகளாக மாற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புழக்கத்தில் இருந்து வாபஸ் பெறப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகள்... என்ன செய்வது? இதோ முழு விவரம்!!
இதனிடயே 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியான சில நிமிடங்களிலேயே ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு ஏராளமான மக்கள் வந்தனர். ஊடகங்களில் வந்த செய்தியின் உண்மைத்தன்மை குறித்து அறிய மக்கள் பலர் ஒரே நேரத்தில் ரிசர்வ் வங்கியின் இணையதளத்திற்கு வந்ததால் ரிசர்வ் வங்கியின் இணையதளம் செயல் இழந்தது. இது விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என கூறப்படுகிறது.