Asianet News TamilAsianet News Tamil

மதுரையில் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

மதுரை மாவட்டம் செல்லூர் அருகே இளைஞர்கள் பலர் ஒன்றாக கூடி பெரிய அளவிலான வாளை கொண்டு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

youngsters celebrate birthday with sword in madurai
Author
First Published May 19, 2023, 6:45 PM IST

வாளை வைத்து கேக் வெட்டும்  கலாச்சாரம் சென்னை போன்ற பெருநகரங்களில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது தென் தமிழகத்தில் இதே போன்று வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் கலாசாரம் அதிக அளவில் பரவி வருகிறது. மதுரை செல்லூர் பகுதியில் உள்ள மீனாட்சிபுரம் பழைய சரஸ்வதி திரையரங்கம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் முக்கிய பிரமுகராக கூறப்படும். முத்துமணி என்பவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் மேளத்தாளங்களுடன் ஆட்டம், பாட்டத்துடன் நீண்ட வாளால் கேக் வெட்டி கொண்டாடினர்.

வாள், கத்தியுடன். கும்பலா ஆட்டம் போட்டதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். எப்போதும்.பரபரப்பு மிகுந்த செல்லூர் பகுதியில் இந்த வாள், ஆட்டம் - பாட்டம் என பிறந்தநாள் கொண்டாட்டம் பரப்பாகி வரும் நிலையில் அப்பகுதியில் காவல் நிலையம் இருந்தும் கண்டும் காணாமல் இருந்தது தான் அதிர்ச்சியளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

திருச்சியில் அழகு நிலையம் என்ற பெயரில் விசாரம் நடத்திய 2 பேர் கைது; 2 பெண்கள் மீட்பு

பிறந்தநாள் போன்ற முக்கியமான நாட்களில் கேக் வெட்டுவதில் தவறில்லை. ஆனால் தற்போது பிறந்தநாள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்கு அரிவாள், பட்டா கத்தி போன்ற  ஆயுதங்களை வைத்து கேக் வெட்டுவது டிரெண்டாகி வரும் நிலையில். ஆயுதச் சட்டம் பிரிவு 25(1)(a)ன் படி கொடும் ஆயுதங்கள் வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகிறது. மேலும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 147 (கலகம் விளைவித்தல்) மற்றும் பிரிவு 148 ன்படி (அபாயகரமான ஆயுதத்தை தாக்கி கலகம் விளைவித்தல்) போன்றவை தண்டனைக்கு உள்ளான குற்றங்கள் என வழகறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

பட்டியலின மக்கள் கோவிலுக்குள் நுழைய எதிர்ப்பு; ஒரு பிரிவினர் போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

Follow Us:
Download App:
  • android
  • ios