பத்திரப்பதிவுத்துறை தலைவராக இருந்த சிவன் அருள் ஐஏஎஸ் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் புதிய பத்திரப்பதிவுத்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 


பத்திரப்பதிவுத்துறை தலைவராக இருந்த சிவன் அருள் ஐஏஎஸ் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் புதிய பத்திரப்பதிவுத்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே பத்திரப்பதிவுத்துறை தலைவராக இருந்த சிவன் அருள் வேளாண் கூட்டுறவு கடன் சங்க சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். சிவன் அருள் தான் சுமார் கடந்த 4 ஆண்டுகளாக ஆவடி பத்திரப்பதிவு துறை பதிவாளராக பணியாற்றும் ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு பெயர் போன மல்லிகேஸ்வரிக்கு பக்க பலமாய் இருந்தவர் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: காவல் நிலையத்தில் அலப்பறை செய்த நபர்; மாவுக்கட்டுடன் போஸ் கொடுத்த பரிதாபம்

ஆவடி பத்திரப்பதிவு பதிவாளர் மல்லிகேஸ்வரி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. லஞ்ச ஒழிப்புத் துறையில் பல புகார்கள் தற்போது விசாரணையில் உள்ளது. ஆவடியில் அரசுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலங்களை லஞ்சம் வாங்கிக் கொண்டு பத்திரப்பதிவு செய்தது தொடர்பாக பல்வேறு புகார்கள் நிலுவையில் இருந்த வருகிறது.

இதையும் படிங்க: 10ம் வகுப்பில் 437 மார்க் எடுத்து முதலிடம் பிடித்த மாற்றுத்திறனாளி மாணவன்… தொலைப்பேசியில் முதல்வர் வாழ்த்து!!

இந்த நிலையில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக மல்லிகேஸ்வரி பத்திரப்பதிவு துறை தலைவர் சிவன் அருள் பக்க பலத்துடன் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் திடீரென மாற்றப்பட்டுள்ளதால் மல்லிகேஸ்வரிக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என கூறப்படுகிறது.