காவல் நிலையத்தில் அலப்பறை செய்த நபர்; மாவுக்கட்டுடன் போஸ் கொடுத்த பரிதாபம்
காவல் நிலையத்தில் மது போதையில் அனைவரையும் திட்டி அலப்பறை செய்து கொண்டிருந்த நபர் மறு நாளே மாவுக்கட்டு போடப்பட்ட நிலையில், அவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த வேப்பஞ்சேரி பகுதியை சேர்ந்த நாகராஜ்(வயது32) என்பவர் கிழக்கு கடற்கரை சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது வாயலூர் சோதனைச் சாவடியில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். நாகராஜை பரிசோதனை செய்ததில் அவர் மதுபோதையில் இருசக்கர வாகனத்தை இயக்கியது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து அவரை கூவத்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது முழு மதுபோதையில் இருந்த நாகராஜ் காவல் துறையினரை ஒருமையில் திட்டி அலரவிட்டார். அப்போது பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் அவரை அமைதியாக இருக்குமாறு கேட்டபோது, அவரையும் திட்டுகிறார்.
பிறகு ஒரு கட்டத்தில் காவல் துறையினர் அவரை காமெடி பீஸ்.. உனக்கு என்ன திமிரு.. என கிண்டல் செய்கின்றனர். அதற்கு நாகராஜ் தனது சட்டையை கழட்டிபோட்டு விட்டு காவல் துறையினரை தாக்க ஓடுகிறார். பிறகு அங்குள்ள நாற்காலியில் பந்தாவாக அமர்ந்து கொண்டு செல்போனில் யாரிடமோ பேசுகிறார்.
திருச்சியில் அழகு நிலையம் என்ற பெயரில் விசாரம் நடத்திய 2 பேர் கைது; 2 பெண்கள் மீட்பு
பின்னர் என்னை ஏண்டா அடிச்சீங்க.. உங்களை தொலைச்சு புடுவேன், தெலைச்சு.. என மீண்டும் திட்டுகிறார். பிறகு காவல் துறையினர் அவரின் அலப்பறை செயலை தாங்கமுடியாமல், நொந்து போயினர். ஒரு வழியாக சமாதானம் செய்து அவரை காவல் நிலையத்தில் இருந்து, இடத்தை காலி செய்தால் போதும் என கையெடுத்து கும்பிட்டு அவரை அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் அதே நபர் கால் முழுவதும் மாவு கட்டு போடப்பட்ட நிலையில் அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. காவல் துறையினர் தாக்கியதால் அவருக்கு காயம் ஏற்பட்டு மாவுக்கட்டு போடப்பட்டதா, அல்லது வேறு எங்காவது வழுக்கி விழுந்ததால் மாவுக்கட்டுப் போடப்பட்டதா என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த உண்மை.