இன்றைய முக்கிய செய்திகள்: Top News Today 02.06.2023

By Dinesh TGFirst Published Jun 2, 2023, 8:08 AM IST
Highlights

இன்றைய முக்கிய செய்திகள்: Top News Today 02.06.2023 | நாட்டில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைந்த தொகுப்பை இங்கே காணலாம்.
 

தருமபுரி அரசு நெல் கிடங்கில் 7000 டன் நெல் மூட்டைகள் காணவில்லை என்ற விவகாரத்தில் உண்மைக்கு மாறானவற்றை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.

அமைச்சர் சக்கரபாணி

விளையாட்டுக்கான ஆடைகளை வடிவமைக்கும் நிறுவனமான அடிடாஸ், இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடும் வீரர்களுக்கான சீருடையை வெளியிட்டுள்ளது. அதில் சிறப்பு அம்சமாக தோள் பகுதியில் 3 கோடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்திய அணிக்கு புதிய ஜெர்சி

ராஜபாளையத்தில் பாரம்பரியத்தை நினைவூட்ட திருமணத்தில் மணமகளுக்கு நாய் மற்றும் நாய் குட்டியை வழங்கி அசத்திய தாய் மாமன்.

வினோத சீர்

பாஜக எம்பி மீது பாலியல் புகார் கூறி போராடிவரும் இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்காக குடியரசுத் தலைவரைச் சந்தித்து பேசவும் தயாராக இருப்பதாக விவசாய அமைப்பினர் கூறியுள்ளனர்.

விவசாய அமைப்பினர் ஆதரவு

ஐபிஎல் போட்டியில் பேட்டிங் செய்யும்போது ஓடுவதற்கு சிரமப்பட்டுவந்த தோனிக்கு மும்பையில் இன்று மூட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது.

தோனியின் முழங்கால் அறுவை சிகிச்சை

மும்பை ஐஐடி மாணவர் தர்ஷன் சொலங்கி தற்கொலை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சித் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

ஐஐடி மாணவர் தற்கொலை

கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய 19 பேருக்கும் கரூர் நீதிமன்றம் உத்தரவு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியுள்ளது.

கரூர் ஐடி ரெய்டு

சென்னையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி அவசரச் சட்டத்தை எதிர்க்க திமுக ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்துள்ளது என்றார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

சேலம் மாவட்டம் சர்கார் கொல்லப்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு கிடங்கில் இன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் பட்டாசு கிடங்கில் தீ விபத்து

கோவை கருமத்தம்பட்டியில் விளம்பர பலகை சரிந்து மூவர் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பர பலகை சரிந்து 3 பேர் உயிரிழப்பு

புதுச்சேரியில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் விருந்தினர்களுக்கு தாம்பூலப் பையில் மதுபாட்டில் வைத்து விநியோகிக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தாம்பூல பையில் குவாட்டர் பாட்டில்

2018ஆம் ஆண்டு கேரளாவில் கன்னியாஸ்திரி பலாத்காரம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட ஜலந்தர் பாதிரியார் பிராங்கோ முலக்கல் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை போப் பிரான்சிஸ் ஏற்றுக்கொண்டுவிட்டார்.

பிஷப் பிராங்கோ முலக்கல் ராஜினாமா

2023 மே மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.57 லட்சம் கோடி வசூல் ஆகியுள்ளது. மாநிலங்களின் ஜிஎஸ்டி வருவாய் தமிழ்நாடு 4வது இடத்தில் உள்ளது.

ஜிஎஸ்டி வருவாய்

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு நெல் கொள்முதல் நிலையங்களிலும் இன்று முதல் பயோமெட்ரிக் முறையில் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நெல்கொள்முதல்

தமிழ்நாட்டில் திமுக அரசு அறிவித்திருப்பதைப் போல மகளிருக்கு உரிமைத்தொகை வழங்குப் திட்டத்தை கர்நாடக காங்கிரஸ் அரசும் அறிவித்துள்ளது. இதனால், அங்கு புதிய குடும்பச் சண்டை ஆரம்பித்துள்ளது.

மகளிருக்கு உரிமைத்தொகை

கரூர் மாவட்டத்தில் கடந்த 26ம் தேதி தொடங்கிய வருமான வரித்துறை சோதனை ஏழாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

எம்.சி. சங்கர் பண்ணை வீட்டில் ஐடி ரெய்டு

தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிராத்தனை மேற்கொண்டார்.

அண்ணாமலை

அமெரிக்காவில் பரவி வரும் HMPV வைரஸ் காரணமாக நோயாளிகளிடையே காய்ச்சல் மற்றும் நுரையீரல் தொற்று ஏற்படுகிறது.

HMPV வைரஸ்

ட்விட்டரில் புதிய கணக்கு தொடங்கிய சீமான்.. முதல் ட்வீட்டில் முதலமைச்சருக்கு நன்றி.. மோடிக்கு கண்டனம்

சீமான்

ஸ்காட்லாந்துக்கு நிகரான தமிழக காவல்துறை இன்றைக்கு ஏவல் துறையாக மாறியுள்ளதாக மதுரை விமான நிலையத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

பிரேமலதா விஜயகாந்த்

தமிழ்நாட்டு மக்கள் மீது கோபமோ,வெறுப்போ இல்லை.! மேகதாதுவால் இரு மாநில மக்களும் பயன் அடைவார்கள்-டிகே சிவக்குமார்

டிகே சிவக்குமார்
 

click me!