Asianet News TamilAsianet News Tamil

ட்விட்டரில் புதிய கணக்கு தொடங்கிய சீமான்.. முதல் ட்வீட்டில் முதலமைச்சருக்கு நன்றி.. மோடிக்கு கண்டனம்

தனது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட நிலையில், புதிய கணக்கை தொடங்கிய சீமான் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Seeman started a new account on Twitter.. Thanks to the Chief Minister.. Tweeted condemning Modi
Author
First Published Jun 1, 2023, 3:33 PM IST

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நாம் கட்சி நிர்வாகிகள் 20-க்கும் மேற்பட்டோரின் ட்விட்டர் கணக்கு இன்று முடக்கப்பட்டது. அதே போல் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகளும் இன்று முடக்கப்பட்டது. சட்ட ரீதியாக வந்த கோரிக்கையை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் சீமான் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகளை முடக்க கோரிக்கை விடுக்கவில்லை என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : கர்நாடகாவுக்கு சென்று மேகதாது அணைக்கு எதிராக எதிர்த்து பேசியவன் நான்.. அண்ணாமலை சரவெடி..!

இதற்கு நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் சீமான், திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் ட்விட்டர் கண்க்கு முடக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு. திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இதனை தொடர்ந்து சீமான் புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கி உள்ளார். செந்தமிழன் சீமான் என்ற பெயரில் ட்விட்டரில் புதிய கணக்கை தொடங்கி உள்ள சீமான், தனக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சீமானின் பதிவில் “ புதிய நாடாளுமன்றத்தை செங்கோல் நாட்டி திறந்து வைத்துவிட்டு, ஆட்சியின் கொடுமைகளை எதிர்த்து எழுதும் எழுதுகோல்களை முறித்து குரல்வளையை நெறிக்கும் இந்திய ஒன்றியத்தை ஆளும் மோடி அரசின் கொடுங்கோன்மை செயல் வெட்கக்கேடானது.

கருத்தினைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று, எங்களது கீச்சகத்தை முடக்கி கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் அடக்குமுறையைக் கண்டித்து தனது வலிமையானக் கருத்தைப் பதிவுசெய்து, துணைநிற்கும் மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்

 

இதையும் படிங்க : தமிழ்நாட்டு மக்கள் மீது கோபமோ,வெறுப்போ இல்லை.! மேகதாதுவால் இரு மாநில மக்களும் பயன் அடைவார்கள்-டிகே சிவக்குமார்

Follow Us:
Download App:
  • android
  • ios