புதிய உச்சத்தில் ஜிஎஸ்டி வருவாய்... மே மாத வசூல் 1.57 லட்சம் கோடி! தமிழ்நாடுக்கு 4வது இடம்!
2023 மே மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.57 லட்சம் கோடி வசூல் ஆகியுள்ளது. மாநிலங்களின் ஜிஎஸ்டி வருவாய் தமிழ்நாடு 4வது இடத்தில் உள்ளது.
2023 மே மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ₹1,57,090 கோடி வசூல் ஆகியுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி ₹28,411 கோடி, மாநில ஜிஎஸ்டி ₹35,828 கோடி, கூட்டு ஜிஎஸ்டி ₹81,363 கோடி. இதில் ரூ.41,772 கோடி பொருட்களின் இறக்குமதி வரியும் ரூ.11,489 கோடி செஸ் வரியும் அடங்கும்.
கூட்டு ஜிஎஸ்டியில் இருந்து மத்திய ஜிஎஸ்டிக்கு ₹35,369 கோடியும், மாநில ஜிஎஸ்டிக்கு ₹29,769 கோடியும் அரசு விடுவித்துள்ளது. 2023 மே மாதத்தில் மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த வருவாய் மத்திய ஜிஎஸ்டிக்கு ₹63,780 கோடியும், மாநில ஜிஎஸ்டிக்கு ₹65,597 கோடியும் ஆகும்.
4வது காலாண்டில் ஜிடிபி 6.1% உயர்வு; பொருளாதார வளர்ச்சி 7.2%
2023 மே மாதத்திற்கான வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஜிஎஸ்டி வருவாயை விட 12% அதிகமாகும். மே மாதம் சரக்குகளின் இறக்குமதி வருவாய் 12% அதிகமாக இருந்துள்ளது. சேவைகளின் இறக்குமதி உட்பட உள்நாட்டு பரிவர்த்தனைகள் வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் இருந்த வருவாயைவிட 11% அதிகமாகும்.
மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து 14 மாதங்களுக்கு ரூ.1.4 லட்சம் கோடிக்கு மேல் கிடைத்துவருகிறது. ஜிஎஸ்டி தொடங்கப்பட்டதில் இருந்து ஐந்தாவது முறையாக ரூ.1.5 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.
மே 2022 உடன் ஒப்பிடும்போது 2023 மே மாதத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் சேகரிக்கப்பட்ட ஜிஎஸ்டியின் மாநில வாரியான புள்ளிவிவரங்களின் அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு வருவாய் அடிப்படையில் நான்காவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மாநிலம் / யூனியன் பிரதேசம் |
மே 2022 |
மே 2023 |
வளர்ச்சி (%) |
ஜம்மு காஷ்மீர் |
372 |
422 |
14 |
ஹிமாச்சல பிரதேசம் |
741 |
828 |
12 |
பஞ்சாப் |
1833 |
1744 |
-5 |
சண்டிகர் |
167 |
259 |
55 |
உத்தரகாண்ட் |
1309 |
1431 |
9 |
ஹரியானா |
6663 |
7250 |
9 |
டெல்லி |
4113 |
5147 |
25 |
ராஜஸ்தான் |
3789 |
3924 |
4 |
உத்தரப்பிரதேசம் |
6670 |
7468 |
12 |
பீகார் |
1178 |
1366 |
16 |
சிக்கிம் |
279 |
334 |
20 |
அருணாச்சல பிரதேசம் |
82 |
120 |
47 |
நாகாலாந்து |
49 |
52 |
6 |
மணிப்பூர் |
47 |
39 |
-17 |
மிசோரம் |
25 |
38 |
52 |
திரிபுரா |
65 |
75 |
14 |
மேகாலயா |
174 |
214 |
23 |
அசாம் |
1062 |
1217 |
15 |
மேற்கு வங்காளம் |
4896 |
5162 |
5 |
ஜார்கண்ட் |
2468 |
2584 |
5 |
ஒடிசா |
3956 |
4398 |
11 |
சத்தீஸ்கர் |
2627 |
2525 |
-4 |
மத்திய பிரதேசம் |
2746 |
3381 |
23 |
குஜராத் |
9321 |
9800 |
5 |
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ |
300 |
324 |
8 |
மகாராஷ்டிரா |
20313 |
23536 |
16 |
கர்நாடகா |
9232 |
10317 |
12 |
கோவா |
461 |
523 |
13 |
லட்சத்தீவு |
1 |
2 |
210 |
கேரளா |
2064 |
2297 |
11 |
தமிழ்நாடு |
7910 |
8953 |
13 |
புதுச்சேரி |
181 |
202 |
12 |
அந்தமான் நிக்கோபார் தீவுகள் |
24 |
31 |
27 |
தெலுங்கானா |
3982 |
4507 |
13 |
ஆந்திரப் பிரதேசம் |
3047 |
3373 |
11 |
லடாக் |
12 |
26 |
113 |
பிற பிரதேசம் |
185 |
201 |
9 |
மைய அதிகார வரம்பு |
140 |
187 |
34 |
கிராண்ட் மொத்தம் |
102485 |
114261 |
11 |
ரஷ்யாவுக்குப் போட்டியாக பூமியில் 32,808 அடிக்கு ஆழ்துளை போடும் சீனா! எதுக்குன்னு தெரியுமா?