கர்நாடகாவில் புதிதாகக் கிளம்பிய மாமியார் மருமகள் சண்டை! அரசு கொடுக்கும் ரூ.2000 உரிமைத்தொகை யாருக்கு?
தமிழ்நாட்டில் திமுக அரசு அறிவித்திருப்பதைப் போல மகளிருக்கு உரிமைத்தொகை வழங்குப் திட்டத்தை கர்நாடக காங்கிரஸ் அரசும் அறிவித்துள்ளது. இதனால், அங்கு புதிய குடும்பச் சண்டை ஆரம்பித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் குடும்பப் பெண்களுக்கு 2,000 ரூபாய் மாதாந்திர உதவித்தொகை வழங்கும் 'க்ருஹ லக்ஷ்மி' திட்டத்தை செயல்படுத்துவதில் புதிய சிக்கல் வந்துள்ளது. பல வீடுகளில் இந்தத் தொகையைப் பெறுவது தொடர்பாக மாமியார் - மருமகள்கள் இடையே மோதல் நடப்பதாவும் கூறப்படுகிறது.
அரசு வழங்கும் மாதாந்திர உதவிதொகை 2000 ரூபாயை யார் பெறுவது என குடும்ப உறுப்பினர்கள் இடையே வாதம் எழுந்துள்ளது. குறிப்பாக மாமியார் - மருமகள் இடையே தகராறு ஏற்பட்டது பற்றிய தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில், குடும்பத் தலைவிக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவதாக உறுதியளித்தது. ஆனால், அதில் தெளிவான தகுதிகள் இல்லாதது குடும்பங்கள் மத்தியில் குழப்பத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.8000 சம்பள உயர்வு? விரைவில் வெளியாக உள்ள குட்நியூஸ்!
செவ்வாயன்று, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் லக்ஷ்மி ஹெப்பல்கரிடம் இது குறித்து வினவியபோது, "இது குடும்பம் எடுக்க வேண்டிய முடிவு" என்று கூறினார். ஆனால், "இந்திய பாரம்பரியத்தின்படி மூத்த பெண் குடும்பத் தலைவியாகக் கருதப்படுவதால், அந்தப் பணம் மாமியாருக்கே செல்ல வேண்டும்" என்றும் சொன்னார். மேலும், "அவர் விரும்பினால் மருமகளுடன் பணத்தை பகிர்ந்து கொள்ளலாம்" எனவும் ஹெப்பல்கர் கூறினார்.
பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோலியும் ஹெப்பால்கரின் கருத்தையே பிரதிபலித்தார். அவர் குடும்பத்தின் தலைவி என்ற முறையில், பணம் மாமியாருக்கே செல்ல வேண்டும் என்று கூறினார்.
கர்நாடகாவில் இந்திய விமானப்படை விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்து.. விமானிகளின் நிலை என்ன?
குடும்பத்தின் பெண் தலைவர் யார் என்பதில் ஒருமித்த கருத்து இல்லை என்றால், மாமியார் மற்றும் மருமகள் இடையே தொகையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என பெண் நல ஆர்வலர்கள் கருதுகின்றனர். "இப்படிச் செய்வதால் குடும்பத்தில் பிரச்சனைகள் வராது" என்கிறார் பெண்கள் நல ஆர்வலர் நாகரத்னா. "இந்தப் பிரச்சினையில் ஒருவருக்குச் சார்பாக முடிவு எடுக்க முடியாது. அது மிகவும் கடினம். மாமியார் மற்றும் மருமகள் இருவருக்குமே தொகையைக் கொடுக்க வேண்டும்" என மற்றொரு பெண்கள் நல ஆர்வலர் கவிதா சொல்கிறார்.
இப்போதே திட்டத்தை செயல்படுத்துவதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பற்றி பேச வேண்டியதில்லை என்று அமைச்சர் லக்ஷ்மி ஹெப்பல்கர் கூறினார். அரசு இன்னும் இத்திடத்தை செயல்படுத்துவதற்கான முறைகள் பற்றி விவாதிக்கவில்லை. “வியாழக்கிழமை (இன்று) நடக்கும் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு இதைப்பற்றி தெளிவு கிடைக்கும்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.