மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.8000 சம்பள உயர்வு? விரைவில் வெளியாக உள்ள குட்நியூஸ்!

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் குறித்த நல்ல செய்தி விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Salary hike for central government employees up to Rs.8000? Good news coming soon!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி, அகவிலை நிவாரணம், ஃபிட்மெண்ட் காரணி, வீட்டு வாடகை கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விலைவாசி உயர்வுக்கு ஈடுகொடுக்கும் வகையில் வழங்கப்படும் DA எனப்படும் அகவிலைப்படி உயர்வு, ஆண்டுக்கு இருமுறை திருத்தப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படியை திருத்தி மத்திய அரசு உத்தரவிட்டு வருகிறது.

இதே போல் ஃபிட்மெண்ட் காரணி விகிதத்தையும் அரசு அவ்வப்போது மாற்றி அமைத்து வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மெண்ட் காரணியை மத்திய அரசு விரைவில் உயர்த்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி ஏற்படுத்திய தாக்கம் : HistoryTv 18-ல் வெளியாகும் சிறப்பு ஆவணப்படம்..

ஃபிட்மென்ட் காரணி உயர்த்தப்பட்ட பிறகு, அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.18,000 லிருந்து ரூ.26,000 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

டிஏ உயர்வு

இதனிடையே கடைசியாக மார்ச் மாதம் அகவிலைப்படி 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது, இது ஜனவரி 1, 2023 முதல் நடைமுறைக்கு வந்தது. 4 சதவீத உயர்வுக்குப் பிறகு, மத்திய அரசு ஊழியர்களின் டிஏ 42 சதவீதமாக அதிகரித்தது. இப்போது, அரசாங்கம் இந்த முறையும் 4 சதவிகிதம் DA உயர்த்தினால், அறிக்கைகளின்படி, DA 46 சதவிகிதமாக உயரும்.

இதே போல் மத்திய அரசு ஊழியர்களின் பொதுவான ஃபிட்மெண்ட் காரணி தற்போது 2.57 சதவீதமாக உள்ளது. இந்த சூழலில் ஃபிட்மென்ட் காரணியை 3.68 ஆக உயர்த்த வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊழியர்களின் கோரிக்கையை அரசு ஏற்கும் பட்சத்தில், அரசு ஊழியர்களின் ஊதியம் குறைந்தபட்ச ஊதியம் தற்போது ரூ.18,000லிருந்து ரூ.26,000 ஆக உயரும். அதாவது கிட்டத்தட்ட ரூ.8,000 அளவுக்கு அரசு ஊழியர்களின் சம்பளம் உயரும். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க : கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் தலைமை ஆலோசகராக சுனில் கனுகோலு நியமனம்.. யார் இவர்?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios