கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளைத் தாக்கிய 19 பேருக்கு நிபந்தனை ஜாமீன்
கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய 19 பேருக்கும் கரூர் நீதிமன்றம் உத்தரவு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியுள்ளது.
கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய 19 பேருக்கும் கரூர் நீதிமன்றம் உத்தரவு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை வருமான வரித்துறை சோதனையில் நடத்தச் சென்றனர். கரூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிற்கு வந்த வருமானவரித்துறை அதிகாரிகளை திமுகவினர் முற்றுகையிட்டனர்.
Arvind Kejriwal meets MK Stalin: டெல்லி அவசரச் சட்டத்தை கடுமையாக எதிர்ப்போம்! மு.க. ஸ்டாலின் உறுதி!!
அவர்கள் அதிகாரிகளின் காரை தடுத்து நிறுத்தி, கார் கண்ணாடியை உடைத்ததுடன், அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. திமுக தொண்டர் ஒருவரையும் வருமானவரித்துறை அதிகாரிகள் தாக்கினார்கள் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக கரூர் நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் கரூர் மாநகராட்சி கவுன்சிலர் உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இன்று கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் கைதான 19 பேருக்கும் கரூர் மாவட்ட் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுருக்கிறது.
இந்த வருமானவரித்துறை சோதனையைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து அகற்ற வேண்டும் என பாஜகவின் தமிழகத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார். அதிமுக உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சிகளும் செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவியைப் பறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறியுள்ளன.
இந்நிலையில், சிங்கப்பூர், ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய முதல்வர் மு.க. ஸ்டாலின் செந்தில் பாலாஜி தொடர்பான வருமானவரித்துறை சோதனை குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, "பா.ஜ.க. ஆட்சியை பொறுத்தவரைக்கும் வருமான வரித்துறை, சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகியவற்றை பயன்படுத்தி பழி வாங்குவது, அச்சுறுத்துவது எல்லாம் பல மாநிலங்களில் நடந்து கொண்டிருக்கிறது. இது இங்கே தொடங்கி இருக்கிறது. இது உங்களுக்கே தெரியும். இதை பற்றி நான் உங்களுக்கு விளக்கமாக சொல்ல வேண்டியதில்லை" என்றார்.