Asianet News TamilAsianet News Tamil

வேகமாக பரவும் HMPV வைரஸ்.. அடுத்த ஆபத்தா? என்னென்ன அறிகுறிகள்.. நோயை எப்படி தடுப்பது?

அமெரிக்காவில் பரவி வரும் HMPV வைரஸ் காரணமாக நோயாளிகளிடையே காய்ச்சல் மற்றும் நுரையீரல் தொற்று ஏற்படுகிறது. 

Fastspreading HMPV virus.. dangerous? What are the symptoms.. How to prevent the disease?
Author
First Published Jun 1, 2023, 4:32 PM IST

கடந்த குளிர்காலத்தில், RSV மற்றும் கொரோனா போன்ற சுவாச வைரஸ்கள் வேகமாக பரவி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தின. ஆனால் இந்த கோடையில் அமெரிக்காவில் பரவி வரும் வைரஸ் காரணமாக நோயாளிகளிடையே காய்ச்சல் மற்றும் நுரையீரல் தொற்று ஏற்படுகிறது. மனித மெட்டாப்நியூமோவைரஸ் அல்லது HMPV என்ற வைரஸ் தான் இந்த பாதிப்புக்கு காரணம்.

இந்த HMPV  பாதிப்பு எண்ணிக்கை இந்த வசந்த காலத்தில் அதிகரித்துள்ளதாக அமெரிக்க நோய் தடுப்பு மையம் எச்சரித்துள்ளது. மார்ச் மாதத்தில், பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளில் சுமார் 11% HMPV க்கு நேர்மறையாக இருந்தது. மேலும் குழந்தைகளில் சுவாச நோய்த்தொற்றுகளுக்கு இந்த வைரஸ் இரண்டாவது பொதுவான காரணமாகும்.

HMPV வைரஸ் பற்றிய விவரம்

மனித மெட்டாப்நியூமோவைரஸ் வயது வித்தியாசமின்றி, குறிப்பாக சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு சுவாச நோய்களை ஏற்படுத்தும். HMPV அறிகுறிகளில் இருமல், காய்ச்சல், நாசி நெரிசல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை அடங்கும்.

இதையும் படிங்க : இனி ஒவ்வொரு தனி சிகரெட்டிலும் எச்சரிக்கை செய்தி.. புதிய விதியை கொண்டு வந்த உலகின் முதல் நாடு இதுதான்

தற்போது, வைரஸ் காரணமாக இளம் குழந்தைகள் மற்றும் வயதானாவர்கள் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். மார்ச் மாதத்தில் இந்த வைரஸ் பரவல் உச்சத்தில் இருந்த போது, சோதனை செய்யப்பட்ட மாதிரிகளில் சுமார் 11% HMPV க்கு நேர்மறையாக இருந்தது, இது சராசரியான, தொற்றுநோய்க்கு முந்தைய பருவகால உச்சநிலையான 7% சோதனை நேர்மறையை விட சுமார் 36% அதிகமாகும்.

என்ன பாதிப்பு?

இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுக்குழாய் அழற்சி அல்லது நிமோனியா கூட ஏற்படலாம். தொற்று முன்னேறலாம் மற்றும் அறிகுறிகள் மேல் மற்றும் கீழ் சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் மற்ற வைரஸ்களை போலவே இருக்கும். இந்த வைரஸ் பாதிப்பு 3 நாட்கள் – 6 நாட்கள் வரை இருக்கும். மேலும் நோயின் சராசரி காலம் தீவிரத்தைப் பொறுத்து மாறுபடும் ஆனால் வைரஸ்களால் ஏற்படும் பிற சுவாச நோய்த்தொற்றுகளைப் போலவே இருக்கும் என்று நோய் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

எப்படி பரவுகிறது?

HMPV வைரஸ்  இருமல், தும்மல், தொடுதல் அல்லது கைகுலுக்குதல் மற்றும் வைரஸ்கள் உள்ள பொருள்கள் அல்லது பரப்புகளைத் தொடுதல் போன்ற நெருங்கிய தனிப்பட்ட தொடர்பு மூலம் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவ வாய்ப்புள்ளது.

என்ன சிகிச்சை?

கொரோனா அல்லது காய்ச்சலை போலல்லாமல், HMPV க்கு சிகிச்சையளிக்க குறிப்பிட்ட வைரஸ் தடுப்பு சிகிச்சை எதுவும் இல்லை. HMPV ஐத் தடுக்க தடுப்பூசி இல்லை. மாறாக, தீவிர நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு அவர்களின் அறிகுறிகளுக்கு ஏற்ற வகையில் மருத்துவர்கள் சிகிச்சையளிக்க முடியும்.

எப்படி தடுப்பது?

வைரஸுக்கு எதிரான முன்னெச்சரிக்கைகள் மற்ற வைரஸ் நோய்களான கைகளை கழுவுதல், கண்கள், மூக்கு அல்லது வாயை அடிக்கடி தொடுவதைத் தவிர்ப்பது மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்ப்பது போன்றது.

நியூயார்க்கில் நான்கு குளிர்காலங்களில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், சுவாச தொற்று வைரஸ் மற்றும் காய்ச்சல் போன்ற மருத்துவமனைகளில் வயதான நோயாளிகளுக்கு HMPV வைரஸ் பொதுவானது என்று கண்டறியப்பட்டது. வயதானவர்களுக்கு ஏற்படும் நிமோனியாவின் அபாயகரமான நிகழ்வுகளுக்கும் இது காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : உலகின் பெரும் பணக்காரர் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த எலான் மஸ்க்! இதுதான் முக்கிய காரணம்..

Follow Us:
Download App:
  • android
  • ios