உலகின் பெரும் பணக்காரர் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த எலான் மஸ்க்! இதுதான் முக்கிய காரணம்..

எலான் மஸ்க் மற்றும் 74 வயதான அர்னால்ட் ஆகியோர் உலகின் 500 பணக்காரர்கள் பட்டியலில் இந்த ஆண்டு முதலிடத்தை பிடித்துள்ளனர்

Elon musk is the world richest person once again. this is the main reason

ப்ளூம்பெர்க் நிறுவனம், நியூயார்க்கில் ஒவ்வொரு வர்த்தக நாளின் முடிவிலும் உலகின் 500 பணக்காரர்களின் சொத்து புள்ளிவிவரங்களை புதுப்பித்து வருகிறது. இந்த தரவுகளின் அடிப்படையில் ப்ளூம்பெர்க் நிறுவனம் உலக பெரும்பணக்காரர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு அந்நிறுவனம் வெளியிட்ட பெரும் பணக்காரர் பட்டியலில் மீண்டும் எலான் மஸ்க் முதலிடம் பிடித்துள்ளார்.

பாரிஸ் வர்த்தகத்தில் ஆடம்பர அதிபரும், உலக பெரும்பணக்காரர்களில் ஒருவருமான பெர்னார்ட் அர்னால்ட்டின் LVMH நிறுவன பங்குகள் 2.6 சதவீதம் சரிந்ததை அடுத்து, எலான் மஸ்க் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். எலான் மஸ்க் மற்றும் 74 வயதான அர்னால்ட் ஆகியோர் உலகின் 500 பணக்காரர்கள் பட்டியலில் இந்த ஆண்டு முதலிடத்தை பிடித்துள்ளனர் என்று ப்ளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : ரஷ்யாவுக்குப் போட்டியாக பூமியில் 32,808 அடிக்கு ஆழ்துளை போடும் சீனா! எதுக்குன்னு தெரியுமா?

அர்னால்ட் நிறுவிய எல்விஎம்ஹெச், லூயிஸ் உய்ட்டன், ஃபெண்டி மற்றும் ஹென்னெஸி உள்ளிட்ட பிராண்டுகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. எனினும், சர்வதேச அளவிலான பொருளாதார வளர்ச்சி குறைவதற்கான அறிகுறிகளுக்கு மத்தியில் ஆடம்பரத் துறையின் மிதப்பு மீதான நம்பிக்கை மங்கத் தொடங்குகிறது என்று ப்ளூம்பெர்க் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஏப்ரல் முதல் எல்விஎம்ஹெச் பங்குகள் சுமார் 10% சரிந்து ஒரே நாளில் தனது நிகர மதிப்பில் இருந்து $11 பில்லியனை அர்னால்ட் இழந்தார். இதுவே எலான் மஸ்க் மீண்டும் முதலிடம் பிடிக்க வழிவகுத்துள்ளது.

இதையும் படிங்க : மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி ஏற்படுத்திய தாக்கம் : HistoryTv 18-ல் வெளியாகும் சிறப்பு ஆவணப்படம்..

இதற்கிடையில், எலான் மஸ்க் இந்த ஆண்டு $55.3 பில்லியனுக்கும் அதிகமாக சம்பாதித்துள்ளார், பெரும்பாலும் தனது டெஸ்லா நிறுவனத்தில் இருந்தே எலான் மஸ்க் அதிக பணம் ஈட்டியுள்ளார். ஆஸ்டினை தளமாகக் கொண்ட வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லா நிறுவனம், எலான் மஸ்கின் மொத்த செல்வத்தில் 71% உள்ளது. எலான் மஸ்கின் சொத்து மதிப்பு இப்போது சுமார் $192.3 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது, அதே சமயம் அர்னால்ட்டின் சொத்து மதிப்பு $186.6 பில்லியன் ஆகும்.

ஆட்டோமொபைல் துறை மட்டுமின்றி மற்ற துறைகளிலும் எலான் மஸ்க் அதிகளவில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், டெஸ்லா மற்றும் ட்விட்டர் 2 நிறுவனங்களுக்கும் தலைமை தாங்குவதைத் தவிர, சமீபத்தில் அமெரிக்க மாநிலமான நெவாடாவில் X.AI செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை நிறுவுவதற்கான ஆவணங்களை எலான் மஸ்க் தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இனி ஒவ்வொரு தனி சிகரெட்டிலும் எச்சரிக்கை செய்தி.. புதிய விதியை கொண்டு வந்த உலகின் முதல் நாடு இதுதான்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios